* பாம்பினம், உலகில் மனித இனம் தோன்றுவதற்குப் பத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
* பாம்புகள் ஊர்வன வகையைச்சார்ந்தவை.
* பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். சில பாம்புகள் மட்டும் குட்டிபோடும்.
* உலகம் முழுக்க 2750 வகைப்பாம்புகள் இருக்கின்றது.
* இந்தியாவில் மட்டும் 244 வகைப்பாம்புகள் காணப்படுகிறது.
* பாம்பு வகைகளில் 52 வகைப்பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை இருக்கிறது.
* இந்தியாவில் உள்ள இராஜநாகம்தான் உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு.15 அடி நீளமுடையது.
* கூடுகட்டி வாழும் ஒரே வகைப் பாம்பு இராஜநாகம்.
* இராஜநாகம், மற்றப் பாம்புகளையும்கூட உணவாக்கிக் கொள்ளும்.
* பாம்பு, தான் பிடிக்கும் இரையைக் கொல்லவும், செரிப்பதற்காகவும் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்திருக்கிறது.
* பாம்புக்குக் காது அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை. காற்றில் வரும் ஓசைகளைப் பாம்பினால் கேட்க இயலாது.
* தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து, அதன்மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.
* பாம்புகளால் உழவர்களுக்குப் பெறியநன்மைகள் இருக்கின்றன. வயலில் உள்ள பயிர்களை எலிகள் அழிக்கின்றன.
* எலிகளை அழிப்பதில் பாம்புகளுக்குப் பெரும்பங்கு உண்டு.
* பாம்புகள் இரையை மென்று தின்பதில்லை. அப்படியே விழுங்கிவிடுகின்றன.
* ஒரு பாம்பைக் கொன்றால், அதன் இணைப் பாம்பு பழிவாங்கும் என்று சொல்வது உண்டு. இது உண்மை அல்ல.
* கொல்லப்பட்ட பாம்பின் உடம்பில் இருந்து வெளியேறும் ஒருவகை வாசனைப் பொருள், மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது.
* பாம்பு, தன் நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்துகொள்கிறது.
* நல்லபாம்பின் நஞ்சு, கோப்ராக்சின் என்னும் வலி நீக்கி மருந்து செய்யப் பயன்படுகிறது.
* தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதனைத் தடுக்க, இந்திய அரசு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972ன்படி, சட்டம் நிறைவேற்றி உள்ளது.