அணி என்றால் என்ன ?
அணி என்பதற்கு அழகு என்று பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு ,பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம் ஆகும். அவற்றுள் சில உதாரணமாக,
1) உவமை அணி
2) உருவக அணி
3) தற்குறிப்பேற்ற அணி
இந்த அணி இலக்கணத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை
1)பொருள் அணி இலக்கணம்
2)சொல் அணி இலக்கணம்
இதையும் படிக்க : அட்டாக் ஹிந்தி டப் தமிழ் லேட்டஸ்ட் திரைப்படம் – திரைவிமர்சனம்
இலக்கியங்களின் பொருளைக் குறிக்கின்ற முறையில் வருகின்ற அணிகள்
பொருளணிகள் எனப்படும். இவை பொருளின் அழகுபடுத்தலுக்காக வருகின்ற அணிகள் எனலாம். கூறுகின்ற முறை மூலம் இலக்கியங்களின் பொருளை அழகுபடுத்தி வரும் அணிகள் பொருளணிகளாகும்.
உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம், தன்மை
நவிற்சி, உயர்வு நவிற்சி, வேற்றுப் பொருள் வைப்பு, வேற்றுமை, பிறிதுமொழிதல் எனப் பொருளணி பல வகைப்படும்.
பொருளணிக்கு உதாரணங்கள்
1) உவமையணி
2) பொருள் உவமையணி
3) எடுத்துக்காட்டு உவமையணி
4) தண்மை அணி
5) உருவக அணி
6). பின்வருநிலையணி
7) தற்குறிப்பேற்ற அணி
8) வஞ்சப் புகழ்ச்சியணி
9) இரட்டுறமொழிதல் அணி
பொருள் அணி வகைகளில் விரிவான விளக்கம் :
1) உவமையணி:
வினை, பயன், மெய், உயிர் எனும் நான்கின் காரணமாக ஒரு பொருளை அதன் தன்மை கொண்ட மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது
உ வமையணியாகும். ஒரு பொருளை அதனிலும் சிறந்த ஒரு பொருளுடன்
ஒப்பிடூவதன் மூலம் சிறப்பிப்பது இதன் இயல்பாகும்.
தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றின் மூலம் விளக்குவதே இதன் அடிப்படைப் பண்பாகும்.
உவமை அணியொன்றின் அம்சங்களாக உவமானம், உவமேயம், பொதுத்
தன்மை, உவமை உருபு என்பன அமையும். உவமையணியிலிருந்தே ஏனைய
அணிகள் தோற்றம் பெற்றதால் இது அணிகளுக்கெல்லாம் தாய் அணி எனச்
சிறப்பிக்கப்படுகின்றது.
உவமை அணியின் கூறுகள்
1) உவமானம்-ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
2) உவமேயம்-ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்
உவமை உருபுகள்:
௨ தாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
பொதுத்தன்மை- இரண்டுக்கும் உள்ள தன்மை
(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில்
சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை).
உவமை அணியின் உருபுகள்
உவமை அணியின் உருபுகள் உவமை உருபுகள்-உதாரணம்:
போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய முதலியவை
உவமை அணி மூன்று வகைகள்
1. பண்பு உவமையணி
2. தொழில் உவமையணி
3. பயன் உவமையணி.
1.பண்பு உவமையணி
உ தாரணம்:
குத்துப்பல், பவளவாய், கயல்விழி
பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.
2.தொழில் உவமையணி
-. உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
செயலை விளக்குவது-புலியின் வீரம், தாவும் மனம்.
3.பயன் உவமையணி
உதாரணம்: மழைக்கை
மழை போல பொழியும்(கொடுக்கும்) கை
உவமையணியில் உவமானம் , உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும்
வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.
உவமானம்-ஒப்படக் கொண்டு வந்த பொருள்
உவமேயம்-எம்மிடமுள்ள பொருள்
உவமை உருபுகள்-
உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
பொதுத்தன்மை- இரண்டுக்கும் உள்ள தன்மை
(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில்
சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை).
சான்று:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை – திருவள்ளுவர்.
இங்கு,
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல