உடன்பாடு மற்றும் எதிர்மறை என்றால் என்ன?

 உடன்பாடு – எதிர்மறை

செயல் நடைபெறுவதைக் கூறுவது உடன்பாடு. நடைபெறாமையைக் கூறுவது எதிர்மறை

மாற்றும் விதம்:

உடன்பாட்டு வினை வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக மாற்ற உடன்பாட்டு வாக்கிய வினைப் பகுதியோடு இல்லாமல் இல்லை’ என்னும் குறிப்பு வினைமுற்றைச் சேர்த்தால் எதிர்மறை வாக்கியமாகும்.

 எ.கா : அண்ணல் காந்தியடிகள் உலகப்புகழ் பெற்றவர் – உடன்பாடு அண்ணல் காந்தியடிகள் உலகப்புகழ் பெறாமலில்லை – எதிர்மறை. 

உடன்பாடு மற்றும் எதிர்மறை என்றால் என்ன?

I) உடன்பாட்டு வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக்குக:

1.நீ என்னைவிடச் செல்வாக்குள்ளவனாய் இருக்கிறாய்.

( யான் என்னைவிட செல்வாக்குள்ளவனாய் இல்லை. )

2. இங்குள்ளவை நெய்யினால் செய்யப்பட்டவை.

( இங்குள்ளவை நெய்யினால் செய்யப்பட்டவையல்ல. )

3. நீ சொல்வது பொய்.

 (நீ சொல்வது உண்மையன்று.)

4. வளவன் பாடம் படித்தான்.

(வளவன் பாடம் படித்திலன்.)

5. வள்ளி பூமாலை தொடுத்தாள் .

(வள்ளி பூமாலை தொடுத்திலள்.)

6. அண்ணல் காந்தியை அனைவரும் அறிவர்.

 (அண்ணல் காந்தியை அறியாதவர் எவரும் இலர்.)

7. வளவன் பரிசு தந்தான்.

 (வளவன் பரிசு தந்திலன்.)

8. ஊக்கமுடையோர் உயர்வர். 

(ஊக்கமிலார் உயர்வடையார்.)

9. வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன.

( வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தில)

10. புள்ளிமான்கள் துள்ளி விளையாடின.

 (புள்ளிமான்கள் துள்ளி விளையாடில.)

11. இந்த வகுப்பில் மாணவர்கள் நன்கு படிக்கின்றனர். 

(இந்த வகுப்பில் மாணவர்கள் நன்கு படிக்கவில்லை.)

12. பசு புல்லை மேய்ந்தது.

(பசு புல்லை மேய்ந்திலது.)

13. கந்தன் பள்ளிக்கு வந்தான்.

 (கந்தன் பள்ளிக்கு வந்திலன்.)

14. இராமன் வேட்டைக்குச் சென்றான்.

 (இராமன் வேட்டைக்குச் சென்றிலன்.)

15. அவன் தேர்வில் வெற்றி பெற்றான்.

(அவன் தேர்வில் வெற்றி பெற்றிலன்.)

16. சிறுவன் ஓவியம் வரைந்தான்.

(சிறுவன் ஓவியம் வரைந்திலன்.)

17. என் தந்தையார் சென்னைக்குச் சென்றார் (என் தந்தையார் சென்னைக்குச் சென்றிலர்.)

18. நான் படித்தேன்.

(நான் படிக்கவில்லை (அ) நான் படித்திலன்.)

II) எதிர்மறையை உடன்பாட்டு வாக்கியமாக்குக :

1) அண்ணல் காந்தியை அறியாதவர் எவரும் இலர்.

(அண்ணல் காந்தியை அனைவரும் அறிவர்.)

2) மாறன் மிதிவண்டி பெற்றான். 

(மாறன் மிதிவண்டி பெற்றிலன்.)

3) நேற்று மழை பெய்யவில்லை.

(நேற்று மழை பெய்தது.)

4) கந்தன் பள்ளிக்கு வந்திலன்.

(கந்தன் பள்ளிக்கு வந்தான்.)

5) வாய்மொழி இலக்கியத்தை மக்கள் மறந்திலர்.

(வாய்மொழி இலக்கியத்தை மக்கள் மறந்தனர்.)

6) இந்த வகுப்பில் மாணவர்கள் நன்கு படிக்கவில்லை.

(இந்த வகுப்பில் மாணவர்கள் நன்கு படிக்கின்றனர்.)

7) பசு புல்லை மேய்ந்திலது. 

(பசு புல்லை மேய்ந்தது.)

8) போட்டியில் எல்லோரும் வெற்றி பெற முடியாது.

 (போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும்.)

9) தமிழர் உழாமல் உண்டு வாழ்தல் விரும்பார்

(தமிழர் உழுதுண்டு வாழ விரும்பினர்.)

10) திலகர் பெருமான் இன்றேல் தேசியப் போராட்டம் வலுக்காது.

(திலகர் பெருமானால் தேசியப் போராட்டம் வலுத்தது.)

11) வழுதி என்றும் வாய்ச்சொல் மாறான்.

 (வழுதி என்றும் வாய்ச்சொல் மாறுவான்.)

12) கண்ணன் அணையை அடைததியன்

(கண்ணன் அணையை அடைத்தான்.)

 13) நான் நேற்று வந்திலேன்.

(நான் நேற்று வந்தேன்.)

14) நீ என் உறங்கவில்லை?

(நீ ஏன் உறங்கினாய்?)

 15) குமண வள்ளல் தமிழ்ப்புலவர்களுக்குப் பரிசுகளை தரவில்லை. 

(குமண வள்ளல் தமிழ்ப்புலவர்களுக்குப் பரிசுகளை ஈந்தான்.)

III) பொருள் மாறாமல் எதிர்மறையாக மாற்றுக:

1) பாரி எளியவர்க்கு இரங்குவான்.

(பாரி எளியவர்க்கு இரங்காமல் இரான்.)

2) குடியாட்சியில் மக்களுக்குப் பொறுப்பு உள்ளது. 

(குடியாட்சியில் மக்களுக்குப் பொறுப்பு இல்லாமல் இல்லை.)

3) ஒருவரிடம் குணம் காணும்போது குணம் மட்டுமே புலப்படுகிறது.

 (ஒருவரிடம் குணம் காணும் போது குற்றம் புலப்படுவதில்லை.)

4) இந்த வகுப்பில் மாணவர் சிலரே நன்கு படிக்கின்றனர். 

இந்த வகுப்பில் மாணவர் பலர் நன்கு (படிக்கவில்லை.)

5 ஊக்கமுடையோர் உயர்வார்.

 (ஊக்கயிலார் உயர்வடையார்.)

6. திருக்குறளை அனைத்து நாட்டினரும் போற்றுகின்றனர்.

(திருக்குறளை அனைத்து நாட்டினரும் போற்றாமல் இலர்.)

7) எம் பள்ளி மாணவர் அனைவரும் தேறினர்.

 (எம் பள்ளி மாணவர் அனைவரும் தேறாமல் இரார்.)

8) திருவள்ளுவரை எல்லோரும் போற்றுவர்.

( திருவள்ளுவரைப் போற்றாதவர் யாருமிலர்.)

9) தொல்காப்பியம் அகத்தியத்திற்கு முந்தியதன்று.

(தொல்காப்பயம் அகத்தியத்திற்கு பிந்தியது.)

10) இன்பமும் துன்பமும் எல்லா உயிர்களுக்கும் இல்லாமல் இல்லை.

( இன்பமும் துன்பமும் எல்லா உயிர்களுக்கும் உண்டு.)

 11) மனித ஆற்றலுக்கு மேலான ஆற்றல் மாநிலத்தில் இல்லை.

(மாநிலத்தில் மனித ஆற்றலே மேலான ஆற்றல்.)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top