உவமை அணி :
தொல்காப்பியர் உவமைஅணி குறித்துக் கூறியுள்ளார் என்பதையும் உவமை அணியே பொருளணிகளில் தலைமை சான்றது என்பதையும் முன்னர்க் கண்டோம்.
காலப்போக்கில்உவமை அணியிலிருந்து உருவகம், வேற்றுமை, ஒட்டணிமுதலிய பல அணிகள் தோன்றின. இதனால் உவமை அணியைத் ‘தாய் அணி‘ என்று கூறுவர்.
உவமை அணியின் இலக்கணம் :
1) ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம்.
2) பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை, தொழில் ஒப்புமை,பயன்ஒப்புமை ஆகியவை காரணமாகஉவமை அமையும்.
3)ஆகவே அடிப்படையில் பண்பு உவமை, தொழில்உவமை,பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும்.
உவமை அணியின் இலக்கணத்தைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகிறது.
பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின் ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்ந்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை (தண்டி, நூற்பா. 30)
உவமை அணி விளக்கம்
உவமை அணியின் இலக்கணத்தைச் சற்று விரிவாகக்காண்போம். உவமை அணியில் நான்கு உறுப்புகள் இருப்பதைக்காணலாம்.அவை.
1) உவமை அல்லது உவமானம்
2) பொருள் அல்லது உவமேயம்
3) ஒத்த பண்பு
4) உவமை உருபு
ஆகியன.
உவமானம்,உவமேயம் :
புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், ‘பொருள்’அல்லது ‘உவமேயம்’ எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள்’உவமை‘ அல்லது ‘உவமானம்‘ எனப்படும்.
எடுத்துக்காட்டு: தாமரை போன்ற முகம்
இங்குப் புலவர் விளக்கக் கருதிய பொருள் முகம்.ஆகவே ‘முகம்’ உவமேயம்.
முகத்தை விளக்குவதற்காகஅதனோடு அவர் இயைத்துக் கூறும் பொருள் ‘தாமரை’ ஆகவே
தாமரை-உவமானம்.
ஒத்த பண்பு :
உவமேயத்துக்கும் உவமானத்துக்கும் பொதுவாக உள்ள இயல்பைப் புலவர் சுட்டிக் காட்டியிருப்பார். இதுவே ‘ஒத்த பண்பு‘ எனப்படும்.
எடுத்துக்காட்டு: பவளம் போலும் செவ்வாய்
வாய்க்கும் ஒத்த தன்மையாகிய ‘செம்மை’ (செம்மை-வாய்) இங்குச் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைப்பாருங்கள்.
உவம உருபு :
உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, புரைய, ஒப்ப, மான போன்ற இவை உவமை உருபுகள் எனப்படும். பொருளொடு பொருள் ஒப்புமைப்படுததிக் கூறும் முறை
பொருளொடு பொருள் ஒப்புமைப்படுத்திக் கூறும் முறைகள் :
1) ஒரு பொருளொடு ஒரு பொருளும்
2) ஒரு பொருளொடு பல பொருளும்
3) பல பொருளொடு பல பொருளும்
4) பல பொருளொடு ஒரு பொருளும்
என நான்கு வகையாகப் பொருள்கள் இயைத்து (ஒப்புமைப்படுத்தி) கூறப்படும்.
1) ஒரு பொருளொடு ஒரு பொருள்
எடுத்துக்காட்டு; செவ்வான் மேனி
இங்கு ‘வானம்’ என்ற ஒரு பொருள் ‘மேனி” என்றஒரு பொருளுக்கு உவமை ஆயிற்று.
2) ஒரு பொருளொடு பல பொருள்
எடுத்துக்காட்டு. அவ்வான்
இலங்கு பிறை அன்ன விளங்கு வால் வை எயிறு இங்குப் ‘பிறைச்சந்திரன்’ என்ற ஒரு பொருள் ‘பற்கள்'(எயிறு) என்ற பல பொருளுக்கு உவமை ஆயிற்று.
3) பல பொருளொடு பல பொருள்
எடுத்துக்காட்டு :
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
இங்குச் ‘சுறா மீன் கூட்டம்’ என்ற பல பொருள்தொகுதி, ‘வாள் ஏந்திய வீரர் குழாம்’ என்ற பல பொருள்தொகுதிக்கு உவமை ஆயிற்று.
4) பல பொருளொடு ஒரு பொருள்
எடுத்துக்காட்டு;
பெரும்பெயர்க் கரிகாலன் முன்னிலைச் செல்லாப்பீடு இல் மன்னர் போல -ஓடுவை மன்னா? வாடை நீ எமக்கே?
(பீடு-பெருமை; ஓடுவை – ஓடுவாய்)
இங்கு, கரிகாலனை எதிர்த்து நிற்க மாட்டாமல் தோற்றுஓடிய பகை மன் தலைவன் வந்தவுடன்தலைவிக்கு முன் செயலற்று ஓடப் போகின்ற வாடையாகியாரு பொருளுக்கு உவமை ஆயினர்.