அறிமுகம் :
கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடூவது மகிழ்ச்சியான அனுபவம். கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடூவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும். வாருங்கள்! தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம். காதாரக் கேட்கலாம். இசையோடு பாடலாம். கும்மி கொட்டி ஆடலாம்.
கும்மி பாடல் :
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும்: உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு பூண்டவறின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர் மெய்புகட்டகும்: அறமேன்மை கிட்டும்; இந்த மேதினி வாழ்வறழி காட்டிருக்கும்
–பெருஞ்சித்திரனார்
பாடலின் பொருள் :
இளம்பெண்களே! தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவிடும் வகையில் கைகளைக் கொட்டிக் கும்மியடிப்போம்.
பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.
பொய்யை அகற்றும் மொழி, தமிழ். அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி: அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி: உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி : உயர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி.