நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் ஆனந்த நாராயணன் இயக்கத்தில் இப்படம் தயாராகி வருகிறது. நடிகர் சந்தானம் தொடர்ந்து புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்பது பாராட்டுக்குரியது.
மேலும் அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் தான் ஆரம்பத்தில் பயணித்த லொள்ளு சபா காமெடி நடிகர்களை நடிக்க வைத்து அவர்களுக்கு திறமைகளுக்கு சரியான அங்கீகாரத்தையும் மற்றும் அவர்களுக்கு பட வாய்ப்பையும் அளித்து வருகிறார்.
நேற்று பிப்ரவரி 28, 2024 காலை 10 மணிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சூரி இருவரும் படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸ் செய்தார்கள்.
அதில் சந்தானத்தின் படத்திற்கு எங்க நான்தான் கிங் என்கிற டைட்டில் வைத்துள்ளார்கள். சந்தானத்தின் புதிய பட அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த். பேசிய வசனம் ‘இங்க நான் தான் கிங்கு:நான் வச்சதுதான் ரூல்ஸ்’ என்ற வசனத்திலிருந்து இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
டி இமான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
சந்தானத்தின் இந்த திரைப்படமானது இந்த வருடம் மே மாதம் ரிலீஸ் ஆகப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார்கள்.