முன்னுரை :
கல்வி என்பது நம் அறியாமையைப் போக்கும் கருவி ஆகும். இதன் இன்றியமையாமையை உணர்த்துவதற்கு நம் தமிழ்ச் சான்றோர்கள் ‘இளமையில் கல்’ என்றும் ‘கற்க கசடற’ என்றும் கூறியுள்ளனர்.
அப்படிப்பட்ட கல்வியைநாம் நம் தாய்மொழியில் கற்பது சிறந்தது என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.
தாய்மொழிக் கல்வியின் தேவை :
உள்ளங்கை நெல்லிக்கனிபோல:
(தெளிவாக அறிதல்) தமிழாசிரியர் கற்பித்த இலக்கணம் மாணவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக விளங்கியது.
ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய்மொழியே துணைநிற்கும் – இதனைவலியுறுத்த பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
தாய்மொழிக் கல்வியின் தேவை – தாய்மொழிச் சிந்தனை – அறிஞர்களின் பார்வை – கற்கும் திறன் – பயன்இன்றைய நிலை.((விடை)முன்னுரை கல்வி என்பது நம் அறியாமையைப் போக்கும் கருவி ஆகும்.
இதன் இன்றியமையாமையை உணர்த்துவதற்கு நம் தமிழ்ச் சான்றோர்கள் ‘இளமையில் கல்’ என்றும் ‘கற்க கசடற’ என்றும் கூறியுள்ளனர், அப்படிப்பட்ட கல்வியைநாம் நம் தாய்மொழியில் கற்பது சிறந்தது என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.
தாய்மொழியில் கல்வி கற்பதனால் மாணவர்களால் உண்மையான அறிவை மிப் பெற முடிகிறது. சிறப்பாகச் சிந்திக்க முடிகிறது. அவர்கள் கற்றதை சமுதாயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. தாய்மொழியில் கற்பதால் இவர்களுக்குக் கற்கும் திறன் நாளடைவில் வளர்ச்சி பெறுகிறது.
இம்முறையால் மாணவர்கள் தன்னம்பிக்கை பெறுகிறார்கள். எளிதில் உரையாடும் ஆற்றலும் சிறந்த பேச்சாற்றலும் வளர்கிறது. தாய்மொழியில் கற்றவர்கள் சிறந்த படைப்பாளராக இயலும்.
தாய்மொழியை நன்கு அறிந்த மாணவர்களால் பிற மொழியை எளிதாகப் புரிந்து கொள்ள இயலும். பிறமொழியைச் சரளமாகப் பேச இயலும்.
தாய்மொழியை அறியாமல் பிற மொழியில் புலமை பெற விரும்புவது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் கதைதான்.