சார்பு ஆய்வாளர்கள் தேர்வு எப்பொழுது?
தமிழக காவல்துறை சீருடை பணியாளர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கு 444 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது மார்ச் 8 முதல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் அனைத்து மாணவர்களும் சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பு ஆய்வாளர் பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
Tnusrb இணையதளம் மூலமாக தான் அனைத்து காவல்துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கும் டிஎன்யுஎஸ்ஆர்பி இணையதளம் மூலமாகவே அனைவரும் மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்க என்கிற பட்டனை கிளிக் செய்து டிஎன்யுஎஸ்ஆர்பி இணையதளத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பியுங்கள்..
சார்பு ஆய்வாளர் தேர்வு எந்த மொழியில் நடைபெறும்?
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி முதன்மையாக கருதப்படும் என அறிவித்திருந்தார்.
முழுக்க முழுக்க தமிழ் மொழியில் அனைத்து போட்டி தேர்வுகளும் நடத்தப்படும் என தமிழக அரசு ஆணை வெளியிடு இருந்தது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிமுறைப்படி முதன் முதலில் தமிழ் மொழியில் தகுதி தேர்வு நடத்தப்படும் என சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.