அணி என்றால் என்ன?அவற்றின் வகைகள்- தமிழ் இலக்கணம்

அணி என்றால் என்ன?அவற்றின் வகைகள்- தமிழ் இலக்கணம்

அணி என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். அணிகள் பல வகைப்படும். அவற்றின் வகைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1) உவமை அணி :

                  மயில்போல ஆடினாள்

                  மீன் போன்ற கண் 

இது தொடர்களை படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பீட்டு உள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை உவமை அல்லது உவமானம் என்பர்.

இதே பல உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில் வந்துள்ள “போல’, போன்ற’ என்பவை உவம உருபுகள் ஆகும்.

எடுத்துக்காட்டு:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

அணி விளக்கம்:

பூமி தன்னை தோண்டுபவரை பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.

இதில் பூமி தன்னை தோன்றுபவரே பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை. நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் உவமேயம். போல என்பது உவமை உருபு.

ஒரு பாடலில் உண்மையும் நியாயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். 

  • போல
  • புரைய
  • அன்ன
  • இன்ன
  • அற்று
  • மான
  • கடுப்ப
  • ஒப்ப
  • உறழ
போன்றவை உவம உருபுகள் ஆகும்.

2) எடுத்துக்காட்டு உவமையணி:

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எடுத்துக்காட்டு உவமையணி என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
தொட்டனைத்து ஊரும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு.
மணற்கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும். மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும். இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை
மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம். இடையில் அதுபோல என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி எனப்படும்.

3) இல்பொருள் உவமையணி :


உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமையணி என அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

மாலை வெயிலில் மழை தூரல் மழை பொழிந்தது போல் தோன்றியது.

காளை கொம்பு முளைத்த குதிரை போல பாய்ந்து வந்தது.

இத்தொடர்களில் “பொன் மழை பொழிந்தது போல்”,”கொம்பு முளைத்த குதிரை போல “என்னும் உவமைகள் வந்துள்ளன.

உலகின் பொன் மழை பொழிவது இல்லை. கொம்பு முளைத்த குதிரையும் இல்லை. எனவே இது போல உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என அழைக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top