வல்லினம் மிகும் இடங்கள்

 வல்லினம் மிகும் இடங்கள் :

இரண்டு சொற்கள் ஒன்றாக சேரும் போது இடையில் க் ,ச் ,த் ,ப்  ஆகிய நான்கு மெய்யெழுத்துக்கள் எங்கெங்கு மிகும் என்பது குறித்து அறிவோம்.


அ , இ , உ  என்பன சுட்டெழுத்துக்கள். இந்த எழுத்துக்களின் முன் வல்லின எழுத்துக்கள் முதலாக உடைய சொல் வந்து சேர்ந்தால் இடையில் அவ்வெழுத்தின் மெய்யெழுத்து தோன்றும். இதனை வல்லொற்று மிகுதல் என்பர்.
 
அ + பையன் = அப்பையன் 
( அ   முன் பை  என்னும்   பகர வருக்க  எழுத்து  வந்ததால் ,மெய்யெழுத்தாகிய  ப்  தோன்றியது .)

அ  + சட்டை = அச்சட்டை 
இ  + தோட்டம் = இத்தோட்டம் 
இ  + குளம்  = இக்குளம் 
உ + பக்கம் = உப்பக்கம் 

( உ என்னும் சுட்டு எழுத்தானது தற்போது வழக்கத்தில் இல்லை.)
எ  என்னும் வினா  எழுத்துக்கு முன் வல்லின எழுத்தை முதலாக உடைய சொற்கள் வந்தாலும் வல்லினம் மிகும்.
எ  + குடம் = எக்குடம் 
எ  + சட்டை  = எச்சட்டை


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top