விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள்

  விடுதலைக்கு முன்பும் பின்பும் தமிழ்க் கவிதைகள்

கவிதை இலக்கியத்தின் பழமை தமிழில் உள்ள முதலும் முதன்மையுமான இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது. 

(எள்ளிலிருந்து எண்ணெய் விடுபடுவது போல, இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோற்றம் பெறும் என்பது மரபு ‘)

அவ்வகையில் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் பழமையான இலக்கியங்கள் இருந்துள்ளன என்பதற்கு நமக்குத் தொல்காப்பியமே சான்றாகத் திகழ்கிறது.

இலக்கண நூல்கள் மொழியிலுள்ள எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் தொடர்களுக்கும் இலக்கணம் கூறுவதோடு, அவற்றினால் அமைந்த இலக்கிய இலக்கணங்களையும் தக்க இடத்தில் மேற்கோள் காட்டி விளக்குகின்றன.

மேலும் செய்யுள் தொடர்பான எழுத்து, சொல், அகம்-புறம் என்னும் பாடுபொருள் குறித்த செய்திகள், அணி ஆகியன பற்றிய வரையறைகளையும் யாப்பு,குறிப்பிடுகின்றன.

அவ்வகையில் மேற்கண்டவற்றை கவனத்தில் கொள்ளும்போது செய்யுள் என்னும் கவிதை வடிவம் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையுடையது எனக் கூற முடியும்.

தொல்காப்பியம் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா. பரிபாடல் ஆகிய “பா”வகைளையும் அவற்றிற்கான இலக்கணங்களையும் குறிப்பிடுகிறது.

இறையனார் களவியல் உரை என்னும் நூல் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மரபினைக் குறிப்பிடுகிறது.

தமிழிறிஞர் திரு மயிலை. சீனிவேங்கடசாமி அவர்கள் தமது மறைந்துபோன தமிழ் நூல்கள் என்னும் நூலில் முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, கலி, குருகு, வியாழமாலை அதவல், வெண்டாளி சிற்றிசை, பேரிசை போன்ற பல நூல்கள் வழக்கத்திலிருந்து மறைந்துவிட்டதாகப் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட வரலாற்றின் வழி தமிழ்ச் சமூகத்திற்கு நீண்ட, தொடர்ச்சியாள, பழமையான இலக்கிய வரலாறு இருந்து வருகிறது என்பது தெளிவாக விளங்கும்.

  விடுதலைக்கு முன்பு தமிழ்க் கவிதைகள்

 சங்க பாடல்களுக்குப் பிறகு வெண்பா யாப்பில் அமைந்த திருக்குறள் போன்ற நீதி இலக்கியங்களும், சிலப்பதிகாரம், பணிமேகலை போன்ற காப்பியங்களும் தோற்றம் பெற்றன. 

பின்னர் சீவக சிந்தாமணி போன்ற விருத்தப்பாவால் அமைந்த இலக்கியங்கள் தோற்றும் பெற்றன. இக்காலத்திற்கு பிறகு தமிழ் செய்யுளுக்கு இலக்கணம் கூறும் தண்டியலங்காரம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை போன்ற இலக்கள நூல்கள் தோற்றம் பெற்றன.

தொடர்ந்து பல்வேறுபட்ட கீர்த்தனங்கள் துள்ளல், ஏளனம் மற்றும் மறைபொருளை உள்ளடக்கி சித்தர்களால் பாடப்பட்ட சிந்துப் பா வடிவங்களும் தமிழ்ச் சூழலில் செழித்து வளர்ந்தன. 

பிற்காலத்தில் வண்ணம் என்னும் இலக்கிய வகைகளும், இதே காலகட்டத்தில் இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களும் தோற்றம் பெற்றன. இந்தக் காலப் பகுதியில் சித்திரக் கவிதைகளும் அந்தாதிகளும், தலபுராணங்களும் தோற்றம் பெற்றன.

மேற்கண்ட சூழல்களின் தொடர்ச்சியாகப் பாரம்பரியமான இலக்கிய ஊடகமாக இருந்த செய்யுள் வடிவம் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த அரசியல், சமூதாய மாற்றங்களால் மெல்ல மெல்ல செல்வாக்கிழக்கத் தொடங்கியது.

 ஏனெனில் ஐரோப்பியர்களின் வரவாலும், அச்சு எந்திரத்தின் வருகையாலும் தமிழில் வசன அல்லது உரைநடை என்னும் புதிய முறை உருவாக்கம் பெற்றது. அது இலக்கிய உலகத்திலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. 

இந்தக் காலக்கட்டத்தில் தாயுமானவர். அருணகிரிநாதர், உமறுப்புலவர், வீரமாமுனிவர், வள்ளலார், மகாவித்துவாள் மீளாட்சி சுந்தரம் என பல்வேறு தமிழ் அறிஞர்கள் மரபார்ந்த முறையில் இலக்கியங்களை, பாடல்களைப் படைத்தனர்.

இவர்களைத் தொடர்ந்து பாரதியார், கவிமணி தேசிகவிநாயகம், திரு.வி.சு. பாரதிதாசன், கண்ணதாசன் என இன்றுவரை காலந்தோறும் புலவர் பெருமக்கள் மரபார்ந்த முறையில் அதாவது மரபுக் கவிதை மரபில் கவிதைகளை பாத்து வருகின்றனர்.

 அவ்வகையில் செய்யுள் இலக்கணங்களுக்கு உட்பட்டு எழுதப்படும் மரபுக் கவிதைகள் இன்றளவும் தனித்தன்மைகளோடு படைக்கப்பட்டு வருகின்றன எனலாம்.

இருப்பினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் தொடங்கி தமிழில் நவீன கவிதை இலக்கியம் தோற்றம் பெறுவதற்கான அனைத்து சூழல்களும் ஏற்பட்டன. இந்தச் சூழலைத் தோற்றுவித்தவர்களில் முதன்மை யானவராகக் கொள்ளத் தக்கவர் மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.

நாம் மேலே படித்ததைப் போன்று பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கிய வடிவம் என்பது செய்யுள் வடிவமாகவே இருந்தது இந்தூற்றாண்டில் மேலைநாட்டில் பழைய யாப்பு உருவத்திலிருந்து விலகி, இயைபுத் தொடை (Rhyme) முதலியன இன்றி உரைநடைச் சாயலில் புதிய தன்மைகளுடன் கூடிய கவிதைகளைக் கவிஞர்கள் படைக்கத் தொடங்கினர்.

இந்தப் போக்கு நேரடியாகத் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டுவிடவில்லை. 1892இல் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் ‘புல்லின் இதழ்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட பன்னிரண்டு கவிதைகளைக் கொண்ட தொகுப்பு, யாப்பு மரபைப் புறக்கணித்து ஃபரீவெர்ஸ் (Free verse) என்னும் வசன கவிதையாக அமைந்தது. 

அவர்தம் பாடுபொருளும் பிறர் இதுவரையில் பேசாப் பொருளாக அமைந்தது. இவரை பின்பற்றி எமர்சன், கார்ல் சான்ட்பெர்க், யின்ட்ஸே, வாலெஸ் ஸ்டீவன்ஸன், ஸ்டீவன் கிரேன், அமி லோவல் போன்ற பல கவிஞர்கள் வான நடையிலான கவிதைகளைப் படைக்கத் தொடங்கினர்.

பிரெஞ்சு நாட்டிலும், ரிம்பாடு என்னும் இளங்கவிஞர், 1886ஆம் ஆண்டு ஒளி வெள்ளம் என்னும் தலைப்பில் வெர்ஸ் விப்ரே என்ற கட்டற்ற கவிதைகளைப் படைத்தார்.

இவரையடுத்து 1889-இல் வியல் கிரிப்பின் என்பவர் கட்டற்ற கவிதை என்ற அறிவிப்புடன் தம் கவிதைகளை வெளியிட்டார். இத்தாலி, ஸ்பானிஷ், செர்மன், ருஷ்ய மொழிகளின் இலக்கண மரபுகளிலும் நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படத் தொடங்கின. 

பிரெஞ்சு நாட்டினரின் சர்ரியலிசம், இத்தாலியக் கவிஞர்களின் ப்யுச்சரிசம், ஜெர்மானியரின் எக்ஸ்பிரஷனிசம் என்பன அந்தந்த நாடுகளின் மரபுக்கவிதை நிலையைக் கடந்து வரலாற்றினை நமக்கு உணர்த்துகின்றன. வசன கவிதைகளைத் தோற்றுவித்தது.

தமிழில் இவ்வாறான கவிதைகளுக்கு வித்திட்ட பாரதியார் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மேலைநாட்டுக் கவிவாணர்களின் கவிதைகளின் சுவையை நன்கு அறிந்தவர். அக்காரணத்தினாலேயே மேலைநாட்டுக் கவிவாணர்களின் கவிதைப் பாணியை விமர்சனம் செய்யவும், அக்கவிதைகள் போன்றே தமிழிலும் வசன கவிதைகள் படைக்கும் முனைப்பிலும் ஈடுபாடு காட்டினார்.

அதனாலேயே ‘விட்மளின் பாடலில் எதுகை, மோனை, தளை எதுவுமே இருக்காது; வசன நடை போலவே இருக்கும்; கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமேயொழியச் சொல்லடுக்கில் காட்டுவது பயளில்லை எனக்கருதி வசன நடையிலேயே அவர் எழுதிவிட்டார்’ என்கிறார் மகாகவி பாரதியார். பாரதி 

மரபுக் கவிதைகள் படைப்பதில் காட்டிய அதே முனைப்பிளை வசன கவிதைகள் படைப்பதிலும் ஈடுபாடு காட்டியுள்ளார். அவ்வகையில் தலைப்பில் பல வசன கவிதைகளைப் படைத்துள்ளார்.

பாரதியைத் தொடர்ந்து த.மிரமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றேசர் புதுக்கவிதை படைக்கலாவினர் புதுக்கவிதைகள், பத்திரிகைகளில் வெளியிடப் பெற்றுப் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றுத் தமிழில் தளக்கான ஒரு பேரிடத்தினை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது எனலாம்.

  விடுதலைக்கு  பின்பு தமிழ்க் கவிதைகள்

 இந்திய விடுதலைக்கு பிறவான தமிழ்க் கவிதை இலக்கியம் என்பது பல்வேறு புதிய உள்ளடக்கங்களைக் கொண்டதாக வளர்த்து வந்தது. பாரம்பரிய இலக்கிய ஊடகமான செய்யுள் வடிவத்தில் ஆசிரியம், வெண்பா, கலிப்பா, விருத்தப்பா, சிந்து போன்ற பா வடிவங்களில் கவிதை இயற்றும் மரபும் தொடர்ந்தது. 

பாரதியைத் தொடர்ந்து பாரதிதாசன் கண்ணதாசன், சுத்தானந்தபாரதியார், கரதா, அழவள்ளியப்பா, வாணிதாசன் வைரமுத்து போன்றோர் மரபார்ந்த வடிவத்தில் கவிதைகளைத் தொடர்ந்து படைத்தனர், படைத்து வருகின்றனர்.

மேலும் மரபுக் கவிதைகளைப் படைத்திட ஏதுவாக புலவர் குழந்தையின் யாப்பதிகாரம், அகி.ப.பரந்தாமனாரின் – கவிஞராக, கி.வா.ஜகந்நாதனின் – கவிபாடலாம், த சரவணத் தமிழனின் – யாப்பு நூல், இரா. திருமுருகனின் – சிந்துப் பாவியல் ஆகிய நூல்கள் படைக்கப்பட்டுள்ளன. 

இன்றளவும் மரபுக்கவிதைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தற்கால இளையோர்களின் விருப்ப கவிதை ஊடகமாக இருப்பது வசன, உரைநடை கவிதை வடிவங்களே ஆகும்.

பாரதி தொடங்கி வைத்த புதிய வசன கவிதை மரபினைப் பின்பற்றித் தமிழில் புதுக் கவிதை என்கிற ஒரு புதிய இலக்கிய வகை தோற்றம் பெற்றது. தமிழில் புதுக்கவிதை நிலைப்பெற்றதில் மணிக்கொடிப் பத்திரிகைக்கு முக்கிய இடம் உண்டு. 

1930-1945 காலகட்டத்தில் மணிக்கொடிக் பத்திகையை மையமிட்டு இயங்கிய குழுவினர்தான் பாரதியின் தடத்தினைப் பின்பற்றி புதுக்கவிதைகளைப் படைத்தனர். இக்குழுவினர்களில் கு.ப.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தள், வல்லிக்கண்ணள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

மணிக் கொடியில் புதுக்கவிதைகள் படைக்கப்பட்ட காலத்திலேயே குறாவளி, கிராம ஊழியன், காலாமோகிளி போன்ற இதழ்களிலும் புதுக்கவிதைகள் பல வெளிவந்துள்ளன.

புதுக்கவிதை இலக்கியத்தின் இரண்டாம் நிலை வளர்ச்சி என்பது 1950-1970 காலகட்டத்தில் தடத்தது எனலாம். இக்காலாட்டத்தில் எழுத்து. இலக்கிய வட்டம், நடை போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளிவந்தன.

 (1962ஆம் ஆண்டு) புதுக்கனிதை வரலாற்றில் சிறப்புடைய ஆண்டாகக் குறிப்பிடுவர்] எழுபதாம் ஆண்டுகளில் தாமரை, கசட தபற, லாளம்பாடி போன்ற இதழ்களில் புதுக் கவிதைகள் வெளியிடப்பட்டன.

 இக்காலக்கட்டத்தில் வெளிவந்த புதுக்கவிதைகள் தொகுக்கப்பட்டு புதுக்கவிதை நூல்களாக வெளியிடப்பட்டன. 

குறிப்பாக ந. பிச்சமூர்த்தி – காட்டுவாத்து, வேணுகோபாலன் – கோடை வயல், ரிது செல்லப்பா – புதுக்குல்கள் வல்லிக்கண்ணன் – அமர வேதனை, சி.மணி. வரும் போகும். வைத்தீஸ்வரன் – உதய நிழல், நா.காமராசன் – கறுப்பு மலர்கள், இன்குலாப் – இன்குலாப் கவிதைகள், தமிழன்பன் – தோணி வருகிறது]முதலான பல்வேறு கவிதை தொகுப்புகள் வெளிவந்தன. 

இக்கால கட்டத்தில் ஈழத்திலும் பல்வேறு கவிதைகள் படைக்கப்பட்டன. மறுமலர்ச்சி, பாரதி, ஈழகேசரி, மல்லிகை, கவிதை போன்ற இதழ்களில் பல்வேறு கவிதைகள் வெளிடப்பட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top