உலக இலக்கிய சமயம் சார்ந்த இலக்கியங்களை மிகுதியாகப் பெற்ற மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று.
அந்த அளவிற்குப் சைவம், வைனவம் பௌத்தம், சமணம், கிறித்தவர், இஸ்லாம் ஆகிய பல்வேறு சமயங்கள் சார்ந்த இலக்கியங்கள் தமிழில் மிகுந்துள்ளன.
இவை தமிழ் மொழியின், தமிழர்களின் சமய ஒருமைப்பாட்டிற்கு தக்க சான்றுகளாக அமைத்துள்ளன. இதுலே தமிழ் மொழியின் தனிச் சிறப்புகளுள் ஒன்று என்று குறிப்பிடலாம்.
அவ்வகையில் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள நான்கு பிரிவுகளும் சைவம், வைணவும் கிறித்துவம், இஸ்லாம் ஆகிய நான்கு சமயங்களில் உள்ள இலக்கியங்கள் பற்றிச் சுருக்கமாக உங்களுக்கு விளங்கும்.
குறிப்பாக, ‘ பன்னிரு திருமுறைகள் ‘ என்னும் முதல் பிரிவில் சைவநெறி புலவர்கள் சிவனைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகள்’ பற்றியும், அவற்றுள் மூவர் பாடிய தேவாரம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருமூலரின் திருமந்திரம், காரைக்காலிலமையார் பாடிய அற்புதத்திருவந்தாதி ஆகியவற்றுள் 12 பாடல்களின் கருத்துக்கள் கருக்கமாக விளக்கப்படுகின்றன.
இதையும் படிக்க : சட்டத்தின் வகைகள் யாவை? விளக்குக.
திவ்வியப் பிரபந்தம் என்னும் இரண்டாம் பிரிவில் லவணவநெறிப் புலவர்கள் திருமாலைப் போற்றிய பாடிய பாடல்களின் தொகுப்பான ‘நாலாயிரத் திவ்லியப் பிரபந்தம் பற்றியும், இவற்றுள் 12 ஆழ்வார்களின் பாடல்களில் ஆளுக்கொரு பாடல் என 12 பாடல்களின் கருத்துக்கள் மட்டும் சுருக்கமாக விளக்கப்படுகின்றன.
‘சீறாப்புராணம்” என்னும் மூன்றாவது பிரிவில் இசுலாமியக் காப்பியமான சிறாப்புராணம் பற்றியும், அதில் முதல் காண்டத்தில் இடம்பெற்ற கதீசா களவு கண்ட படலத்தில் உள்ள 12 பாடல்களின் சுருத்துக்கள் மட்டும் சுருக்கமாக விளக்கப் படுகின்றன.
இதையும் படிக்க : சங்க இலக்கிய வரலாறு, முச்சங்க தோற்றம்.
‘தேம்பாவணி’ என்னும் நான்காவது பிரிவில் வீரமாமுனிவர் இயற்றிய கிறித்தவக் காப்பியமான தேம்பாவணி பற்றியும், அதில் இடம்பெற்றுள்ள ஒரு சிறு பகுதியான தேவகுமாரன் இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்த நிலையில், இடையர்குடி மக்கள் அவரைக் காணவந்த காட்சிப் படலத்தில் உள்ள 12 பாடல்களின் கருத்துக்களும் சுருக்கமாக விளக்கப்படுகின்றன.
அறிமுகம் :
தமிழ் மொழி பக்தியின் மொழி என்று சொல்லும் அளவிற்குத் தமிழில் சமனாம், பௌந்தம், சைவம், வைனாலும், இசுலாம். கிறித்தவம் என அளைத்துச் சமயங்களுக் ருமான இலக்கியங்கள் வீரவிக் காணப்படுகின்றன .
அவற்றுள் சைவ சமயம் தமிழ் மொழிக்கு அளித்த கொடை என்னபது சிறப்பான ஒன்றாகும் சைவ அடியார்களில் பாடல் தொகுப்பினைத்தான் பள்ளிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன.
இதையும் படிக்க : பாம்புகள் பற்றி உங்களுக்கு தெரியாத பல உண்மைகள்
சைவ சமய நெறியாளர்கள் சிவனின் பெருமைகளைச் சொல்லும் போது, வாழ்லியல் முறைகளையும் வலியுறுத்துவதைக் காணாலாம். இறையுணர்வில் தாம் துய்த்த உணர்ச்சிகளை அப்படியே பிறகும் துய்க்கும்படி உயிர்த்துடிப்பான சொற்களால் பாடல் பாடியுள்ளனர்.
அப்பாடல்கள் மனித மனமுள்ள யாரையும் சமயம் கடந்து உணர்ச்சி மேலிடக் கண்ணீரை வரவழைத்து தெகிழவைக்கும், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி நன்னெறிக்கு உய்த்துவிடும்.
‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’, ‘பால் நிளைந்து ஊட்டும் தாயினும் சிறந்தவன் இறைவன்.’ ‘அளப்பரியன் இறைவன்.’ ‘அன்பே சிவம்’, ‘ஒன்றே குலம், முருவனே ‘தேவன்” முதலிய உயரிய கருத்துகளை இவர்கள் பாடல்களில் காணலாம்.
இதையும் படிக்க : புதுமைப்பித்தன் வாழ்வும் வரலாறும்
சைவ சமய நெறி போற்றிய அடியார்களுள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அறுபத்து மூவர்களுள் கவிபாடும் திறன் மிக்கார் இருபத்து ஏழு நாயன்மார் ஆவர் சைவ சமயப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே பன்னிரு திருமுறைகள் ஆகும்.
திருமுறை களைத் தொகுத்தவன் இராசராச சோழன் ஆவான். இதனால் ‘திருமுறை கண்ட சோழன்” என்ற பட்டப்பெயர் அவனுக்கு உண்டு. 27 புலவர் பெருமக்கள் பாடிய பல்லாயிரம் பாடல்களைக் கொண்டது பள்னிரு திருமுறைகள்!
தமிழில் சமய இலக்கியங்கள் :
தமிழில் சங்க காலத்தில் சமயம் தொடர்பான இலக்கியம் இல்லை என்றே கூறலாம். அப்போது இருந்த இலக்கியங்கள் காதலைப் பற்றியும் வீரத்தைப் பற்றியுமே பெரும்பாலும் பாடியுள்ளன .
ஆனாலும் சங்க இலக்கியங்களாள திருமுருகாற்றுப் படை, பரிபாடல் ஆகிய இரண்டு நூல்களிலும் முருகள், திருமால் ஆகிய கடவுளர்கள். போற்றப்படுவதைக் காண்கிறோம். இவ்விரு நூல்களின் காலத்தைத் தமிழில் சமய இலக்கியம் தோன்றிய காலம் என்று சிலர் கூறுவார்கள்.
இதையும் படிக்க : திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது தமிழ் தொண்டு
திருமுருகாற்றுப்படை, பரிபாடல் இரண்டையும் அறிஞர்கள் சிலச் சங்க கால இலக்கியங்கள் இல்லை என்பர் அவை ஆறாம் நூற்றாண்டில் தோன்றியவை என்று கூறுவர். ஏனெனில், தமிழில் சைவம், வைணவம் தொடர்பான பக்தி இலக்கியங்கள் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகே தோன்றின என்பதே வரலாறு.
வேதங்களை எதிர்த்து உருவான இயக்கங்களான சமணமும் பௌத்தமும் இலக்கியங்களைத் தம் கருத்துகளைப் பரப்பும் கருவிகளாகப் பயன்படுத்தின. அதுவே தமிழில் சமய இலக்கியங்கள் தோன்றக் காரணமாயிற்று என்பர்.
சமய இலக்கியத் தோற்றம் :
தமிழ் இலக்கியப் பரப்பில் மணிமேகலையே முதலில் தோன்றிய முழுமையான சப்பு இலக்கியம் எனலாம். மணிமேகலைக்கு முன் வந்த சிலப்பதிகாரம் சமணம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் பற்றிய பொதுவான செய்திகளைத் தருகிறது.
அதனால் அதை ஒரு குறிப்பிட்ட சமயத்துக்குரிய இலக்கியமாகக் கருத முடியாது. புத்த சமயத் கருத்துகளை வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்த முதல் இலக்கியம் மணிமேகலை ஆகும். எனவே மணிமேகலை முதலாகத்தான் தமிழில் சமயக் காப்பியங்கள் என்று தொடங்கி, சமயம் குறிப்பிடலாம்.
சமணமும் பௌத்தமும்
தமிழில் இலக்கியங்களைச் சமயம் பரப்பும் கருவியாக முதலில் கையாண்டவர்கள் சமணர்களும் பௌத்தர்களுமே என்று கூறலாம். சமணம் தொடக்கத்தில் ஒரு சமயமாகத் தோன்றவில்லை; வேதங்களுக்கு எதிராகத் தோன்றிய ஓர் இயக்கமாகவே தொடக்கத்தில் இருந்தது.
பௌத்தமும் சமனம் போலவே வேதத்துக்கு எதிரான இயக்கம்தான். எனினும் காலப்போக்கில் சமணமும் பெளத்தமும் வேத சமயங்களுக்கு எதிரான சமயங்களாக உருப்பெற்றன.
இதையும் படிக்க : காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு அவரது தமிழ் தொண்டு
சங்க காலத்துக்குப் பிறகு கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை சமணமும் பௌத்தமும் அரசியல் செல்வாக்குப் பெற்ற சமயங்களாக விளங்கின. அதனால் அக்கால கட்டத்தில். அவ்விரு சமயங்கள் தொடர்பான இலக்கியங்களே பெரிதும் உருவாயின.
மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி போன்ற சமயக் காப்பியங்கள் அவற்றுள் குறிப்பிடத் தக்கனவாகும். சைவமும் வைணவமும் செல்வாக்கு குன்றி இருந்தன.
சைவ சமய மறுமலர்ச்சி :
சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்டவர்கள் சைவர்கள் ஆவர். சிவனைப் போற்றிப் பாடும் இலக்கியங்கள் சைவ இலக்கியங்கள் ஆகும். திருமாலைத் தெய்வமாகக் கருதி வழிபடுவோர் வைணவர் ஆவர். திருமாலைப் போற்றிப் பாடும் இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் ஆகும்.
சங்க காலப் பாடல்களில் சிவன் மற்றும் திருமாலைப் பற்றி ஓரிரு பாடல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. திருமால் முல்லை நிலத் தெய்வமாகக் கருதப்பட்டது.
பழைய தமிழ் மரபு. ஆனாலும் ‘சைவம்‘, ‘வைணயம்‘ என்ற சமயக் கோட்பாடு சங்க காலத்தில் உருவாகி இருக்கவில்லை என்பதே உண்மை.
அக்கோட்பாடு வேதத்தைப் போற்றியவர்களால் சிறுகச் சிறுகத் தோற்றுவிக்கப்பட்டு, தமிழ்ச் சமூகத்தில் மிக ஆழமாக வேறூன்றி சமயங்களாக உருவெடுத்தன எனலாம்.
வேதச் சயங்களாகக் கிளைத்த சைவமும் வைணவரும் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை, சமணத்தின் செல்வாக்கினால் அழுத்தப் பெற்று அடங்கி இருந்தன ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைவ சமயம் வீறுகொண்டு எழுந்தது. அடியவர்கள் தேவாரப் பாடல்களைப் பாடினர் சைவர் .
தே+ஆரம்= தேவாரம். தே என்றால் தெய்வம்; ஆரம் என்றால் மாலை என்பது பொருளாகும். தெய்வத்திற்கு (சிவனுக்கு) ஆக்கிய பாமாலை தேவாரம் ஆகும். தெய்வத்திற்குப் பாடிய இசைப்பாடல் (தோவாரம்) தேவாரம் என்றும் பொருள் கூறுவர். (வாரம் என்றால் இசைப்பாடல்.)
திருஞானசம்பந்தர்தான் முதலில் தேவாரம் பாடியவர்} அவரைத் தொடர்ந்து திருநாவுக்கரசர் தேவாரம் பாடினார். இவ்வாறு சைவ சமயம் எழுச்சியுற்றது. இதனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சைவ சமய மறுமலர்ச்சிக் காலம் என்று கூறுவார்கள்.
பன்னிரு திருமுறை – பட்டியல்
சிவனைப் போற்றிப் பாடிய தேவாரத்தை முதலில் இயற்றியவர் திருஞானசம்பந்தர். இவர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்த்தவர். இவரைத் தொடர்ந்து இதே காலத்தில் வாழ்ந்த திருநாவுக்கரசர் தேவாரம் பாடினார்.
இவரை அடுத்து எட்டாம் நூற்றாண்டில் சுந்தரர் தேவாரம் பாடினார். சுந்தரருக்குப் பிறகு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் திருவாசகம் மற்றும் திருக்கோவை ஆகிய சைவ நூல்களை இயற்றினார். அடுத்துத் திருமாளிகைத்தேவர் முதலான ஒன்பது சைவப் புலவர் பெருமக்கள் 301 பாடல்களை இயற்றினர்.
இதையும் படிக்க : இராணுவம் மற்றும் காவல் துறை பணி
திருஞான சம்பந்தருக்கும் முந்தியவராகக் கருதப்படும் திருமூலர் திருமந்திரம் என்னும் அற்புதமான ஞான நூலை இயற்றினார். திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், சோயான் பெருமாள் நாயனார் முதலான பள்ளிரண்டு சைவப் புலவர் பெருமக்கள் 40 நூல்களை இயற்றினர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார், அவர் காலம் வரை வாழ்ந்த சிறப்பு வாய்த்த சைவ அடியார்களான 63 நாயன்மார்களின் வரலாற்றைத் தொகுத்துப் ‘பெரியபுராணம்’ என்ற நூலை இயற்றினார்.
இதையும் படிக்க : சங்க காலம் ஒரு பொற்காலம்
அறிமுகத்தில் குறிப்பிட்டவாறு திருநாளசம்பத்தர் முதல் சேக்கிழார் வரை சைவ சமயந்தில் தோன்றிய புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே பன்னிரு திருமுறைகள் எனப்படும். அவற்றைக் குறிப்பிடும் பட்டியலைக் கீழே காணலாம்.
எண் | திருமுறைகள் | பாடியவர்கள் |
---|---|---|
1. | முதல் திருமுறை | திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் |
2. | இரண்டாம் திருமுறை | திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் |
3. | மூன்றாம் திருமுறை | திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் |
4. | நான்காம் திருமுறை | திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் |
5. | ஐந்தாம் திருமுறை | திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் |
6. | ஆறாம் திருமுறை | திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் |
7. | ஏழாம் திருமுறை | சுந்தரர் பாடிய தேவாரம் |
8. | எட்டாம் திருமுறை | மாணிக்கவாசகர் திருவாசகம் மற்றும் திருக்கோவை |
9. | ஒன்பதாம் திருமுறை | ஒன்பதுபேர் பாடினார்கள்(திருமாளிகைத்தேவர், சேர்ந்தனர், சேதிராயர், கண்டராதித்தர், பூந்துருத்தி, நம்பிகாடவ நம்பி, திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, கருவூர்தேவர், வேணாட்டடிகள்) ) |
10. | பத்தாம் திருமுறை | திருமூலரின் திருமந்திரம் |
11. | பதினொன்றாம் திருமுறை | பன்னிரண்டு பேர் பாடினார்கள் ( திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமான் நாயனார், நக்கீரர் தேவ நாயனார், கல்லாடர் தேவ நாயனார், கபிலர் தேவ நாயனார், இளம் பெருமானடிகள், அதிரா அடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிருவர்) |
12. | பன்னிரண்டாம் திருமுறை | சேக்கிழாரின் பெரிய புராணம் |