பெயர்கள் என்றால் என்ன? அதன் வகைகள்?

 பெயர்கள்:

பெயர்களை இடுகுறிப்பெயர். காரணப்பெயர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

இடுகுறிப் பெயர் : 

ஒரு பொருளைக் குறிப்பதற்குக் கடவுளால் / முன்னோரால் பிரிக்கலாம்.இட்டு வழங்கப்பெறும் குறியாகிய பெயர். 

 எடுத்துக்காட்டு-மரம், நீர், காற்று – போல்வன

.

காரணப்பெயர்

ஒரு பொருளைக் குறிப்பதற்கு ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில் இட்டு வழங்கப்பெறும் குறியாகிய பெயர்.

எடுத்துக்காட்டு – வளையல், அணி, நாற்காலி – போல்வன.

பெயர்களைப் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் – என, மேலும் வேறு இரண்டு வகைகளாகப் பகுக்கலாம். 

பொதுப்பெயர்

பல பொருள்களுக்கும் பொதுவாக வழங்கும் பெயர்.

எடுத்துக்காட்டு-மரம் (பல வகைப்பட்ட மரங்களுக்கும் வழங்கும் பொதுப் பெயர்)

சிறப்புப் பெயர் :

 ஒரு பொருளுக்குச் சிறப்பாக வழங்கும் பெயர். 

எடுத்துக்காட்டு-வேம்பு (பல) வகைப்பட்ட மரங்களுள், சிறப்பாக ஒரு வகை மரத்திற்கு வழங்கும் பெயர்).

பெயர் வகைகள் : 


இடுகுறி, காரணம் – எனும் இரண்டு வகைப்பெயர்களையும் பொது, சிறப்பு – எனும் இரண்டு வகைப்பெயர்களோடு சேர்த்து உறழ்ந்தால்

 1. இடுகுறிப் பொதுப்பெயர், 2. இடுகுறிச் சிறப்புப் பெயர், 3. காரணப் பொதுப் பெயர், 4. காரணச் சிறப்புப்பெயர் – எனும் நான்கு வகைப் பெயர்கள் கிடைக்கும்.

 இடுகுறிப் பொதுப்பெயர்: 


எத்தகைய காரணமும் கருதாது. பலவகைப் பொருள்களையும் குறிக்கும் பொதுப்பெயராக வழங்குவது. 

 எடுத்துக்காட்டு- மரம்,மா-போல்வன.

இடுகுறிச் சிறப்புப் பெயர்;


 எத்தகைய காரணமும் கருதாது. பலவகைப் பொருள்களில் ஏதேனும் ஒரு வகைப் பொருளுக்கே சிறப்புப்பெயராக வழங்குவது.

எடுத்துக்காட்டு– வேம்பு ,பலா போன்றன 

காரணப் பொதுப் பெயர்

ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையல், பல வகைப் பொருள்களையும் குறிக்கும் பொதுப் பெயராக வழங்குவது. 

எடுத்துக்காட்டு-அணி போல்வன

காரணச் சிறப்புப் பெயர்

ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில், பலவகைப் பொருள்களில் ஏதேனும் ஒரு வகைப் பொருளுக்கே சிறப்புப் பெயராக வழங்குவது.  

  எடுத்துக்காட்டு-வளையல், சிலம்பு போல்வள,

‘இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின.” (நூற்பா.62)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top