முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி!
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில உருது அகாடெமியும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும் இணைந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை எதிர்வரும் 09.02.2024 அன்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடத்தவுள்ளன.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணாக்கர்கள் மற்றும் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை, சென்னை-15, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், சென்னை-ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு ‘உலகளாவிய நிலையில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பங்களிப்புகள்” என்னும் தலைப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழில் தனித் தனியே பேச்சுப் போட்டி எதிர் வரும் 07.02.2024 அன்று காலை 10.30 மணியளவில் கல்விப் புல வளாகத்திலுள்ள திருவள்ளுவர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் பேச்சுப் போட்டியில் பங்குபெறும் மேற்கண்ட மூன்று கல்வி நிறுவனங்களின் (தனித் தனியே) மாணாக்கர்களில் முதல் மூன்று இடம் பெறும் மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் 09.02.2024 அன்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.
இந்தப் பேச்சுப் போட்டியில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளந்தலைமுறை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளலாம்.
பேச்சுப்போட்டி நடைபெறும் நாள் இடம் :
திருவள்ளுவர் அரங்கம், கல்விப் புல வளாகம் (ஆறாம் தளம்) : தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை -15.
தமிழ் : 07.02.2024 காலை 10.30 மணி
ஆங்கிலம் : 07.02.2024 பிற்பகல் 2.30 மணி
தலைப்பு: உலகளாவிய நிலையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பங்களிப்புகள்.
TOPIC: THE SERVICES OF MUTHAMIZH ARIGNAR Dr. KALAIGNAR TOWARDS THE PROMOTION OFTAMIL LANGUAGE AT GLOBAL LEVEL.
மேலும் விவரங்களுக்கு: முனைவர் மு. வையாபுரி -9444603124, முனைவர் சு. அரங்கநாதன் – 9894621706