மரபு வழா நிலை :
எந்தப பொருளை, எந்தச் சொல்லால், எவ்வழியால் அறிவுடையோர் கூறினாக்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வழியால் கூறுதல் மரபு எனப்படும்.
மரபு – (எடுத்துக்காட்டு) {குதிரை குட்டி யானை குட்டி, யானை கன்று , பசுவின் கன்று , யானை பாகன், ஆட்டிடையன் }
மரபு வழு – (எடுத்துக்காட்டு) {குதிரைக் குஞ்சு, யானையிடையன் , பசுவின் குட்டி , ஆட்டுப் பாகன் }
“எப்பொருள் எச்சொலின் எவ்வா துயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரமே” (நூற்பா.388)
வெவ்வேறு வினைகளுக்கு கூறிய பல பொருள்களையும் ஒரு சேரத் தழவி நிற்கும் ஒரு பொதுச் சொல்லும், வெல்வேறு வினைக்கு உரிய பொருள்களை எண்ணி நிற்கும் பல சிறப்புச் சொற்களும் தமக்குள் உரிய சிறப்பு வினையை வேண்டாமல், எல்லாவற்றிற்கும் உரியதொரு பொது வினையைக் கொண்டு முடிந்து நிற்கும்.
எ-டு :
அடிசில் – எனும் சொல் உண்பன, தின்பன, நக்குவன, குடிப்பன என்பவற்றிற்கெல்லாம, பொதுச் சொல். ஆதலால், அயின்றார் / மிசைந்தார் எனப் பொது வினையால் முடிக்க வேண்டும்
அணி – எனும் சொல் கவிப்பன, கட்டுவன, இடுவன, பூண்பன் என்பவற் விற்கெல்லாம் பொதுச் சொல், ஆதலால், அணிந்தார் / தரித்தார் – எனப் பொது விளையால் முடிக்க வேண்டும்.
இயம் – எனும் சொல் கொட்டுவன, ஊது வன – என்பவற்றிற்கெல்லாம் பொதுச் சொல். ஆதலால், இயம்பினார் ! படுத்தார் – எனப் பொதுவினை யால் முடிக்க வேண்டும்.
படை – எனும் சொல் எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவன என்பவற்றிற்கெல்லாம் பொதுச்சொல், ஆதலால், வழங்கினார் | தொட்டார் – எனும் பொதுவினையால் முடிக்க வேண்டும்.
”வேறுவிளைப் பல்பொருள் தழுவிய பொதுச் சொல்லும் வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும். (நூற்பா 389)