சுந்தரர் பாடிய பாடல்களாக அறியப்படுவன மொத்தம் 38,000 என்பர் இப்போது நமக்குக் கிடைத்திருப்பன 100 பதிகங்கள் மட்டுமே. அதாவது, 1026 பாடல்களே கிடைத்துள்ளன. 18 பண்களில் இசையோடு பாடப்பட்ட பாடல்கள் அவை. ‘ஏழிசையாய் இசைப் பயனாய்’ இறைவனைக் கண்டவர் இவர்.
‘வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்‘ போன்ற உயர்ந்த வாழ்வியல் சுருந்துகள் இவரது பாடல்களில் காணப்படுகின்றன ‘நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்‘ என்று திருஞானசம்பந்தரையும் அவரோடு வாழ்ந்த அப்பரையும் போற்றிப பாடியுள்ள பாடல்களும் இவரது தேவாரப் பாடல்களில் உண்டு. இவரது தேவாரம் ஏழாவது திருமுறையாக வைத்துப் போற்றப்பட்டுள்ளது.
சுந்தரர் – அறிமுகம்
தொண்டை நாட்டில் திருநாவலூர் என்று ஓர் ஊர் உண்டு. அந்தத் திரு நாவலூரில் அந்தணர் குலத்தில் சுந்தார் பிறந்தார். இவர் தந்தையார் சடையனார்; தாயார் இசைஞானியார் ஆவர்.
குழந்தைப் பருவத்தில் சுந்தரரின் அழகைக் கண்ட நரசிங்க முனையரையர் என்ற மன்னர் சுந்தரரைத் தன் குழந்தை போலவே வளர்த்து வந்தார் திருவெண்ணெய் நல்லூரில் சுந்தாருக்குத் திருமணம் நிகழ இருந்தது.
மணமேடையில் சிவபெருமான் தோன்றி, சுந்தார் தமக்கு வழிவழி அடிமை என்று கூறி ஊரவையினர் முன் அடிமை ஓலை காட்டி நிறுவினார்.
இறைவன் சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட நிகழ்ச்சி அது. முன்னர் கைலாயத்தில் சிவபெருமானோடு ஆலாலசுந்தரராக இருந்த மையாலும் அழகான தோற்றமுள்ளவராக இருந்ததாலும் ‘சுந்தார்’ எனப்பட்டார்.
இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட தொண்டர் என்பதனால் ‘வன் தொண்டர்” என அழைக்கப்பட்டார்.
சிவபெருமான் சுந்தரருக்காகப் பரவையாரிடம் தூது சென்று அவரது இல்வாழ்க்கைக்குத் தோழமையோடு உதவியதாலும், இறைவனை ‘மதியுடையவர் செய்கை செய்யீர்! என நட்புணர்வுடன் கண்டிக்கும். உரிமையுடையவர் ஆதலினாலும் ‘தம்பிரான் தோழர்’ எனப்பட்டார்.
சுந்தரர் திருவாகுயிய கணிகையர்குலப் மன்னரைப் பாடுகிறார். இதனால் வேண்டாம். புலவர்களே! எம் புண்ணியனைப் பாடுங்கள்’ எனப் புலவர்களை வேண்டுகிறார்.
பென்னான பரவையாரையும் திருவொற்றியூரில் வேளாளர்குலப் பெண்ளான சங்கிலி நாச்சியார் என்பவரையும் மணந்து கொண்டார். பெயர்களாகும். திருநாவலூரர், ஆரூரர் என்பனவும் இவரது பிற “கொடுக்கிலாதாளைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை’ என்று சுந்தரர்.
சைவ நாயன்மார்கள் 63 பேர்களை ஆளுக்கோர் அடி என்ற கணக்கில் போற்றி திருத்தொண்டத்தொகை என்ற நூலைச் சுந்தரர் இவற்றினார் இதளை அடியொற்றி இவருக்குப் பின்வந்த நம்பியாண்டார்தம்பி 63 நாயன்மார்கள் பற்றி ஆளுக்கொரு பாட்டு என்ற கணக்கில் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலைப் பாடினார்.
அதை வைத்தே பின்வந்த சேக்கிழார் 63 நாயன்மார்களின் கதையை ஆளுக்கொரு புராணம் என்ற கணக்கில் நிருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தை இயற்றினார்.
பெரியபுராணம் தோன்ற வித்தாக இருந்தவர் சுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரியபுராணத்தை ஒரு காப்பியம் என்று கருதினால், அதன் காப்பியத் தலைவர் சுந்தார் என்பர் ஆராய்ச்சியாளர்.
சுந்தரர் காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டு இவரை 9ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தவர் என்றும் சிலர் கூறுவர் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரையும் இணைத்து ‘மூவர்’, ‘தேவார மூவர்’, ‘சமயக்குரவர் மூவர்’, ‘மூவர் முதலிகள்’ என்று அழைப்பது தமிழ்ப் புலவர் வழக்கமாக உள்ளது. இவர் தமது 81ஆவது அகவையில் ஆடிச்சுவாதி நாளில் இறைவனோடு கலந்தார்.
சுந்தரர் பாடல் -1
திருவெண்ணெய் நல்லூரில் மணப்பந்தலில் சுந்தரரைத் தம் அடிமை என்று ஒரு முதியவர் வேடத்தில் வந்த இறைவன் வாதிட்டுத் தடுத்தாட் கொண்டபோது, தம்மிடம் வழக்காடிய பெரியவர் இறைவனே என்பதை உணர்ந்தார் சுந்தரர். உடனே அவர் பின்வரும் பாடலைப் பாடினார்.
பித்தா! பிறைகுடி! பெருமானே! அருளாளா!எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை, வைத்தாய்பெண்ணைத் தென்பால், வெண்ணெய்நல் லூரருள்துறையுள்- அந்தா! உனக்காளாய் இளி.அல்லேன் எனலாமே!
பாடலின் விளக்கம்:
பித்தனே! இளம்பிறையைத் தலைமுடியில் சூடியவனே! பெருமைக் குரியவனே! அருள் அளிப்பவனே! செருக்கினால் உன்னை மறவாமல் எந்த நேரத்திலும் மனத்துள் உள்ளை நினைத்தவாறு உள்ளேன்.
நீ பெண்ணுக்கு மரியாதை தருபவன். உன் இடப்பக்கத்தே உமையம்மையை வைத்துள்ளாய். திருவெண்ணெய் நல்லூர் என்னும் அருள்நுறையாம் கோவிலில் எழுந்தருளியுள்ளாய் என் அப்பனே! உனக்கு அடிமையான ஆளாய் இனி எப்போதும் இருப்பேன்! இந்து உறுதி!
அருஞ்சொற்பொருள் விளக்கம்
பித்தன் – வைத்தியக்காரன். சுடுகாடடில் அலைதலும் சாம்பலை உடல் முழுதும் பூசுதலும் முதலிய சிவனின் செயல்கள் ஒரு பைத்தியக்காரன் செயல்போல் தோன்றுவதால் பித்தன் என்றார்; எத்தால் செருக்கால்; வெண்ணெய் நல்லூரகுள் துறை-திருவெண்ணெய் நல்லூர் என்னும் ஊரிலுள்ள சிவன் கோயில், அத்தா-அப்பா, தலைவா, ஆளாய்-அடிமையாய், இனி அல்லேன் எனலாமே அடிமையாய் இனி இருக்கமாட்டேன் என்று சொல்லமுடியுமா? இளி என்றும் உனக்கு அடிமையாய் இருப்பேன் என்பது உடபொருள்.
குறிப்புரை
தம்பிரான் தோழர் என்பதனால் இறைவனைப் ‘பித்தன்’ என்று கேலி செய்யும் உரிமை சுந்தரருக்கு இருப்பதை இப்பாடல் காட்டுகின்றது; ‘அந்தா’ என்று இறைவனை அழைக்கிறார் சுந்தரர்.
அத்தா என்றால் அப்பா, தலைவா என்பது பொருளாகும். சுந்தரர் சிவனைத் தம் தந்தையாக, தலைவனாகப் பாவித்துப் பாசத்துடன் அழைப்பதையும் இப்பாடலில் பார்க்கிறோம்.
அந்த அத்தன் என்ற சொல்தான் பிற்காலத்தில் தமிழ்ப் பெண்கள் தம் கணவனை ‘அத்தான்’ என்று அழைக்கும் சொல்லாக மாறியது. தமிழ்நாட்டு இசுலாமியர்கள் தங்கள் தந்தையை ‘அத்தா’ என்று அழைக்கும் சொல் வழக்கமும் சுந்தரர் ‘அத்தா’ என்று அழைக்கும் இப்பாடல் வழி ஏற்பட்ட வழக்கமே எனலாம்.
சுந்தரர் பாடல் 2 :
மழபாடி என்னும் சிதைதலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைக் கண்ட சுந்தரர். சிவபெருமானின் பேரெழிலையும் சிறப்புகளையும் புகழ்த்து ஒரு தேவாரப் பாடலித் பாடியுள்ளார்
பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து மின்னாச் செஞ்சடைமேல் மிளிக்கொன்றை அணித்தவனே!-மன்னே! மாமணியே! மழபாடியுன் மாணிக்கமே!அன்ளே! உன்னையல்லால் இனியாரை நிளைக்கேனே?
பாடலின் விளக்கம் :
பொள்ளின் நிறம் போன்ற சிவந்த உடம்பினை உடையவனே! புலியின் தோலை இடுப்பிலே ஆடையாக உடுத்தியும், மின்னல் அடிப்பது போன்ற ஒளிளீகம் சிவந்த சடைமுடி மேல் பெருமைமிக்க கொன்றை மலர்களைச் சூடியும் அணிசெய்தவனே! நிலைபேறு உள்ளவனே! மாபெரும் தவமணியே! மழபாடியுள் எழுந்த மாணிக்கமே! உளக்கு நீயே ஒப்பானவனே! உன்னை விட்டுவிட்டு இனி யாரை நான் நினைக்கப்போகின்றேன்?
அருஞ்சொற்பொருள் பொருள் விளக்கம்
பொள், ஜர்-தங்கத்தைப போன்ற, மேனி-உடம்பு, அசை-இடுப்பு, அரைக் கசைத்து இடுப்பில் உடுத்தி, மின்ஆர்-மின்னலைப் போன்ற, மிளிர்-பெருமையான, ஒளிவீசக் கூடிய, கொன்றை-கொள்றைப்பூ சிவனுக்கு உரிய மலராகும்; மன்-நிலைபெற்றவன், அள்ளே-அத்தகையவனே, உளக்கு நீயே நிகரானவளே
குறிப்புரை:
இப்பாடலில் சிவனுடைய புறத்தோற்றம் வருணிக்கப்படுகின்றது. அவளது தங்கம் போன்ற மேளியின் நிறம், புலித்தோல் ஆடை, மின்னலை ஒத்த செஞ்சடை, அதன்மேல் மிளிரும் கொன்றை மலர் எனச் சிவபெருமானின் ஆடையும் அணி மணிகளும் வருணிக்கப்பட்டுள்ளன.
அதோடு சிவனுடைய தனித்த பண்புகளான நிலைபெற்ற தன்மை, மாணிக்கப் பண்பு, தனக்கு உவமை இல்லாத தனிப்பெரும் இறைப்பண்பு முதலியனவும் புகழப்பட்டுள்ளன.