குழந்தை, வகுப்பு, பாக்கு ஆகிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள் மூன்று சொற்களிலும் ‘கு’ என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை உணரலாம்.
அவ்வெழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கிறது. சொல்லின் இறுதியில் வரும்பொழுது ஒருமாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது.
கு.சு.டு.து.மு.று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுகியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
இவ்வாது தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். குறுமை+இயல்+உகரம்= குற்றியலுகரம்.
(எ.கா) காசு,எஃகு, பயறு, பாட்டு, பத்து, சால்பு
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும். வல்வினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்.
இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்,
(எகா) புகு பசு. விடு. அது, வறு, மாவு, ஏழு.