தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன? Ilakkana Tamilan

  தொகாநிலைத்தொடர்

ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.

எ.கா காற்று வீசியது குயில் கூவியது

முதல் தொடரில் காற்று” என்னும் எழுவாயும் “வீசியது என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது.

அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது.

தொகாநிலைத் தொடரின் ஒன்பது வகைகள் 

1. எழுவாய்த்தொடர்

எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.

இனியன் கவிஞர் -பெயர்

காவிரி பாய்ந்தது – வினை

பேருந்து வருமா?- வினா

மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர். வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.

2.விளித்தொடர்

விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.

நண்பா எழுது! ‘நண்பா’ என்னும் விளிப்பெயர் ‘எழுது என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.

3.வினைமுற்றுத்தொடர்

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது விலைமுற்றுத்தொடர் ஆகும்.

பாடினாள் கண்ணகி

‘பாடினாள்” என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.

4. பெயரெச்சத்தொடர்

முற்றுப் பெறாத வினை. பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.

கேட்ட பாடல் “கேட்ட” என்னும் எச்சவினை ‘பாடல் என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.

5. வினையெச்சத்தொடர்

முற்றுப் பெறாத வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும். வினை.

பாடி மகிழ்ந்தனர் -‘பாடி என்னும் எச்சவினை மகிழ்ந்தனர்’ என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.

6.வேற்றுமைத்தொடர்

வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.

கட்டுரையைப் படித்தான். இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருனை உணர்த்துகிறது.

அன்பால் கட்டினார் -(ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் அறிஞருக்குப் பொன்னாடை -(கு) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *