ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு
சூரியனிலிருந்து சிதறி வீழ்ந்த ஒரு பெரிய அளற்பிழம்புத் திவலையே இந்த உலகம். இது விண்ணியலார் முடிவு.
தொடக்கத்தில் தீக்குழம்பாக இருந்த அது படிப்படியாகக் குளிர்ந்து உயிர்கள் தோன்றுவதற்குரிய மாற்றங்கள் பெற்றது.அம்மாற்றங்களையே ஊழிகள் என்கிறோம்.
இவை:
1. ஆர்க்கியன் ஊழி
2. பழைய உயிரின வாழி
3. இடை உயிரிள மாழி
4.புது உயிரின ஊழி
5. மக்களின் ஊழி
என்று ஐந்து வகைப்படும்.
1) ஆர்க்கியன் ஊழி
இந்தக் காலத்தில்தாள் தீப்பிழம்பாக இருந்த நிலம் குளிர்ந்து பாறையாக உருமாறியது. அப்போது உருவான பாறைகளையே ஆர்க்கியன் பாறைகள் என்று அழைக்கின்றனர்.
இன்றுள்ள பாறைகள் அப்பாறைகளின் உருமாற்றத்தில் எஞ்சிய பகுதிகளே ஆகும். இதளோடு இடைபுகு பாறைகள் என்று பிற்காலத்தில் தோன்றியவை இன்று வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் உள்ளன.
2) பழைய உயிரின ஊழி
பாறைகள் குளிர்ந்து கடல்நீர் தேங்குமளவு பதப்பட்டன. அந்நீரில் வண்டல் மண் படிந்து பாளப் பிரிவுப்பாறைகளாயின. அப்போது கடல் பாசி, காளான், கடல்சிப்பி, நத்தை ஆகியன அக் கடல் நீரில் தோன்றி இருக்கக் கூடும். பிள்ளர் செடி. கொடிகள், மரங்கள், முதுகெலும்பற்ற சிற்றுயிர்கள் தோன்றின. இந்தக் காலத்தில் படிப்படியாகத் தொடர்ந்து தர்வாய்ப் பாறைகள் மற்றும் நிலக்கருங்கல் இணைந்து கிழக்கு மலைத் தொடர் உருவானது. என்ற இடை புகு பாறைகளும்
3) இடை உயிரின் ஊழி
முதுகெலும்புள்ள உயிரிகளான முதலை, பாம்பு, கடல் ஆமை முதலியவற்றோடு பாலூட்டி உயிரிகளும் இந்த ஊழியில் தோன்றின இக்காலத்தில் தோன்றிய கோண்டுவானாப் பாறைகள் கிழக்குக் கடற்கரையில் ஒரிசாவிலிருந்து இராமநாதபுரம் வரை காணப்படுகின்றன.
4) புது உயிரின ஊழி
முதன் முதலாகப் பாலூட்டிகளான ஆடு, மாடு, நாய், யாளை, ஒட்டகம், கரடி முதலியவை தோன்றின. கைகள் மற்றும் வால் உள்ளனவாகிய குரங்குகள், லெமூர் என்ற வாலில்லா வகைக் குரங்குகள் தோன்றின. கடலோர மணற் கற்களும், தமிழகத்தில் உள்ள செம்பாறைகளும் உருவான காலம் இதுவே.
5) மக்களின் ஊழி
ஆதிமனிதன் தோன்றியது இந்த ஊழியில்தான் என்று தொல்பொருளியலார் சான்று காட்டுகின்றனர். வடஇந்தியாவில் எரிமலைக் குழம்புகள், நிலநடுக்கங்கள் தோன்றிய அறிகுறிகள் உள்ளன அத்தகைய இடையூறுகள் மனிதன் தோன்ற வாய்ப்பளிக்காது.
ஆனால் தென்னிந்தியாவில் அவை காணப்படவில்லை எனவே மனித உயிர் தோன்றிய முதல் இடம் இதுவே என்று அறிவியலாளர் கூறுவர். உலகில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பு உருவான கருங்கற் பாறைகள், படிவுப்பாறைகள் இங்கு காணப்படுவது மற்றொரு சான்றாகும்.