தொடருக்கு ஏற்ற வினாத் தொடர் அமைக்க – தமிழ் இலக்கணம்

கொடுக்கப்பட்ட சொற்றொடரில் இருந்து வினாக்கள் எழுப்புதல் – தமிழ் இலக்கணத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எந்த சொற்றொடராயினும் அதற்கு ஏற்ற வினாக்கள் அமைக்க முடியும். இதுவே தொடருக்கு ஏற்ற வினா அமைத்தல் என அழைக்கப்படுகிறது.

தொடருக்கு ஏற்ற வினாத் தொடர் அமைக்க - தமிழ் இலக்கணம்

இப்போது சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் வாருங்கள்! 

1) பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் பெரியார்.

விடை :

பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்? 

2) பெரியார் பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தார். 

விடை :

பெரியார் எதை ஏற்க மறுத்தார்?

3. செய்திப் படங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம்.

விடை :

செய்திப்படங்கள் வாயிலாக நிகழ்வுகளை எங்கு கண்டு களிக்கலாம்?

4) திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது.

விடை :

ஒளிஒலிப் படக்கருவியின் பயன் யாது?

5) தமிழர்கள் அரபுநாட்டுடனும், யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

விடை :

தமிழர்கள் எந்தெந்த நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்?

6) காந்தியடிகள், பலகோடி மக்களின் பட்டினியைப் போக்கும் வாழ்வாதாரம் கதர் என்று கருதினார்.

விடை :

காந்தியடிகள், பலகோடி மக்களின் பட்டினியைப் போக்கும் வாழ்வாதாரம் என்று எதைக் கருதினார் ?

 7)  இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், தெய்வப்பற்றும் வளரும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.

விடை :

கல்வி எவ்வாறு அமைதல் வேண்டும்?

8) இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இளங்கலைக் கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம்.

விடை :

பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரத் தகுதி என்ன? 

9. தொழில்நுட்பப் பயிலகத்தில் பயில்வோர்க்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.

விடை :

எத்துறையில் பயில்வோர்க்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன?

10, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பணிகளில் இருபது விழுக்காடு ஒதுக்கித் தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.

விடை :

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் எத்தனை விழுக்காடு ஒதுக்கித் தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது?

11. சென்னையில் உள்ள கந்தகோட்டத்து இறைவனை இராமலிங்கர் மனமுருகிப் பாடி மகிழ்வார்.

விடை :

இராமலிங்கர் எந்த இறைவனை மனமுருகிப் பாடி மகிழ்வார்? 

12. மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர் காந்தியடிகள் என்பது உலகறிந்த செய்தி.

விடை :

 காந்தியடிகள் பற்றி உலகறிந்த செய்தி யாது?

13. காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதைக் கண்டார்.

விடை :

காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது எதனைக் கண்டார்?

14.தென்னாப்பிரிக்காவில் இந்தியர்க்கு எதிரான கருப்புச் சட்டங்களைக் காந்தியடிகள் கொளுத்தியதால் சிறையில் அடைக்கப்பட்டார். 

விடை :

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் சிறையில் அடைக்கப்பட்டதன் காரணம் என்ன?

15. இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்று, தெய்வப்பற்று. மொழிப்பற்று வளரும் வகையில் சுல்வி அமைதல் வேண்டும். 

விடை :

இளைஞர்களின் உள்ளத்தில் கல்வி எவ்வாறு அமைதல் வேண்டும்?

16.ஈகத்தின் (தியாகம்) உச்சியில் நின்றவர் காந்தியடிகள்.

விடை :

 காந்தியடிகள் எத்தகைய பண்பில் உச்சியில் நின்றவர்?

 17. தமிழர், தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்பப் பாகுபடுத்தி உள்ளனர். 

விடை :

தமிழர், தம் வாழிடங்களை எத்தன்மைக்கேற்பப் பாகுபடுத்தி உள்ளனர்?

18. மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடு முட்டியதால், அவரின் குடல் சரிந்தது. 

விடை :

மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தை குடல் சரியக் காரணம் என்ன?

19. தமிழர்கள் பரந்துபட்ட அறிவியல் சிந்தனை உடையவர்கள்.

விடை :

தமிழர்கள் எத்தகைய சிந்தனை உடையவர்கள்? 

20. தமிழர்கள். அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள்.

விடை :

தமிழர்கள் எவ்வாறு வாணிகம் செய்தார்கள்?

 21) தமிழர்களுக்குச் சாவக நாட்டுடனும் கடல் வாணிகத் தொடர்பு இருந்தது.

விடை :

தமிழர்களுக்கு எந்த நாட்டுடன் கடல் வாணிகத் தொடர்பு இருந்தது?

22) மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று.

விடை :

மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கருவியாக அமைந்தது எது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top