அதிமுக-வில் சேர்ந்த பிரபல நடிகை! Ilakkana Tamilan

தற்போது தளபதி விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதும் நிறைய நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் அரசியலில் இணைந்து வருகிறார்கள்.

ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், நவரச நாயகன் கார்த்திக் நடிகர் டி ராஜேந்திரன் மற்றும் பல பிரபல நடிகர்கள் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றவுடன் சினிமாவில் பிடித்த இடத்தை விட்டுவிட்டு அரசியலிலும் பெரிய இடம் பிடிக்க முடியாமல் காணாமல் போய்விட்டார்கள்.

இதுவரை சினிமாவிலிருந்து அரசியலுக்கு சென்று எளிதாக வெற்றி பெற்று தமிழகத்தை ஆட்சி செய்த முதலமைச்சர் என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே.

அதற்குப் பின் ஜெயலலிதா எம்ஜிஆர்  பெயரில் வந்தவர். அதற்குப் பிறகு யாரும் சினிமாவில் நடித்து ஆட்சியைப் பிடிக்கவில்லை.

தொடர்ந்து திமுக அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வருவதற்காக தளபதி விஜய் அவர்கள் சினிமாவிலிருந்து தான் இருக்கும் பெரிய இடத்தை விட்டுவிட்டு மக்களுக்கு உதவுவதற்காக அரசியலில் நுழைந்துள்ளார்.

எம்ஜிஆர் வழியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள தளபதி விஜய் அரசியல் களத்தில் வெற்றி பெறுவாரா? மாட்டாரா? என்பது இனிவரும் 2026 பொது தேர்தலில் தான் தெரிய வரும். 

தளபதி விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்த செய்தி அறிந்த நடிகர் விஷால் தானும் இனிவரும் காலத்தில் சூழ்நிலை முடிவெடுக்க வைத்தால் மக்களுக்காக பணியாற்ற அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதற்குப் பிறகு விஜய் என்னும் மாபெரும் நடிகர் எதிர்கொள்ள இப்போது இருந்து நிறைய நடிகர்கள் நடிகைகளை திமுக அதிமுக கட்சிகள் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டு வருகிறது.

ஏனென்றால் விஜய் அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் அவ்வளவு பெரிய நடிகர் கிடையாது அவருக்கே ஓட்டு கிடைக்கும்போது ஏன் தளபதி விஜய்க்கு ஓட்டு கிடைக்காது? என்கிற பயம் தான்!🤣

இந்த நிலையில் நடிகை கௌதமி தற்போது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அதிமுக – ADMK) தற்போதைய எதிர்க்கட்சியில் இணைந்துள்ளார்.

அதிமுக கட்சியில் சேர்ந்ததும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தான் எழுதிய ‘மாபெரும் தமிழ் கனவு’ என்கிற புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top