நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்கிற கட்சியை நடத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக புதிய கட்சி ஒன்று துவங்கி அரசியலில் ஈடுபட்டார்.
அதன் பிறகு பரபரப்பான அரசியல் பிரச்சாரங்கள் பலவற்றை செய்தார். ஆனால் இன்னும் அரசியலில் ஆட்சியை பிடிக்கவில்லை. எந்த ஒரு அரசியல் அதிகாரத்தையும் பெறவில்லை.
அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு அவரது ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படம் ஒன்றை கொடுத்து மீண்டும் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
விக்ரம் திரைப்படம் அவர் நடித்த திரைப்படங்களிலே சிறந்த திரைப்படம் ஆகவும் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாகவும் வந்தது.
தற்போது அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகிறது.படத்தை தயாரிக்கவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 150 கோடி ஒவ்வொரு படத்திற்கும் பெறுகிறார்.
இவர் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்று மீண்டும் சினிமாவுக்கு உலாவிக்கொண்டு அரசியலையும் பகுதி நேர வேலையாக செய்து கொண்டிருந்தது மக்கள் மத்தியில் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளானது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் பத்திரிக்கையாளர் ஒருவர் ‘நீங்கள் முழுநேர அரசியலில் இன்னும் ஈடுபடவில்லை; எப்போது முழுநேர அரசியலில் ஈடுபட போகிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “முழுநேர அரசியலுக்கு வருவது பற்றி என்னை நோக்கி கேள்வி கேட்கிறீர்களே.. நீங்கள் முழுநேர குடிமகனாகக் கூட இருப்பதில்லை.. 40% பேர் வாக்கு | செலுத்தக் கூட வராமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று கிடுக்குபிடி பதில் அளித்துள்ளார்.