தமிழ் செழித்து வளர்ந்த விதம்
தமிழே! உமக்குத் தலைமைப் பேறு அளித்தால், உமக்கு ஒப்பாவர் ஒருவருமிலர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களும் வயலின் வரப்புகளாகவும், துறை, தாழிசை, விருத்தம் என்னும் பாவினங்கள் மடைகளாகவும் விளங்கின.
![]() |
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்களையும் நல்ல ஏர்களாகவும் கொண்டு சொல்லேர் உழவர் உழவு செய்ய, வைதருப்பம், கொடம், பாஞ்சாலம், மாகதம் ஆகிய செய்யுன் நன்னெறிகளே விதைகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன விளைபொருள்களாயின.
இதையும் படிக்க : சீறாப்புராணம் புலி வசனித்த படலம்
இப்பயிர்களிடையே வளரும் களைகளாகிய போலிப்புலவர்கள் கூட்டம் பெருகாமல் குட்டுவதற்கு அதிவீரராமபாண்டியனும், செவியை அறுப்பதற்கு வில்லிபுத்தானும் தலையை வெட்டுவதற்கு ஓட்டக்கூத்தனும் இருந்தமையால், தமிழே நீ கிளைத்துச் செழித்து வளர்ந்தாய்,
தமிழே ! பால், முந்திரி, வாழை, கரும்பு. இளநீர்போல் பல்வகையான சுவைகளையும் தருகின்றாய்.
தெளிந்த அமுதமாகவும், மேன்மையான விடுபேற்றை அளிக்கும் களியாகவும், அறிவினால் உண்ணப்படும் தேனாகவும் விளங்கும் தமிழே! உம்மிடத்து மகிழ்ந்து உரைக்கும் ஒரு விண்ணப்பம் உண்டு; கேட்பாயாக,