பாயிரவியல் என்றால் என்ன ? அவற்றின் வகைகள் யாவை ?தமிழ் இலக்கணம்-இலக்கண தமிழன்.

அறிமுகம்

இது ‘நன்னூல் ‘ (இலக்கணம்-1) – என்ற பாடத்திட்டத்தின் முதல் தொகுதி நூலாகும். இதில் பாயிரம், எழுத்தியல், பதவியல் பற்றி நீங்கள் கற்றுக் கொள்ள இருக்கிறீர்கள். இந்நூல் கீழே விவரிக்கப்பட்டுள்னைதப் போன்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பாயிரவியல் :

இந்தப் பகுதியின் வாயினக நன்னூல் பாயிரத்தைப் பற்றிய முழுமையான செய்திகளை நாம் அறிவோம். (1) நூலைப் பற்றிய விரிவான செய்திகள், (2) நூலைக்கற்பிக்கும் ஆசிரியரது தகுதிகள்/ இலக்கணங்கள், (3) ஆசிரியர் நூலைத் கற்பிக்கும் நெறிமுறைகள், (4) மாணவரது இலக்கணம் / தருதி, (5) மாணவர்கள் நூலைக் கற்கும் நெறிமுறைகள் ஆகியவை பற்றி நன்னூலார் கூறும் செய்திகள் இப்பிரிவில் விவரிக்கப் பட்டுள்ளன.

எழுத்து :

இந்தப் பிரிவின் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் வகை, அவை பிறக்குமிடம், அவை பிறப்பதற்குத் தேவையான முயற்சி பற்றிய செய்திகளை நாம் அறிவோம். இந்தப் பிரினில் தமிழில் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் எல் வெவ்வெழுத்துகள் வரும், சொற்களுக்கு இடையில் எந்தெந்த மெய்யெழுத்துகள் எந்தெந்த மெய்யெழுத்துகளோடு இணைந்து வரும் – என்பளவற்றைப் பற்றிய கருத்துகள் விரிவாகக் கூறப்பெறுகின்றன.

பதம் – வகை, உறுப்புகள் :

இப்பிரிவில் பதத்திற்கான விளக்கம், அதன் வகை; பகுபதத்தின் ஆறு வகை உறுப்புகளுள் பகுதி, விகுதி, இடை நிலை – ஆகியவற்றைப் பற்றி நன்னூல் கூறும் செய்திகள் விரிவாக விளக்கப்படுகின்றன.

வடமொழியாக்கம் :

இப்பிரிவில், வடமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி எழுதும் போது கையாள வேண்டிய நெறிமுறைகள் விளக்கப்பெறுகின்றன. வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உரிய பொது எழுத்துக்களும் சிறப்பெழுத்துக்களும் கூறப்படுகின்றன.

  பாயிரம் என்றால் என்ன? அதன் வகைகள் :

பாயிரம்‘ எனும் சொல் ‘வரலாறு‘ எனும் பொருளை உணர்த்துகிறது. இது டைமொழியில் ‘உபோற்காதம்’ என வழங்கப்பெறுகிறது பாயிரத்திற்கு வேறு சில பெயர்கள் உண்டு. அவையாவன: 

1. முகவுரை, 
2 பதிகம், 
3. அணிந்துரை,
 4. நூன்முகம், 
5. புறவுசை, 
6. பேதந்துரை,
 7 புனைந்துரை 
 
என்பனவாகும் (நூற்பா.1). இப்பெயர்கள் அனைத்தும் காரணப் பெயர்களாகும்).
முகவுரை – தூலுக்கு முன் சொல்லப்படுவது; நூலுக்கு முகம் போன்றது.
பதிகம் – ஐந்து வகைப் பொதுப்பாயிரம், பதினோரு வகைச் சிறப்புப்பாயிரம் ஆகிய பலவகைப் பொருளையும் தொகுத்துக் கூறுவது.
அணிந்துரை –  நூலினது பெருமை முதலியன விளங்க அழகுபடுத்திக் கூறுவது.
நூன்முகம் – நூலுக்கு முகம் போல முற்பட்டிருப்பது.
புறவுரை – நூலில் கூறப்பெறாத சய்திகளை நூலின் புறத்தே தொகுந்துக் கூறுவது.
தந்துரை – நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து சொல்வது
புனைந்துரை – அணிந்துரைக்குக் கூறிய கருத்து இதற்கும் பொருந்தும்.
பாயிரத்தின் வகை : 
பாயிரம் 1.பொதுப்பாயிரம் எனவும், 2.சிறப்புப் பாயிரம் எனவும் இரண்டு வகைப்படும். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top