தமிழ் இலக்கிய புதுமை :
சுதந்திரத்திற்குப் பின் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி பன்முக ஆற்றல் பெற்று விளங்குகிறது. உரைநடை நூல்களும் செய்யுள் நூல்களும் பெருகியுள்ளன.
சிறுகதை, நாவல் துறை உலகத்தின் எந்த மொழியோடும் போட்டியிடும். அளவிற்கு வளர்ந்துள்ளது. மொழி பெயர்ப்பு இலக்கியங்களும் விஞ்ஞாள இலக்கியமும் வேகமாக வளர்ந்து வருகின்றன.
ஆ. சிங்காரவேலு முதலியார் என்பார் அபிநாள சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தையும், அட்டாவதானம் வீராசாமி செட்டியாச் விநோதரச மஞ்சரி என்னும் கதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டனர்.
பூண்டி அரங்கநாத முதலியாரின் கச்சிக் கலம்பகம், பேராசிரியர் சுந்தரம் பின்னையின் மனோன்மணியம் முதலிய நூல்கள் இலக்கியச் சுவை பயப்பன, மனோன்மனியம் நாடகம் தமிழுக்குக் கிடைத்த முதல் கவிதை நாடகம் என்றும் போற்றப்படுகிறது.
உ.வே. சாமிநாத அய்யரின் அரிய பதிப்புப் பணியால் தமிழின் பன்முகச் சிறப்புகள் வெளியாயின கிருஷ்ணமாச்சாரியாரின் அமைந்துள்ளன. சி.வை. அரிய உரைகள் வை. மு. கோபால பலருக்கும் பயன்படுவதாக தாமோதரம்பின்ளை, உவே.சா. ஆகியோரின் தமிழப்பணிகள் குறிப்பிடத்தக்கவை.
ரா. இராகளையங்கார், மு. இராகவையங்கார் என்ற பேராசிரியர்கள் சிறந்த இலக்கிய ஆய்வு நூல்களை இயற்றியுள்ளனர் நமச்சிவாயம் பிள்ளை எட்எஸ் ‘பூர்ணியிங்கம் பிள்ளை, வி களகாபை பின்னை ஆகியோர் இலக்கிய வரலாறுகளை எழுதியுள்ளனர்.
இவர்கள் தமிழ் இலக்கிய வரலாறுகளை எழுதியுள்ளனர். இவர்கள் தமிழ் இலக்கிய வரலாறுகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளது மற்றொரு சிறப்பாகும். பண்டிதமணி மு கதிரேசஞ் செட்டியார் கா. சுப்பிரமணிய பிள்ளை. த.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரும் சிறந்த தமிழ்த் தொண்டு புரிந்த அறிஞர்களாவர்
தனித்தமிழ் இயக்கம்
மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தாய் மொழிந் தூய்மை பேணிப் பாதுகாக்கப்பட்டது முநான் அல்லது அழகு போன்ற நூல்களை எழுதியவர் திரு.வி.க ஆவார். காந்தி புராணம், நிலகர் மான்மியம், வள்ளலார் சரித்திரம் போன்ற நூல்களை ஆக்கிப் புகழ் பெற்றவர்.
பண்டிதை அசலாம்பிகை அம்மையார் கே வடிவேலு செட்டியார் என்பார் திருக்குறள் பதிப்பு வெளியிட்டு புகழ் பெற்றார் மற்றொரு புகழ் பெற்ற அறிஞர் ஞாளியார் அடிகள் ஆவார் அவர் சிறந்த சமயச் சொற்பொழிவாளர்.
கவிதை வளர்ச்சி
சுதந்திரப் போரில் முன்னணியில் நின்ற M.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமணிய பாரதியாகும் தமிழுக்கும், நாடடுக்கும் ஆற்றிய தொண்டு அனப்பரியது. பாரதியாரின், தேசிய கீதங்களும், கண்ணன் பாட்டும், குவில் பாட்டும், பாஞ்சாலி சபதமும் கற்போர் தெஞ்சை விட்டு அகலாத காவியங்கள் ஆகும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கியவர் ஆவார்.
காந்தியக் கவிஞரான நாமக்கல் இராமலிங்கம் பின்னை அவளும் அவனும், பலைக்கள்ளன் போன்ற நூல்களை இயற்றி உள்ளார். தமிழ் நாட்டில் ஆஸ்தான கவிஞராகவும் விளங்கினார்.
இனிமையாக கவிதை எழுதும். ஆற்றல் வாய்ந்தவரான தேசிக விநாயகம் பிள்ளை ‘ஆசிய ஜோதி’, ‘உமர் சுயாம்’ பாடல்கள், மலரும் மாலையும் போன்ற அருமையான கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
சமுதாயச் சிந்தனை உடைய மிகச் சில சுவிஞர்களுள் பாரதிதாசன் முதன்மையானவர் இவர் எழுதிய தமிழியக்கம், பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தொகுதிகளாக வத்துள்ள ஆயிரக்கணக்கான கவிதைகள் ஆகியவை தமிழ் உணர்வை அழியாமல் காக்கும் வகையில் இன்றும் மக்களிடையே எழுச்சியினை உண்டு பண்ணும் ஆற்றல் வாய்ந்தவையாகும்.
சங்கப் பனுவல்களுக்கு உரை செய்து புகழ்பெற்ற அறிஞர்கள் ஔவை துரைசாமிப் பிள்ளையும், பொவே. சோமசுந்தரனாரும் ஆவர். தனித்தமிழ்
இயக்கத்தைக் கட்டிக்காத்து வளர்த்த தேவநேயப் பாவானார் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிட வேண்டி உழைத்தவர்.
நாவலும் சிறுகதையும்
முதல் தமிழ் நாவலை எழுதி வெளியிட்டவணி மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார். பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவலை எழுதியதன் மூலம் தமிழ் நாவல் இலக்கியத்தை அவர் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ராஜம் அய்யர், வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்கள் நாவல்களை எழுதினார்.
ஆரணி குப்புசாமி முதலியார் ரெயினால்டஸ் என்ற ஆங்கில நாவலாசிரியர் எழுதிய கதைகளைத் தழுவித் தமிழில் எழுதினார். ஆனந்த போதினி என்ற நீங்கள் எட்டில் இவரது கதைகள் வெளிவந்தன.
ஜே-ஆர். ரங்கராஜூ என்பவர் அந்நாளில் புகழ்வாய்ந்த எழுத்தாளராக இருந்து ஐந்து துப்பறியும் நாவல்களையும் எழுதியுள்ளார் சமூகக் கொடுமைகளைச் சாடி எழுதிய நாவல்கள் இவை தழுவலாகவோ மொழி பெயர்ப்பாகவோ அன்றிச் சொந்தப் படைப்பாக இவரது நாவல்கன் வெளிவந்தன கோதை நாயகி அம்மாள் மற்றொரு குறிப்பிடத்தகுந்த நாவலாசிரியை ஆவார்
கல்கி என்னும் புனைப்பெயரில் எழுதிய ரா கிருஷ்ண மூர்த்தி மக்களிடையே செய்வாக்கு வாய்ந்த நாவலாசிரியராக இருந்தார். ஆனந்தவிகடன் பத்திரிகை மூலம் உலகுக்கு அறிமுகமான அவரது பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு அலையோசை, கன்வளின் காதலி போன்ற நாவல்கள் வாசகர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு நீங்கா இடம் பெற்றுள்ளன. தி ஜானகிராமன் போன்ற சிறந்த நாவலாசிரியர்கள் தமிழ் நாவலின் உயர்வுக்கு பங்களித்துள்ளார்கள் தற்போது சிறுகதை இலக்கியத்திற்கு செழுமை சேர்க்கும் பணியில் இளைஞர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் ரசனையில் எளிமை, தெளிவு கூடிய நடையில் எழுதி நாட்டுப்பற்று, உயர்ந்த பண்புகள் ஆகியவற்றை உருவாக்கியவர் அகிலன். இவரது நாவலான சிந்திரப்பாவை ஞானபீடப் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் புதுமைப்பித்தன் ஆவார். இவர் எழுதிய பல சிறுகதைகள் இறவா நிலை அடைத்த உயர்த்த கதைகளாகும். மற்றும், மௌளி, அசோகமித்திரன் லா.ச.ராமாமிர்தம், தி. ஜானகிராமன் சுந்தரராமசாமி.
ஜெயகாந்தன், பூமணி, சிவகாமி; சா சுந்தசாமி, ராஜம் கிருஷ்ணன், அறிவியல், குற்றங்கள், மற்றும் புதுமைக் கண்ணோட்டங்களை இணைத்து எழுதிய சுஜாதா போன்ற எண்னாற்ற எழுத்தாளர்கள் தமிழ் நாவல், சிறுகதை இலக்கிய உலகை வளப்படுத்தியுள்ளனர். மேலும் அண்ணா, கருணாதிதி, கண்ணதாசன், அகிலன், நா. பார்க்கசாரதி. மு. வாதராசனார் போன்ற பழம்பெரும் எழுத்தானாகளும் தமிழில் எழுதி தமிழுக்குப் புகழ் சேர்த்த எழுத்தாளர்களாக விளங்குகின்றனர்.
அண்மைக் காலப்புதின இலக்கியப் போக்குகள் தொடக்க காலத்தில் தமிழ்ச் சூழலில் குடும்ப நாவல்கள், சமுதாய நாவல்கள், உளவியல் நாவல்கள், வரலாற்று நாவல்கள் துப்பறியும் கதைகள் என்று பல அடையாளங்களோடு எழுதப்பட்டன.
அடுத்து வந்த காலங்களில் நாஞ்சில் நாட்டு இலக்கியம், கொங்கு இலக்கியம், கரிசல் காட்டு இலக்கியம், விளிம்பு நிலை இலக்கியம் என்ற அடையாளங்களோடு வந்தன. இப்போது பெண்ணியம், நலிந்தியம், விளிம்பு நிலை. ஒடுக்கப்பட்டடோர் இலக்கிலம். மேஜிக் அடையாளங்களோடு நாவல்கள் வருகின்றன.
ரியலிசம் என்ற தமிழ் நாவவ் வாலாற்றில் எப்போதுமே இரண்டு விதமான போக்குகள் தொடர்ந்து நிலவி வருகிறது. வெகு ஜன எழுத்தாளர்கள் எழுதுநிற நாவல்கள், தீவிர இலக்கியம் என்று எழுதுகிற நாவல்கள் இன்று தமிழ் நாவல் உலகம் என்பது விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையும் மொழியுமாக நிரம்பி இருக்கிறது.
நாளலில் இதையெல்லாம் எழுதலாமா? இப்படியான மனிதர்களுடைய கதைகளை எல்லாம் நாவலாக எழுதலாமா, இப்படி யெல்லாம் எழுதப்படுவது நாவலா, இப்படியான மொழியில் எழுதப் படுவதெல்லாம் நாவவா, கலையா, உன்னத இலக்கியமாகுமா என்ற கேள்விகள் எல்லாம் தற்போது எழவில்லை.
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம நாவல் எழுதவாம் என்ற நிலை யாரி வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை உள்ளது.
இலக்கியப் பத்திரிக் கைகளைப் படித்திருக்க வேண்டும். இலக்கிய நூல்களைப் படித்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் களாய்தான் நாவல் எழுத முடியும் என்ற நிலையை இன்றைய பல தமிழ் நாவலாசிரியர்கள் மாற்றி இருக்கிறார்கள் என்பது நவீன தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
அண்மைக் காலச் சிறுகதைகள் இலக்கியப் போக்குகள் 1980-90 காலகட்டத்திற்கு பின்னர், படைப்பு சார்ந்தும், படைப்பு மொழி சார்ந்தும், தமிழ்ச் சிறுகதையில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அடித்தட்டு மக்களும், விளிப்பு நிலை மக்களும், அவர்களுடைய மொழியும் இலக்கியமாக்கப்பட்டது.
இக்கால கட்டத்தில் தான் சமூகத்தின் பலநசப்பு வாழ்க்கை முறையும் இலக்கியாவின் பழைய எழுத்தாளர்களிடம் காணப்பட்ட உத்தி சார்ந்த மயக்கங்கள். பிரமைகள், உதிர்த்து போயின். கதைப் பரப்பும், அனுபவமும் விரித்த தளத்தில் இருந்தது; புதிய புதிய கதைக் களங்களைத் தேடி எழுத்தாளர்கள் தகர்த்தவாறே இயங் வருகின்றனர்.
வால்மொழி மரபும், வட்டார வழக்கும். இனக்குழு வரலாறுகளும் கூடுதல் கவனம் பெற்றதோடு அதிகமாக எழுதப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாகத் தலித்தியம், பெண்ணியம் என்ற கோட்பாடுகளால் எழுச்சிபெற்று எழுந்த இலக்கியங்கள் தமிழ் சிறுகதைக்குப் புதிய முகத்தைக் கொடுத்துள்ளன.
தற்காலத்தில் தமிழ்ச் சிறுகதை வடிவம் காட்டாறு வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஓட்டத்திற்குச் சமூக ஊடகங்களும் களங்களாக உள்ளன. இவற்றின் தரம் பற்றிக் காலம் நாள் முடிவு செய்யும்.
பாரதிக்குப் பிள் தமிழ்க் கவிதை
பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை பாரதிதாசன், சுரதா, கண்ணதாசன் முடியாசன், பொன்னி வளவன், வானிதாசன், பட்டுக்கோடடைக் கல்யாண சுந்தரம், புலவர் குழந்தை போன்றோர் பரபு வழக்கினால் சீரிய முறையில் வளர்க்கப்பட்டுள்ளது.
மரபு வழியிலிருந்து, மாறிப் புதிய வழியைத் தோற்றுவித்துக் கொண்ட புதுக்கவிஞர்கள் பாரதியின் வசன கவிதையின் வழி நின்றும், B பிச்சமூர்த்தியின் பின் சென்றும், தமிழ்க்கவிதை வரலாற்றில் புதுமை சேர்க்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.
இவ்வகையில் அப்துல் ரகுமாள். சிற்பி, மீரா, மேத்தா, ஈரோடு தமிழன்பன், நா: காமராசன், விக்கிரமாதித்தன், கல்யான்ஜி, ஞானக்கூத்தன் போன்ற கணக்கிலடங்காக் கவிஞர் குழாம் இன்று புதுக்கவிதை இயக்கத்தை நடத்தி வருகின்றது.
நவீன இலக்கிய விமர்சனம்
சிறந்த இலக்கிய விமர்சனம் இன்றி மொழியின் வளர்ச்சிப் போக்கு சாத்தியமில்லை. பல கருத்து வேற்றுமைகளுக்கு உரியவராயினும் கூநா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா என்ற இரு இலக்கிய அறிஞர்கள் நவீன இலக்கிய விமர்சனத்தைத் துவக்கி வைத்தனர்.
‘எழுத்து’ என்ற பத்திரிகையைத் தொடங்கி சி.சு. செல்லப்பாவும், மணிக் கொடியின் தொடக்கத்தில் பங்கேற்ற க.நா.சுப்பிரமணியமும் தமிழுக்கு நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்விக்க அரும்பாடுபட்டனர்.
மார்க்சியம் சார்ந்த ‘சரஸ்வதி’ சிற்றேடு தேசியம் சார்ந்த மணிக்கொடியும் தொடங்கி வைத்த இலக்கிய விமர்சனப் போக்கு வளர்ந்தது. ந. முத்துசாமி, ஞானக்கூத்தன், சா. கந்தசாமி முதலியோர் தொடங்கிய ‘கசடதபற’ புந்நிலக்கியப் போக்கிற்கு வழிவகுத்தது. இன்று பல மேல்நாட்டுத் நடங்கள் சார்ந்து வெளிவரும் பத்திரிகைகளுள் ‘காலச்சுவடு’ குறிப்பிடத்தக்கது.
நாடகமும் திரைப்படமும்
(விஜய ஆட்சிக் காலத்தில் தெலுங்கு மொழிலின் ஆதிக்கம் மேம்பட்டிருந்ததால் தமிழரின் பழம்பெரும் கூத்து முறை வழக்கொழிந்து விட்டது. தெலுங்குப் பாடல்களும், தெலுங்குக் கூத்துகளுள் தமிழ்நாட்டில் இடம் பிடித்துக் கொண்டன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுன்னையா சீனிவாசப் பிள்ளை. ஆஞ்சநேயலு முதலியவர்கள் நாடகக் கலையை ஊக்குவிக்க நாடகக் குழுக்களை முயன்று தொடங்கினர்.
இராமாயளாம், பாரதம் மற்றுமுன்ன புராணக் கதைகளே நாடகங்கனாக நடிக்கப்பெற்றன. நாடகம் பெரும்பாலும் அமைந்திருந்து, இசை பாட வல்லவர்களே நடிகராக வெற்றி பெற்று விளங்க முடியும் என்ற நிலை இருந்தது. பாடல்களாகவே
பின்னர் சிறுவர்களைக் கொண்ட நாடகக் குழு அமைக்கப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கலையின் தந்தை எனப் போற்றப்படுகிறார் பம்மல் சம்பத்த முதலியார் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றியுள்ளார்.
இவரால் உருவான சென்னை ‘சுகுண விலாச சபை’ என்ற நாடகக் குழு சிறந்த நாடகங்களை அரங்கேற்றி பெருந் தொண்டாற்றியுள்ளது. வழக்கறிஞர் பட்டம் பெற்றவரான இவர் நாடகத்தில் ஈடுபட்டதால் நாடக வாழ்க்கை இழிவானது என்ற எண்ணம் மக்களிடையே மறையலாயிற்று.
அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி முதலியோர் எழுதிய சமூக, அரசியல் பிரச்சார நாடகங்கள் மக்களால் எம்.ஆர்.ராதா. சோ இராமசாமி. வர வேற்கப்பட்டன. டி.கே.சண்முகம், மனோகர், நவாப் ராஜமாணிக்கம் போன்றோரின் நாடகக் குழுக்கள் குறிப்பிடத் தகுந்த சாதனைகளைப் புரிந்துள்ளன.
நகைச்சுவையே முக்கியம் எனக் கொண்டுகிரேஸி மோகள், போன்றோர் குழுவாக வரவேற்பைப் பெற்றனர். இயங்கி நாடகங்களை பேடையேற்றி மக்கள் மேற்கத்திய நாடக அமைப்புக்கு ஈடாகத் தமிழில் நாடகங்கள் இல்லை என்ற குரல் எப்போதும் உண்டு, தமிழில் முழுமையான நாடக அமைப்புடன் பெ. சுந்தரம் பிள்ளை ‘மனோன்மணீயம்” என்ற முதல் நாடகத்தை எழுதினார்.
1960ம் ஆண்டுகளில் கே, பாலசந்தர் தாம் எழுதி இயக்கிய நாடகங்களில் வெற்றி கண்டார். சிறந்த நாடகாசிரியராகத் தம்மை வெளிப்படுத்தியுள்ள இந்திரா பார்த்தசாரதி தமது ‘இராமானுஜர்’ நாடகத்துக்குத் தமிழில் முதல் முறையாக ”சரஸ்வதி சம்மான்’ விருது பெற்றுத் தமிழுக்குப் பெருமை சேர்த்துளளார்.
1916ல் திரைப்படங்கள் தமிழகத்தில் வெளிவரத் தொடங்கின முதலில் பேசாத படங்களாக இருந்த அவை 1932ல் பேசம் படங்களாயின. பின்பு வண்ணப் படங்களாயின. மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற அப்படங்களின் செல்வாக்கால் மூன்று திரையுலக நடிகர்களான எம்.ஜி-ஆர், வி.என்.ஜானகி, செல்வி ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக உயர்ந்தனர்.
இன்று மக்களின் பெரிய பொழுது போக்காகவும் கருத்து விளக்கக் கருவியாகவும் திரைப்படம் ஆற்றல் பெற்று விளங்குகிறது. சென்னை தென்னிந்தியாவின் திரைப்படத் தயாரிப்பின் மையமாகத் நிகழ்கிறது.
திரையாங்குகளில் திரைப்படங்களை வெளியிட்ட நிலை மாறி இணையத் தளங்கள் வழி டிஜிட்டல் முறையில் ஓடிடி தளங்களில் திரைப்படங்களை வெளியிடும் போக்கும், மல்டிப்பிளக்ஸ் தியேட்டர் என்று சொல்லக்கூடிய பல்லடுக்கு திரையரங்குகளும் அவற்றைச் சார்ந்து வணிக வளாகங்களும் என திரைப்படம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் பெருமனவில் வளர்ச்சிப் பெற்றுள்ளன.