1) இயல்பீறு, விதியீறு- புணர்ச்சி
இயல்பீறாகவோ விதியீறாகவோ வரும் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிரெழுத்துடன் க ,ச ,த ,ப என்னும் வல்லின மெய்களை முதலில் கொண்ட வருமொழிச்சொல் சேரும் மிகுந்து புணரும்.
![]() |
தமிழ் இலக்கணம் |
இயல்பீறு என்பது இயல்பாக நிற்கும் சொல்லின் வடிவம்
பள்ளி + தோழன் – பள்ளித்தோழன்
விதியீறு என்பது புணர்ந்தபின் நிற்கும் சொல்லின் வடிவம்
நிலம்+ தலைவர் – நில + தலைவர் (விதியீறு ) – நிலத்தலைவர்
திரைப்படம் – திரை +படம்
திரை +ப் +படம் = ” இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும்” என்னும் விதிப்படி ” திரைப்படம்” என்று ஆனது.
மரக்கலம் – மரம் +கலம் = “மவ்வீரு ஒற்று அழிந்து உயிரீரு ஒப்பவும்” என்னும் விதிப்படி ,
மர + கலம் – இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்னும் விதியின்படி ‘மரக்கலம் ‘ எனப் புணர்ந்தது .
2) பூப்பெயர்ப் புணர்ச்சி :
3) மெய்யீற்றுப் புணர்ச்சி :
வாயொலி — வாய் +ஒலி — ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி வாயொலி எனப் புணர்ந்தது.
மண் +மகள் – மணமகள் என்பதில் நிலைமொழி இறுதியும் வருமொழி முதலும் மெய்யெழுத்தாக நிற்க இயல்பாக புணர்ந்தது .
4) தனிக்குறில் முன் ஒற்று — புணர்ச்சி :
தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் (நன்னூல் – 205)