ஜவ்வாதுமலை பழங்குடியின முதல் நீதிபதியான ஸ்ரீபதி! Ilakkana Tamilan

முதல் பழங்குடியின நீதிபதியான ஜவ்வாதுமலை பெண்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ஜவ்வாது மலை. இந்த ஜவ்வாது மலையின் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த ஜவ்வாது மலையில் புலியூர் கிராமத்தில் இருந்து வந்த ஸ்ரீபதி என்கிற ஒரு பெண் தற்போது நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்திலேயே முதல் பழங்குடியின நீதிபதி என்கிற பெருமை ஸ்ரீபதி அவர்களுக்கு சேரும். 
நமது இந்திய நாட்டின் குடியரசு தலைவர் பதவியை பழங்குடியினத்தைச் சார்ந்த திருமதி திரௌபதி முர்மு அவர்கள் அலங்கரிப்பது போல் தற்போது தனது கடின உழைப்பினால் 23 வயதிலேயே நீதிபதியாக உயர்ந்துள்ள  ஸ்ரீபதி அவர்களுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞரணி மேம்பாடுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் வெளியேற்று அறிக்கையில் ஸ்ரீபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல், நமது திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை என்கிற கோட்பாட்டில் ஸ்ரீபதிக்கு பதவி கிடைத்ததாக பாராட்டியுள்ளார். 
  ‘சுதந்திரம் கிடைத்து எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்தும், அடிப்படை வசதிகள் இல்லாமல், அவசர மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லக் கூட சாலைகள் இல்லாமல், டோலி கட்டித் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில், தமிழகத்தில் உள்ள பல மலைக்கிராமங்களை வைத்துக் கொண்டு, போலி சமூக நீதி பேசிக் கொண்டிருக்கும் தமிழக ஆட்சியாளர்கள், இனியாவது பழங்குடி சமூக மக்களுக்கான வசதிகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுக்க முன்வர வேண்டும். ‘  – தமிழ்நாடு BJP பொதுத்தலைவர் அண்ணாமலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top