சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்! Ilakkana Tamilan

 இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பர்(ஓர் இலக்கியம் அது படைக்கப்படுகின்ற காலகட்டத்தில், படைக்கின்ற சுவிஞன் சார்த்திருக்கிற சமூகத்தின் விளைபொருளாகும்.

அவ்வகையில் புதுக்கவிதைகள் மரபார்ந்த இலக்கிய வடிவோடும், கட்டமைப்புகளிலிருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தோடும். உள்ளடக்கத்தோடும் படைக்கப்பட்டன. 

அது காலத்தின் வெளிப்பாடு கவிதை இன்பம் பயப்பதே முதன்மை என்னும் நிலை மாறி கவிதை சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் புதுக்கவிதை அதற்கு ஒரு பாலமாக திகழ்ந்தது எனலாம்.

அவ்வகையில், தமிழில் நவீன கவிதையின் உருவாக்கப் பின்புலம் என்பது பெரும்பாலும் நடுத்தர வர்க்க மனோபாவத்திலிருந்து உருவானது எனலாம்.

 செடதபற, எழுத்து, நடை போன்ற பத்திரிகைகளினால் வெளிச்சம் பெற்ற ஞானகூத்தன், பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜீ, வா.மூர்த்தி, கல்யாண்ஜி, கலப்பிரியா, தேவதச்சன், ஆனந்த், ஆத்மாநாம் ஆகியோர் தமிழ்ப் புதுக்கவிதை உலகில் ஒரு புதிய வாசலைத் திறந்தவர்கள் என்று குறிப்பிடலாம். 

இவர்கள் அனைவரும் பணிசெய்தவர்கள் அல்லது வேலை தேடிக்கொண்டிருந்த நடுத்தர வர்க்க இளைஞர்கள். இவர்கள் தங்களின் கவிதைகளின் உள்ளடக்கத்திற்கான மேலைநாட்டினரின் தாக்கத்தினைச் சார்ந்திருக்கவில்லை. இவர்களின்  

கவிதைகளின் உள்ளடக்கமாக தமிழ்நிலம், தமிழரின் வாழ்வே பிரதாளமாக அமைந்தது.

இக்காலகட்ட கவிதைகள் காதலையும் காமத்தையும் வெளிப்படையாக பேரின. வாளம்பாடி பத்திரிகை தன்னை ஒரு இயக்கமாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டதோடு “மானுடம் பாடும் வாளமபாடி” தனது தளித்த தடத்தை தமிழில் பறித்தது.

(திராவிட அழகியலின் சாரத்துடன் மாச்க்ஸீய கண்ஸோட்டத்துடன் அதன் கவிதைப் போக்கு அமைந்திருந்தது. இயக்க ரீதியிலான தொளியில் அதன் கவிதைகள் இருந்தாலும் புவியரசு, சிற்பி, கங்கை, தமிழ்நாடன், ஞாளி போன்றோரின் கவிதைகளில் ஒரு தனித்தன்மை இருந்தது. இவர்களை அடுத்து வந்த மனுரையபுத்திரன் ரவி சுப்பிரமணியன், கனிமொழி, ஃபபிரான்சிஸ் கிருபா ஆகியோரின் கவிதைகளில் பழமையும் புதுமையும் கலந்து வெளிப்படுகின்றன.

பாமரனுக்குப் புரியாமையும், இருண்மைப் பண்பும் நவீன தமிழ்க் கவிதையில் வெளிப்படுவதாகத் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு சிறந்த கவிதையின் பண்பென்பது சொல்லியதை விடவும் சொல்லாததன் மூலமே மேலும் பலவற்றை உணர்த்தும் தன்மை கொண்டதாக உள்ளது. இறுக்கமான சொற்கள், கச்சிதமான வரிகள், வெற்று அழகியலைத் தூக்கிப் பிடிக்காத உள்ளடக்கம் என்பதுதான் இைைறய கவிதைகளின் தனித் தன்மைகள் என்று நாம் குறிப்பிட முடியும்.

1990 களில் தமிழக் கவிதை ஒரு சிறந்த இடத்தினை வகிக்கத் தொடங்கியது என்றே குறிப்பிடலாம். இக்காலகட்டத்தில் எழுதியவர்கள் சமூகத்தின் பல்வேறு தளத்திலிருந்தும் பிரிவுகளிலிருந்தும் என மிகப் பரந்துபட்ட தளத்திலிருந்து எழுதியவர்கள் ஆவர் இக்காலகட்டத்தில் பெண்கள் பலர் ஆணாதிக்கத்திற்கு எதிராக ஒலிக்கத் தொடங்கினர். சுசுருதி சுப்பிரமணியன், உமாமகேஸ்வரி, கனிமொழி, குட்டி ரேவதி, சல்மா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி ஆகியோர்’ தனித்துவமும் தீவிரமும் கூடிய குரலில் சாதனை படைத்த கவிவாணிகள் ஆவார்.

இவர்கள் வரிசையில் ரிஷி இளம்பிறை, மு. சத்யா, செ.பிருந்தா, தமிழச்சி தங்கபாண்டியன் என இன்னும் பலர் காத்திரமான பல கவிதைகளைப் படைத்து வருகின்றனர் நுகர்வு கலாச்சாரத்தையும், சந்தைமயமாக்கலையும் தங்கள் கவிதைகளில் வன்மையாக சாடும் கவிஞர்களாக, பிரேம் – ரமேஷ் சொல்ல வேண்டும். இவர்களின் கவிதைகள் நவீனத்துவம் என்னும் கோட்பாட்டுப் போக்கில் அமைந்தவை.

1990 களுக்குப் பிறகான தமிழ்க் கவிதையின் போக்கு பன்முகத்தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது. இக்காலகட்டத்தில் கவிதைகள் படிப்போரை இனங்கண்டு பட்டியலிடுவது என்பது இயலாத ஒன்றாகவே உள்ளது. 

இன்றை நாளில் தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கிறார்கள். தமிழ்க் கவிதை பற்றிய பார்வை பாத்துபட்ட ஒன்றாக உள்ளது. இயங்கை. சிங்கப்பூர், மலேசியா, நாடுகளிலிருந்தும் ஐரோப்பா, பகுதிகளிலிருந்தும் ஆஸ்திரேலியா பல என பல்வேறு கலிஞர்கள் கவிதைகள் படைக்கின்றனர். இக்கவிதைகளில் பல நல்ல கவிதைகளாகவும் இருக்கின்றன. இன்னும் பலர் இணையத்தில் எழுதிக் குளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சமூகர் குழல் போலவே இக்காலத்தில் படைக்கப்படும் கவிதைகளும் புதிர்த்தன்மை கொண்டனவாக இருக்கின்றன. இன்றைய கவிஞர்களின் யுழா வாக்கி, கடற்கரய், முகுந்தி, நாகராஜன், வா. மணிகண்டன் எனப் பலபேரைச் சொல்லலாம். இந்தப் பட்டியல் மிக நீண்டுகொண்டே போகலாம்.

இக்காலகட்டத்தில் ஓடுக்கப்பட்டவர்களின் குரல்கள் கவிதைகளாக ஓங்கி ஒலிக்க ஆரம்பித்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மராட்டி, கள்ளட தலித் எழுச்சியைப் போல தமிழிலும் தனித் எழுத்துக்கள் வீரியம் பெற்று எழுத்தன. இதற்குத் தூண்டுகோலாக இருந்தது கொண்டாட்டம் அம்பேத்கரின் நூற்றாண்டு விழா ஆண்டாண்டு காலமாக ஓடுக்கப்பட்டுக் கிடந்தவர்களின் கோபத்தின் வெளிப்பாடாக புதிய தன்மைகளுடன் தலித்திய கவிதைகள் படைக் கப்பட்டன.

குறிப்பாக விழி.பா’, இதயவேந்தன், அன்பாதவன், கண்மணிகுணசேகரன், ஆதவன் தீட்சண்யா, ரவிக்குமார், என்.டி. ராஜ்குமார் என மதிவண்ணன், எண்ணற்றோர் எழுதத் தொடங்கினர். அதுவரை பேசா பொருளையும் தங்கள் கவிதையின் பாடுபொருளாகக் கொண்டனர். அவர்களுடைய கவிதைகள் சுய அனுபவத்தின். வலிகளின், துயரங்களின், ஏமாற்றங்களின் வெளிப்பாடாக, கிளர்ச்சியின் வடிவமாக வெளிப்பட்டன.)

இன்றைய சூழலில் மனித வாழ்க்கை பல சவால்கள் கொண்டதாக இருக்கிறது. அதற்கேற்ற வகையில் கவிதையின் உள்ளடக்கமும், மொழியும் புதிய தன்மைகளைக் கொண்டதாக வெளிப்படுகிறது. இருப்பினும் முள்ளெப்போதும் போலவே தமிழ்ச் சமூகம் பன்மூகத் தளங்களில் பல புதிய கவிதை முயற்சிகளையும், ஆக்கங்களையும் செய்து வருகிறது.

தமிழ்க் கவிதையின் வரலாற்றை ஒரு சிறிய பகுதிக்குள் சுருக்கிச் சொல்லிவிட இயலாது. சில தகவல்கள் மட்டும் இங்கு தரப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலும் பல தகவல்ளை நீங்கள் முயன்று கற்றிட வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top