தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Pdf சான்றிதழ்களை பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்- டிஎன்பிஎஸ்சி
* டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறையை கொண்டு வரப்பட்டுள்ளது.
* இனி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ்களை PDF வடிவில் பதிவேற்றப்பட வேண்டும்.
* விண்ணப்பிக்கும் போது சான்றிதழ் பதிவேற்றத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால் உடனடியாக OTR கணக்கு மூலமாக திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது.
* விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ்களின் அடிப்படையில் தேர்வுக்குப் பின் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
* மேலே குறிப்பிட்டுள்ள வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரிய செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரனின் இந்த திடீர் அறிவிப்பால் மாணவர்கள் திளைத்துப் போய் இருக்கிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.