ஆறு வகை வினா , எட்டு வகை விடை-தமிழ் இலக்கணம்

 ஆறுவகை வினா வகைகள் :

அறிதல், அறியாமை, ஐயுறல், கொளல், கொடுத்தல், ஏவுதல் ஆகிய ஆறுவகைப் பொருளையும் தருமாறு வரும் ஆறுவகை வினாக்களையும் புலவோர் தவறாமல் கொள்வர். 

ஆறு வகை வினா , எட்டு வகை விடை-தமிழ் இலக்கணம்

1. அறிவினா :

தான் ஒரு பொருளை அறிந்திருந்து, அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதை அறிதற் பொருட்டு, அதனைக் குறித்துப் பிறரிடம் கேட்பது. 

எ-டு : ஆசிரியன் மாணவனிடம் ‘இத் நூற்பாவிற்குப் பொருள் யாது?” எனக் கேட்பது

2.அறியா வினா :

தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்ளுதற் பொருட்டுப் பிறரிடம் கேட்பது.

(எ-டு)

மாணவன் ஆசிரியனிடம் இந்நூற்பாவிற்குப் பொருள் என்ன? எனக் கேட்பது.

3.ஐயவினா :

தனக்கு ஐயமாக இருப்ப தொரு பொருள் குறித்து அந்த ஐயம் தீர்த்துக் கொள்ளுதற் பொருட்டு மற்றவரிடம் கேட்பது

( எ-டு )

அங்கே இருப்பது பாம்பா? கயிறா? என கேட்பது

4. கொளல் வினா :

தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளுதற் பொருட்டு, அப்பொரு இருத்தலைப் பற்றிப் பிறரிடம் கேட்பது

(எடுத்துக்காட்டு) 

தொல்காப்பியம் உள்ளதோ கடைக்காரரே ” என்பது,

5. கொடை வினா :

தான் ஒரு பொருளைக் கொடுத்தற் பொருட்டு, அப்பொருள் இருத்தலைப் பற்றிப் பிறரிடம் கேட்பது 

(எ-டு )

கணவன் மனைவியை நோக்கிப் ‘பட்டுப் புடவை இல்லையோ?’ எனக் கேட்பது 

6. ஏவல் வினா :

தான் ஒரு தொழிலைச் செய்யும்படி எவுதற் பொருட்டு, அத்தொழிலின் நிகச்சியைப் பற்றிப் பிறரிடம் கேட்பது.

(எ-டு)

தந்தை மகனை நோக்கிப்’படித்தாயா?” – எனக் கேட்பது

அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்” (நூற்பா.385)

 எட்டு வகை விடைகள் :

1.சுட்டு விடை, 2 மறை விடை, 3.நேர் விடை. 4. ஏவல் விடை, 5. விளா வெதிர் விளாதல் விடை, டேற்றது உரைத்தல் விடை, 7.உறுவது கூறல் விடை, 8. இனமொழி விடை என விடை எட்டு வகைப்படும்.

இவற்றில் சுட்டு விடை, மறை விடை, நேர்விடை ஆகிய மூன்றும் ‘வெளிப்படை விடை” எனப்படும். மற்ற ஐந்தும் எதிர்மறைப் பொருளைத் தரும் ‘குறிப்பு விடை” எனப்படும். 

1. சுட்டு விடை :

‘சேலத்திற்கு வழி யாது?’ – என்று வினவினால், ‘இது’ எனச் சுட்டிக் கூறுவது.

2. மறைவிடை :

 (எதிர்மறுத்துக் கூறுதல் விடை) ‘இது செய்வாயா?’ – என்று விளாலியபோது, ‘செய்யேன்’ – என்று கூறுவது

3.நேர் விடை : 

(உடன் பட்டுக் கூறுதல் விடை) ‘இது செய்வாயா?’ என்று விளாவியபோது, ‘செய்வேன்’ என்று கூறுவது.

4. ஏவல் விடை

‘இது செய்வாயா?’ என்று விளாவியபோது, ‘நீ’செய்’ என்று கூறுவது.

5. வினாஎதிர் வினாதல் விடை :

வினாவிற்குக் கூறப்படும் விடை வினா வடிவில் அமைந்திருப்பது. ‘இது செய்வாயா?’ என்று வினாவியபோது, ‘செய்வேளா’ என்று கூறுவது.

6. உற்றது உரைத்தல் விடை :

இது செய்வாயா?’ – என்று வினாவியபோது, ‘உடம்பு நொந்தது / உடம்பு நோகின்றது’ – எனக் கூறுவது

7. உறுவது கூறல் விடை :

இது செய்வாயா?’ – என்று விளாவிய போது, ‘உடம்பு நோகும்’- என்று கூறுவது.

8. இனமொழி விடை : 

 ‘இது செய்வாயா?’ – என்று விளாவிய போது, ‘மற்றையது செய்வேன் என்று கூறுவது. 

சுட்டு மறை நேர் ஏவல் விளாதல் உற்ற துரைத்த இறுவது கூறல் இனமொழி யெனுமெண் ணிறையு நிறுதி நிலவிய ஐந்துமப் பொருண்மையின் நேர்ப்” (நூற்பா 386)

‘நிலவிய’ – எனும் மிகையால், வினா இன்றியும் வரும் விடையும் உளவென்பது பெறப்படும்.

( எ.கா )

அறிவுள் ஒருவன், ‘இன்னநாள் சுாற்றடிக்கும்’, ‘இன்ள நாள் மலை பெய்யும்’ எனக் கூறுதல் (இரப்பவனொருவள், கங்கையாடிப் போந்தேன், ஒரு பிடி சோறு தம்மின் ஓசாடை தம்மின்’ எனக் கூறுதல். இக்கூற்றுகள் வினா இன்றி நிகழ்த்தப் பெற்றவையாகும்.

 வினா, விடைகளில் முதல் சினை வழுவாமை :

விளாவுதலிலும், விடையளித்தலிலும் சினையும் முதலும், ஒற்றுமை பற்றிச் சினையும் முதலும் ஒன்று என்று எண்ணி முதலொடு சினையும் சினையொடு முதலுமாக மயங்கி வரும்படிக் கூறக்கூடாது.

(எ-டு )

“கண் பிறழ்ந்ததோ? கயல் பிறழ்த்ததோ?

“சாத்தன் நல்லனோ? கொற்றன் நல்லனோ?”

எனச் சினையும் முதலும் பற்றி விளாவியவருக்குக் கண்பிறழ்ந்தது, சுயல் பிறழ்ந்தது’ எனவும்; ‘சாத்தன் நல்லன்’, கொற்றன் நல்லன்’ எனவும் விடை கொடுக்கப்படும்.

அதனை உடையாளைக் கருதி ‘இவள் பிறழ்ந்தாளோ? கயல் பிறழ்ந் ததோ?’ என விளாவுதலும்; ‘இவள் பிறழ்ந்தாள்’ – என விடை கொடுத் தலும் வழுவாயிற்று.

விளாவிலும் செப்பினும் விரவா சினைமுதல்.”(நூற்பா.387)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top