மொழியின் முதல் , இறுதி எழுத்துக்கள்

 சொற்கள் எழுத்துக்களால் ஆனவை. அவை நாம் ஒலிப்பதற்கு இனிமையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும். இதற்கு சொற்களில் முதலிலும் இறுதியிலும் ஒலிக்கும் எழுத்து ஒலிகள் காரணமாக அமைகின்றன.

 சொற்புணர்ச்சியில் முதல் சொல்லின் இறுதி எழுத்தும் ,வரும் சொல்லின் முதல் எழுத்துமே சந்தியாகின்றன. அவ்வாறு சந்திக்கும் இடத்தில் வரும் எழுத்துக்கள் எவை எவையென அறிந்து கொள்ள வேண்டும்.

மொழிமுதல் எழுத்துக்கள் -22  :

      1 )  உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். 

       2)   மெய்யெழுத்துக்கள் மெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே முதலில் வருகின்றன.
   3 )  மெய்களில் க , ங, ச , ஞ , த ,ந, ப,ம,ய ,வ என்னும் பத்து  வரிசைகள் சொல்லின் முதலில் வரும். ( ஙனம்  என்னும் சொல்லில் மட்டுமே ங வரும் )

4)  ட, ண ,ர , ல , ழ , ள , ற , ன  என்னும் எட்டு வரிசைகளில் முதலில் வருவதில்லை.
5 ) ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது .

குறள் என்ற சொல்லை க் +உ +ற் +அ +ள்  எனப் பிரிக்கலாம். சொல்லின் முதலில் உள்ள ‘கு ‘ என்னும் உயிர்மெய் எழுத்தை , க் +உ  எனப் பிரிக்கும்போது க் என்ற மெய்யெழுத்தே சொல்லின் முதலில் வருவதை அறியலாம்.


ங் ‘ என்ற மெல்லின மெல்லின மெய் ‘விதம்’ எனப் பொருள் தரும் ‘ ங்னம் ‘ என்னும் சொல்லில் மட்டும் முதலில் வரும்.’ அ ,இ ,உ ‘ இந்த சுட்டெழுத்துகளுடனும்  எ ,யா  என்னும்  வினா எழுத்துகளுடனும் இணைந்து  அங்ஙனம் ,இங்கனம் ,உங்கனம்,யாங்கனம் ,எங்ஙனம்  என்று வரும் . தற்கால  தமிழில் இவற்றின் பயன்பாடு அரிதாகவே உள்ளது.

உங்ஙனம்  என்பது தற்போது தமிழகத்தில் வழக்கில் இல்லை. ஆனால் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் இலங்கை தமிழர் உங்கு ,உங்ஙனம் போன்ற சொற்களை பயன்படுத்தி வருகின்றனர்.

 இந்த  இலக்கண வரையறைகள் அனைத்தும் எழுத்து மொழிக்கானவையே அன்றி , பேச்சு மொழிக்கானவை அல்ல ; மேற்காட்டிய இரண்டு எழுத்துக்கள் நீங்கலாக உள்ள பிற எழுத்துக்கள் சொல்லின் முதலில் வந்தால் அவை தமிழ்ச் சொற்களாக இருக்கமாட்டாது ; பிறமொழிச் சொற்களாகவே இருக்கும்.  ஒலிபெயர்ப்பு சொற்களாகவும் இருக்கலாம்.

மொழிமுதல் எழுத்துக்கள்  உயிரெழுத்துக்கள்  மெய்யெழுத்துக்கள்  மொத்தம் 
12 10 22


மொழி இறுதி எழுத்துக்கள்-24

1) உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.
2) மெய்களில் ஞ் ,ண் ,ந் ,ம் ,ன் ,ய் ,ர் ,ல் ,வ் ,ழ் ,ள் என்னும் 11 எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வரும்.
3) க் ,ச் ,ட் ,த் ,ப் ,ற்  என்ற  வல்லின மெய் ஆறும், ங் எனும் மெல்லின மெய்  ஒன்றும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
4) பழைய இலக்கண நூலார் மொழி இறுதி குற்றியலுகர எழுத்தையும்  சேர்த்துக் கொள்வர். ஞ் ,ந் ,வ்  மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன. ஆயினும் இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்தாக வருவதில்லை.
மொழி இறுதி எழுத்துக்கள்  உயிரெழுத்து  மெய்யெழுத்து  குற்றியலுகரம்  மொத்தம் 
  12 11 1 24

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top