தமிழ் இலக்கணத்தில் அணிகள் ஒரு சொல்லுக்கு அணிகலன்களாக விளங்குகின்றன.
அணிகள் பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது அதில் இந்த பதிவில் வஞ்சப்புகழ்ச்சி அணி என்பதைப் பற்றி பார்ப்போம்.
வஞ்சப்புகழ்ச்சி அணி இலக்கணம் :
ஒன்றினை புகழ்வது போலப் புகழ்ந்து பின்னர் பழித்து கூறுவது வஞ்சப்புகழ்ச்சி அணி என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக,
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
பாடல் விளக்கம் :
இந்தப் பாடலில் தீயவர்கள் தேவர்களுக்கு ஈடாக புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயத்தில் தீயவர்கள் தங்கள் மனம் போன போக்கில் தீய செயல்கள் செய்து அழிவார்கள் என பழித்து கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஒன்றனை புகழ்ந்து கூறி பின்னர் அதனை பழித்து கூறுவது வஞ்சப்புகழ்ச்சி அணி என்று கூறலாம்.