நன்னூல் அறிமுகம் :
அகத்தியர் இயற்றிய ‘போகத்தியம்‘ தமிழில் எழுதப்பெற்ற முதல் இலக்கண நூலாகும். இந்த நூல் இப்போது கிடைக்கப்பெறவில்லை.
இந்நூலுக்கு வழி நூலாகத் தோன்றியது தொல்காப்பியர் இயற்றிய ‘தொல்காப்பியம்‘ எனும் இலக்கண நூலாகும்.
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் – எனும் மூன்றைப் பற்றிய இலக்கணச் செய்திகளை விரிவாகக் கூறுகின்றது.
இந்நூல் மிகப் பரந்ததாகவும் கடினமானதாகவும் இருப்பதால், அனைவரும் எளிதாகப் பயில இயலாததாகவுள்ளது.
எனவே. அதனைத் தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் பவணந்தி முனிவர் ‘நன்னூல் எனும் பெயரில் ஓர் இலக்கண நூலை ஐ இயற்றியருளினார்.
நன்னூல் இயற்றப்பெற்ற காலம் கி.பி. 13 நூற்றாண்டின் முற்பகுதியாகும். நன்னூல், தொல்காப்பியத்திற்கு வழிநூலும், அகத்தியத்திற்குச் சார்பு நூலுமாகும்..
நன்னூல் – கட்டமைப்பு :
நன்னூல் ஆனது
- பாயிரம்,
- எழுத்ததிகாரம், j
- சொல்லதிகாரம்
ஆகிய மூன்றுப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பாயிரம்:
இப்பகுதியில் நூல், நூலாசிரியர் பற்றிய வரலாறுகளைக் கூறும் ‘சிறப்புப்பாயிரம்‘ தொடக்கத்திலும், அதனையடுத்து நூல், நூலாசிரியர் முதலிய ஐவகைக் கூறுகளை விரிவாகக் கூறும் “பொதுப்பாயிரமும்” அமைத்துள்ளன. பொதுப்பாயிரத்தில் 55 நூற்பாக்கள் உள்ளன.
எழுத்ததிகாரம்:
முறையாக நூல் தொடங்குவதே இவ்வதிகாரத்திலிருந்துதான் எனக் கூறலாம். இவ்வதிகாரத்தின் தொடக்கத்தில் அருகதேவனைப் போற்றி வழிபடும் ‘கடவுள் வாழ்த்து’ அமைந்துள்ளது. இவ்வதிகாரத்தில் ஐந்து இயல்கள் அமைத்துள்ளன.
*முதலிலுள்ள எழுத்தியலில் 72 நூற்பாக்களும்.
*இரண்டாவதாக அமைந்துள்ள பதவியலில் 23 நூற்பாக்களும்,
*மூன்றாவதாக அமைத்துள்ள உயிரீற்றுப் புணரியலில் 53 நூற்பாக்களும்,
*நான்காவதாக அமைந்துள்ள மெய்யீற்றுப் புணரியலில் 36 நூற்பாக்களும்,
*ஐந்தாவதாக அமைந்துள்ள உருபு புணரியலில் 18 நூற்பாக்களும்-ஆக இவ்வதிகாரத்தில் 202 நூற்பாக்கள் அமைந்துள்ளன.
சொல்லதிகாரம்:
இவ்வதிகாரத்தின் தொடக்கத்திலும் அருகதேவனைப் போற்றி வணங்கும் ‘கடவுள் வாழ்த்து’ அமைந்துள்ளது. இவ்வதிகாரத்திலும் ஐந்து இயல்கள் அமைந்துள்ளன.
*முதலாவதாக அமைந்துள்ள பெயரியலில் 62 நூற்பாக்களும்,
*இரண்டாவதாக அமைந்துள்ள வினையியலில் 32 நூற்பாக்களும்,
* மூன்றாவதாக அமைந்துள்ள பொதுவியலில் 68 நூற்பாக்களும்,
*நான்காவதாக அமைந்துள்ளன இடையியலில் 22 நூற்பாக்களும்,
* ஐந்தாவதாக அமைந்துள்ள உயிரியலில் 21 நூற்பாக்களும் ஆக, இவ்வதிகாரத்தில் 205 நூற்பாக்கள் அமைந்துள்ளன.
• நன்னூலில் மொத்தம் 55+202 + 205 = 462 நூற்பாக்கள் அமைந்துள்ளன.
நன்னூலுக்கு முதன் முதலாக உரையெழுதியவர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த மயிலை நாதர் என்பவராவார்.
அதன் பின்னர் சங்கர நமச்சிவாயர், சிவஞான முனிவர், இராமானுசக் கவிராயர், விசாகப் பெருமாளையர், ஆறுமுகநாவலர் முதலியோர் உரையெழுதியுள்ளனர்.
இந்நாலுக்குத் தற்போது நாற்பதுக்கும் மேற்பட்ட உரைகள் உள்ளன எனக் கூறுகின்றனர்.