நான் ஒரு தேசபக்தன் என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமாணமும் ஒன்றுதான். நான் ஒரு தேசபக்தன், அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும் ‘தான் ” என்று அவரே கூறுகிறார்.
அவர் இராமனைப் போற்றியதும், அவன் மனிதனாகப் பிறந்து, மனிதப் பண்புகளால் உயர்ந்து, மானுடரோடு மற்ற உயிரினங்களையும் உடன் பிறந்தவர்களாக ஏற்று, உலகம் உய்ய வழி நாட்டியதால்தான்.
மனிதர் மொழியாலும் நாட்டாலும் உணர்த்தப்படுவதைக் காட்டிலும், மனிதத் தன்மையால் பிறருக்கு உணர்த்தப் பெறுவது சிறப்பு சான்றாக, “நான் மொழியால் குஜராத்தியன்; நாட்டால் இந்தியன்; உலசு நிலையில் உலகன்; ஆனால், மனிதனாக இருந்தல் வேண்டும்.
குஜராத்தியனாக இருப்பதைக் காட்டிலும், இந்தியனாக இருப்பதைக் சாட்டிலும், மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது என்று எண்ண வேண்டும்” என்று விழைத்தார் காந்தியடிகள். அவ்வாறு உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும்” என்றார் அவர்.
காந்தியடிகள் அறப்போர் முறையினைத் தேர்ந்தெடுத்தார். மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும், தூய்மையானதாயும் இருந்தால் மட்டும் போதாது. அதை அடையும் வழிமுறைகளும் தூய்மையானவையாய், பிறருக்குத் துன்பம் தராதனவாய் இருக்க வேண்டும் என்றார் அவர்.
ஆங்கிலேயரைத் துன்புறுத்தி விடுதலை பெறுவதைவிட, அமைதியான முறையில் அவர்களை எதிர்த்து, மனம் மாறச் செய்து விடுதலை பெறுவதே சிறந்தது என்றார்.
தெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது; நெருப்பை நீரால் தான் அணைக்க முடியும். வன்முறையை அன்பு, அருள் ஆகிய அறவழிகளில் தான் தடுக்க முடியும். அறவழியைப் பின்பற்றிப் பெறுகிற விடுதலையே நிலைக்கும் என்று அவர் எடுத்துக் கூறினார்.
இலட்சியமும் வழியும் தூய்மை :
போராட்ட முறைகள் இருவகைப்படும். ஒன்று, போர்முறையில் உரிமையை நிலைநாட்டுவது; மற்றொன்று, அறவழியில் உரிமைப் போர் செய்து வெற்றி பெறுவது. இவற்றுள் அறப்போர் முறையினைக் காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார்.
“மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது. அதை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகப் பிறருக்கு துன்பம் தராததாக இருக்க வேண்டும்” என்றார் காந்தி.
ஆங்கிலேயரை மனம் மாறச் செய்வோம் :
ஆங்கிலேயரைத் துன்புறுத்தி விடுதலை பெறுவதைவிட, அமைதியான முறையில் அவர்களை எதிர்த்து, மனம் மாறச் செய்து விடுதலை பெறுவதே சிறந்தது என்றார். நேதாஜி போன்றோர் போர் முறையைக் கையாண்டுதான் விடுதலை பெறமுடியும் என்றார். நெருப்பை நீரால் தான்அணைக்க முடியும்:
அப்போது காந்தி, ‘வன்முறையை வன்முறையால் வெல்ல தினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது” என்று கூறினார். நெருப்பை நீரால்தான் அணைக்க முடியும்.
வன்முறையை அன்பு, அருள் ஆகிய அறவழிகளில் தான் தடுக்க முடியும். அறவழியைப் பின்பற்றிப் பெறுகிற விடுதலையே நிலைக்கும் என்று உலகுக்கு எடுத்துக்கூறினார் அவர்.
வலிய போரில் சாகின்றவர்களின் எண்ணிக்கையை விட அறவழிப் போரில் இறப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், மற்ற உலக நாடுகள் இதனை ஏற்காவிடினும் இந்தியா அதை ஏற்று நடத்தி, ஏனைய நாடுகளுக்கு இந்தியா ஒரு வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்றும் விரும்பினார்.
இந்த வழியை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டியது இந்தியரின் கடமை என்றார் அவர். காந்தியடிகளின் அறவழிப் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது; கதர் இயக்கம், மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய இயக்கங்கள் பரவின.