படம்– பீஸ்ட் Beast)
நடிகர்கள் – தளபதி விஜய், பூஜா ஹெட்ஜ், செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, மற்றும் பலர்.
இயக்குனர்– நெல்சன்
தயாரிப்பாளர்– சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.
நெல்சன் இயக்கத்தில் இளையதளபதி விஜய்யின் அட்டகாசமான நடிப்பில் ஏப்ரல் 13 அன்று வெளியான நமது பீஸ்ட் திரைப்படத்தின் திரை விமர்சனம் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
” பீஸ்ட் ” என்ற பெயருக்கு ஏற்றது போலவே தளபதி விஜய் மிருகத்தனமாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து சண்டை காட்சிகளும் அட்டகாசமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தில் நடிகர் விஜய் வித்தியாசமான கொஞ்சம் நரைத்த தாடியுடன் ஸ்டைலான லுக்கில் நடித்து இருக்கிறார்.
நேர்மறை கருத்துகள் :
” ஹலமதி ஹபி போ ” என்கிற பாடல் அனிருத் இசையில் வெளியிடப்பட்டு யூடியூபில் பல பல கோடி பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
அதே வரிசையில் ” ஜாலியோ ஜிம்கானா ” என்கிற பாடல் கூட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தில் முக்கிய அம்சமே இந்த இரண்டு பாடல்கள் தான். இந்தப் பாடல்கள் எத்தனை முறை பார்த்தாலும் விஜயின் அட்டகாசமான நடனத்தாலும் அனிருத் இசையாலும் மனதை கவர்ந்து இழுக்கிறது.
பெரும்பாலும் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ஐந்து அல்லது ஆறு பாடல்கள் கண்டிப்பாக இருக்கும்.
ஆனால் பீஸ்ட் திரைப்படத்தில் மட்டும் இரண்டு பாடல்கள் வைத்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
திரைப்படம் முழுவதும் விறுவிறுப்பாக அதிரடி சண்டைக் காட்சிகளால் மிரட்டியிருக்கிறார் தளபதி விஜய்.
படத்தின் கதை என்பதை பார்க்கப்போனால்,
நகரில் ஒரு முக்கிய மால் ஒன்றினை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அந்த மாலில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். வெளியே போலீஸ் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்கள் நின்று உள்ளே இருக்கும் மக்களை எப்படி காப்பாற்றுவது என முயற்சி செய்கிறார்கள்.
அதே நேரத்தில் தளபதி விஜய் தீவிரவாதிகள் கையகப்படுத்தி உள்ள மாலினுள் சிக்கி இருக்கிறார்.
தீவிரவாதிகளிடமிருந்து மக்களை எப்படி தளபதி விஜய் காப்பாற்றுகிறார் என்பது இத்திரைப்படத்தின் கதை.
இந்த திரைபடத்தில் முக்கியமாக விஜய்யை மையப்படுத்தியே படமாக்கப்பட்டுள்ளதால் திரைப்படம் பார்க்க சுவாரசியமாக இருக்கிறது.
இத்திரைப்படத்தில் காமெடி வேடங்களில் வருபவர்களை விட குணச்சித்திர வேடத்தில் நடித்த விடிவி கணேஷ் அதிகமாக ஸ்கோர் செய்திருக்கிறார். அவரது நடிப்பு அங்கங்கு மக்களை குபீரென சிரிக்க வைத்தது.
எதிர்மறைக் கருத்துகள் :
படம் முழுக்க ஒரே மால் ஒன்றினுள் எடுக்கப்படுவதாக அப்பட்டமாக தெரிகிறது.
படத்தில் பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் அது நடிகர் விஜயின் நடிப்பில் அவ்வளவாகத் தெரியவில்லை.
பொதுவாக நெல்சன் திரைப்படங்களில் யோகி பாபு மற்றும் ரெடிங் கிங்ஸ்லி ஆகியோருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு டயலாக்குகள் மற்றும் காமெடிகள் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கும்.
டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்த யோகி பாபு ரெடிங் கிங்ஸ்லி மற்றும் மகாலி போன்றவர்களை இத்திரைப்படத்தில் நெல்சன் நடிக்க வைத்து இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
படத்தில் கதையை எதிர்பார்த்துக் கொண்டு சென்றால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் ஆக இருக்கும்.
பொதுவான ரசிகர்களுக்கு அவர்களது மனநிலையைப் பொருத்து கருத்துக்கள் மாறுபடும்.