வினா வகைகள் மற்றும் விடை வகைகள் – தமிழ் இலக்கணம்

  வினா வகைகள்: 

என்ன? எப்படி? எங்கு? ஏன்? என வினாமேல் வினாவைக் கேட்டு விடையறிய விரும்புகின்றவனே சிறந்த அறிவாளியாக ஆகமுடியும் என்று சாக்கரடிசும், தந்தை பெரியாரும் கூறுவர். வினா அறுவகைப்படும். 

அவை: அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா என்பன.

1. அறிவினா :

தான் ஒரு பொருளை நன்கறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதனை அறியும்பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா.

(எ-டு) திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது 

2.அறியாவினா:

தான் அறியாத ஒரு பொருளை அறிந்துகொள்வதற்காகப் பிறரிடம் வினவுவது; அறியாவினா.. 

3. ஐயவினா

(எ-டு) எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை? என மாணவன் ஆசிரியரிடம் தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒருபொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக்

கொள்வதற்காக வினவப்படும் வினா, ஐயவினா. (எ-டு) அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?

4. கொளல்வினா

தான் ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும்பொருட்டுக் கடைக்காரரிடம் விளவும் வினா, கொளல்வினா.

(எ-டு) பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா.

5. கொடைவினா :

தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப்பற்றிப் பிறரிடம் விளவுவது, கொடைவிளா.

(எ-டு) மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? 

6. ஏவல் வினா:

ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் விளா, ஏவல் வினா. (எ-டு) மனப்பாடச் செய்யுளைப் படித்தாயா? முருகா சாப்பிட்டாயா? ( இவை படி, சாப்பிடு என்று ஏவல் பொருளைத் தருகின்றன )

அறிவு,அறியாமை, ஏவல் தரும் ஐயுறல், கொளல், இழுக்கார்.கொடை,வினா, ஆறும்                                                                     -நன்னூல்,385.

       விடை வகைகள்:

வினாவிற்கு ஏற்ப விடையளிப்பதுதான் மொழிநடையின் சிறப்பு.

‘தேர்வு, நாளை நடைபெறுமா ?’ எனக் கேட்ட ஒருவனிடம், ‘என் தங்கை ஏழாம் வகுப்பில் படிக்கிறாள்’ எனக் கூறுவது தவறு. வினாவும் விடையும் பிழையின்றி அமைதலே முறை.

இறை,செப்பு,பதில் என்பன விடையின் வேறுபெயர்கள். விடை எண்வகைப்படும்.

அவை: சுட்டு, மறை, நேர், ஏவல், வினாஎதிர்வினாதல், உற்றதுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என்பன.

1. சுட்டுவிடை 

“சென்னைக்கு வழி யாது ?” என்று வினவினால்  , ‘இது’ என்பதுபோலச் சுட்டிக் கூறும் விடை, சுட்டுவிடை

2. மறைவிடை (எதிர்மறுத்துக் கூறல் விடை):

செய்வாயா?” என்று வினவியபோது, செய்யேன் என்பதுபோல எதிர்மறுத்துக் கூறும் விடை, எதிர்மறைவிடை.

 3. நேர்விடை (உடன்பட்டுக் கூறுதல்):

“இது செய்வாயா?” என்று வினவியபோது, செய்வேன் என்று உடன்பட்டுக் கூறும் விடை, நேர்விடை.

4. ஏவல்விடை:

“இது செய்வாயா?” என்று வினவியபோது, ‘நீயே செய்’ என்று ஏவிக்கூறுவது ஏவல்விடை.

5. வினா எதிர்வினாதல் விடை

“இது செய்வாயா?” என்று வினவியபோது, ‘செய்யாமலிருப்பேனோ ?’ என்று வினாவையே விடையாகக் கூறுவது, வினாஎதிர்வினாதல்விடை.

6. உற்றதுரைத்தல் விடை:

 “இது செய்வாயா?” என்று வினவியபோது, ‘உடம்பு நொந்தது’ என்று தனக்கு உற்றதனை விடையாகக் கூறுவது, உற்றதுரைத்தல்விடை.

7. உறுவதுகூறல் விடை:

 “செய்வாயா?” என்னும் வினாவிற்குக் ‘கை வலிக்கும்’ எனத் தனக்கு வரப்போவதனை விடையாகக் கூறுவது, உறுவதுகூறல்விடை.

8. இனமொழிவிடை:

“ஆடுவாயா?” என்று வினவியபோது, பாடுவேன்’ என ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது, இனமொழிவிடை..

சுட்டு, மறை, நேர் ஆகிய மூன்றும் வெளிப்படை ஏவல், வினா எதிர்வினாதல், உற்றதுஉரைத்தல், உறுவதுகூறல், இனமொழி ஆகிய ஐந்தும் வினாக்களுக்கு உரிய விடையைக் குறிப்பால் உணர்த்துவன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top