கணிதமேதை இராமானுஜம்‌ வாழ்க்கை வரலாறு

கணிதமேதை எனப்‌ போற்றப்படும்‌ இராமானுஜம்‌ ஈரோட்டில்‌ வாழ்ந்துவந்த சீனிவாசன்‌ – கோமளம்‌ இணையருக்கு 22.12.1887ம்‌ ஆண்டு பிறந்தார்‌. 

* இராமானுஜம்‌ 3 ஆண்டுகள்‌ வரை பேசும்‌ திறனற்றவராக இருந்தார்‌. 

இராமானுஜத்தின்‌ தாயார்‌, தம்‌ தந்தையார்‌ வாழ்ந்து வந்த காஞ்சிபுரத்தில்‌ இருந்த திண்ணைப்‌ பள்ளியொன்றில்‌ சேர்த்தார்‌.


கோமளத்தின்‌ தந்தையார்‌, பணியின்காரணமாகக்‌ கும்பகோணத்திற்குக்‌ குடும்பத்துடன்‌ குடியேறினார்‌. எனவே, இராமானுஜத்தின்‌ கல்வி கும்பகோணத்திலும்‌ தொடர்ந்தது. 

சுழியத்திற்கு மதிப்பு உண்டு என்ற இராமானுஜர்‌ கணித ஆசிரியருக்கு விளக்கம்‌ அளித்தார்‌. 

தந்தை சீனிவாசனின்‌ முயற்சியால்‌ சென்னைத்‌ துறைமுகத்தில்‌ எழுத்தர்‌ பணியில்‌ சேர்ந்தார்‌ இராமானுஜர்‌.

இராமானுஜர்‌ தான்‌ கண்டுபிடித்த தேற்றங்களையும்‌, எடுகோள்களையும்‌ வினாக்களாகத் தொகுத்து இந்தியக்‌ கணிதக்‌ கழகப்‌ பத்திரிகைக்குச்‌ சென்னைத்‌ துறைமுகத்தின்‌ தலைமைப்பொறியாளர்‌ ஃபிரான்சிஸ்‌ ஸ்பிரிங்‌ என்பார்‌ மூலம்‌ அனுப்பினார்‌. 

பெர்ணனைெளலிஸ்‌ எண்கள்‌ எனும்‌ தலைப்பில்‌ வெளியான-அவ்ருடையகட்டூரை, கணித வல்லுநர்களிடையே மிகுந்த வரவேற்பைப்‌ பெற்றது. 

ஹார்டி, ரோசர்ஸ்‌ இராமானுஜன்‌ கண்டுபிடிப்புகள்‌ என்னும்‌ தலைப்பில்‌ இராமானுஜத்தின்‌ வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்குப்‌ பெருமை சேர்த்தார்‌. 

இராமானுஜத்தின்‌ திறமையை அறிந்த இங்கிலாந்துப்‌ பல்கலைக்கழகம்‌ 1918 பிப்ரவரியில்‌ தங்கள்‌ கழகத்தில்‌ உறுப்பினராக்கி எஃப்‌.ஆர்‌.எஸ்‌. பட்டம்‌ வழங்கியது. 

எஃப்‌.ஆர்‌.எஸ்‌. பட்டம்‌ பெற்ற இராமானுஜத்தைத்‌ திரினிட்டி கல்லூரி பாராட்டிச்‌ சிறப்பித்தது. 

திரினிட்டி கல்லூரி கல்விக்குழுவின்‌ சிறப்பு உறுப்பினராகவும்‌ தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும்‌ 250 பவுண்டுத்‌தொகையை ஆறு ஆண்டுகளுக்கு வழங்கவும்‌ ஏற்பாடு செய்தது. 

ஹார்டியின்‌ பரிந்துரையின்பேரில்‌ சென்னைப்‌ பல்கலைக்கழகமும்‌ 250 பவுண்டுத்‌ சொகையை ஐந்து ஆண்டுக்குக்‌mகொடுக்க முன்வந்தது. ஆனால்‌, இராமானுஜம்‌ 50 பவுண்டைத்‌ தம்‌ பெற்றோருக்கும்‌ 20௦ பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும்‌ வழங்கி வருமாறு கடிதம்‌ எழுதினார்‌. 

ராமானுஜருக்கு காசநோய்‌ ஏற்பட்டது. அவரைக்‌ காணவந்த ஹார்டி, நான்‌ 1729 என்ற எண்‌ கொண்ட வாடகை மகிழுந்தில்‌ வந்தார்‌. 

இராமானுஜரின்‌ உடல்நிலை சரி இல்லாததால்‌ இந்தியாவிற்குத்‌ திரும்ப முடிவுசெய்து, 1919 மார்ச்‌ 27ம்‌ நாள்‌ மும்பைக்குக்‌ கப்பலில்‌ வந்து இறங்கினார்‌. ஏப்ரலில்‌ சென்னை வந்து சேர்ந்தார்‌. 

1920 ஏப்ரல்‌ 26ம்‌ நாள்‌ மூன்று ஆண்டாகத்‌ தீராத நோயுட்ன்‌ போராடிய இராமானுஜத்தின்‌ உயிர்‌ பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 33. 

ஆய்லராக இல்லாவிட்டாலும்‌ இராமானுஜன்‌ குறைந்தபட்சம்‌ ஒரு ஜாகோபி – லிட்டிலவுட்டு. ஆய்லர்‌ என்பவர்‌ சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த 18ம்‌ நூற்றாண்டின்‌ இணையற்ற கணிதமேதை. ஜாகோபி என்பவர்‌ 19ம்‌ நூற்றாண்டில்‌ செருமனியில்‌ வாழ்ந்த கணிதமேதை. 

கணிதத்‌ திறமையால்‌ விஞ்ஞான உலகினைப்‌ பிரமிக்கச்‌ செய்து வரலாற்றில்‌ குறிப்பிடத்தக்க ஓர்‌ இடத்தைப்‌ பெற்ற பிறவிக்‌ கணிதமேதை- இந்திராகாந்தி. இராமானுஜன்‌ சாதாரண மனிதரல்லர்‌. அவர்‌ இறைவன்‌ தந்த பரிசு – பேரா.ஈ.டி.பெல. இராமானுஜன்‌ முதல்தரமான கணித மேதை- இலண்டன்‌ ஆளுநர்‌ லார்ட்மெண்ட்‌ லண்ட்‌. 

இராமானுஜன்தான்‌ இந்த 20ம்‌ நூற்றாண்டின்‌ மிகப்பெரிய கணிதமேதை – பேராசிரியர்‌ சலியன்‌ கக்சுலி. 

1962 திசம்பர்‌ 22ம்‌ நாள்‌ இராமானுஜத்தின்‌ 75வது பிறந்த நாளை முன்னிட்டு நடுவணரசு 15 காசு அஞ்சல்தலை 25 இலட்சம்‌ வெளியிட்டது. 

வெளியிட்ட அன்றே அத்தனை அஞ்சல்தலைகளும்‌ விற்றுத்‌ தீர்ந்துவிட்டன.

1971ம்‌ ஆண்டு, பேராசிரியர்‌ இராமானுஜம்‌ அனைத்துலக நினைவுக்குழு சென்னையில்‌ அமைக்கப்பட்டது. 

சென்னையில்‌, 1972ம்‌ ஆண்டு அக்டோபர்‌ 3ம்‌ நாள்‌ அன்றைய தமிழக முதலமைச்சரால்‌ இராமானுஜம்‌ கணித அறிவியல்‌ நிறுவனம்‌ திறந்து வைக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top