சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்ட பிறகு ஐயப்ப பக்தர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1) சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள் ஒரு பொழுது மட்டும் உணவு சாப்பிட வேண்டும்.
அதாவது மதிய உணவை மட்டும் அரிசி சோறு பொங்கிய சைவ உணவு சாப்பிட வேண்டும். அது தவிர இரவு நேரத்தில் இட்லி, உப்புமா, சப்பாத்தி, தோசை என துரித உணவுகளை சாப்பிட்டு கொள்ளலாம். காலை உணவை தவிர்த்து கட்டாயம் விரதம் இருக்க வேண்டும்.
2) ஐயப்ப பக்தர்கள் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.
3) ஐயப்ப பக்தர்கள் காலில் செருப்பு அணிய கூடாது!
4) ஐயப்ப பக்தர்கள் கட்டிலில் படுத்து தூங்க கூடாது!
5) ஐயப்ப பக்தர்கள் தினமும் இரண்டு வேளை தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும்.
6) ஐயப்ப பக்தர்கள் உடம்புக்கு சோப்பு போட்டு குளிக்க கூடாது! ஷாம்பு போட்டு குளிக்க கூடாது!
7) ஐயப்ப பக்தர்கள் வெந்நீரில் குளிக்க கூடாது! குளிர்ந்த நீரில் மட்டுமே குளிக்க வேண்டும்.
8) ஐயப்ப பக்தர்கள் தலையில் எண்ணெய் தேய்க்க கூடாது!
9) ஐயப்ப பக்தர்கள் தலையில் சீப்பு போட்டு சீவக் கூடாது!
10) ஐயப்ப பக்தர்கள் தினமும் குளித்து முடித்த பிறகு நெற்றியில் சந்தன குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.
11) ஐயப்ப பக்தர்கள் மாலை போட்ட பிறகு சிகரெட் பிடிக்கவோ, புகைபிடிப்பதோ, மது அருந்துவதோ, பாக்கு போடுவதோ கூடாது!
12) ஐயப்ப பக்தர்கள் தங்கள் கழுத்தில் போட்டுள்ள இரண்டு மாலைகளை அறுத்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
13) ஐயப்ப பக்தர்கள் பாம்பு தேள் விஷப்பூச்சிகளை அடித்துக் கொல்லக்கூடாது!
14) ஐயப்ப பக்தர்கள் பொய் சொல்லக்கூடாது! அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது! திருடக்கூடாது.
15) அனைத்து ஐயப்ப பக்தர்கள் வேஷ்டி துண்டு அணிந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் காவி நீளம் பச்சை கருப்பு என நான்கு நிறங்களில் வேஷ்டி துண்டு அணிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் பள்ளிக்கூடம்,கல்லூரி, அலுவலகம் செல்வோர் நெற்றியில் சந்தன போட்டு வைத்து கழுத்தில் துண்டு மட்டும் போட்டு செல்லலாம்.