ஏதோ வயிற்று பிழைப்புக்காக கறி விற்று பிழைக்கும் மூதாட்டியை அரசு பேருந்தில் இருந்து இறக்கி நடத்துனர் மீது நெட்டிசன்கள் பல கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.
தர்மபுரியில் ஒரு அரசு பேருந்தில் பாஞ்சாலை என்கிற 59 வயது மூதாட்டி பயணம் செய்துள்ளார். அப்போது அவர் மாட்டு இறைச்சியை பேருந்தில் ஏற்றி சென்றுள்ளார்.
அதை பார்த்த அந்த பேருந்தின் நடத்துனர் சசிகுமார் அந்த மூதாட்டியை கண்டபடி திட்டிவிட்டு அவரை நடு வழியிலே இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் அந்த மூதாட்டி பேருந்து நிலையம் வரை மலை கிலோமீட்டர் கால் வலிக்க நடந்து வந்துள்ளார். இதனிடையில் இணையதள வாசிகள் இவரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவி விட்டார்கள்.
அந்த வீடியோ மிகவும் வைரலாக இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை பணியிடை நீக்கம் செய்தது போக்குவரத்து துறை.