இலக்கிய சொற்கள் என்றால் என்ன ? வகைகள் யாவை ?

இலக்கணம் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் என நான்கு வகைப்படும்.  இலக்கணவகைபோல, இலக்கிய வகையாலும்‌ சொற்கள்‌  நால்வகைப்படும்‌.   

அவை:

  •  இயற்சொல்‌, 
  • திரிசொல்‌, 
  • திசைச்சொல்‌,
  •  வடசொல்               என்பன.

இலக்கிய வகைகள்
இலக்கிய வகைகள் 



1) இயற்சொல்‌ என்றால்‌ என்ன ?

  • தீ, காடு, மரம்‌ – இச்சொற்களை ஒலித்துப்‌ பாருங்கள்‌. இவற்றின்‌ பொருள்‌ விளங்குகிறதா ?
  • படிக்காதவர்களிடத்தில்‌, இந்தச்‌ சொற்களைப்பேசினால்‌, அவர்களுக்கும்‌ புரியுமா ?

இவற்றைப்‌ படிக்காதவர்களும்‌ எளிதாகப்புரிந்துகொள்வார்கள்‌, அம்மா.

இவ்வாறு எல்லாருக்கும்‌ பொருள்‌ விளங்கும்வகையில்‌ இயல்பாய்‌ அமைந்த தமிழ்ச்சொல்‌ இயற்சொல்‌ எனப்படும்‌. இது 

  • பெயர்‌ இயற்சொல்‌,
  • வினை இயற்சொல்‌         என இருவகைப்படும்‌.

  1. காற்று, நிலவு, ஞாயிறு, பலகை – இவை எளிதில்‌ பொருள்‌ விளங்கும்‌ பெயர்ச்சொற்கள்‌. இவற்றைப்‌ பெயர்‌ இயற்சொற்கள்‌ என்பர்‌. 
  2. படித்தான்‌, தூங்கினான்‌, வந்தான்‌ – இவை எளிதில்‌ பொருள்தரும்‌ வினைச்சொற்கள்‌. இவற்றை வினை இயற்சொற்கள்‌ என்பர்‌.


 2) திரிசொல்‌ என்றால்‌ என்ன ? 

  • பீலி, உகிர்‌, ஆழி – இச்சொற்களை ஒலித்துப்‌ பாருங்கள்‌. இவற்றின்‌ பொருள்‌ என்ன? பொருள்‌ தெரியவில்லை தானே !
  • இவை கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்‌ கூடியனவாய்‌ இருக்கின்றன. இவற்றைத்‌ திரிச்சொல்‌ என்பர்‌.

(எடுத்துக்காட்டு ) பீலி – மயில்தோகை; உகிர்‌ – நகம்‌; ஆழி – கடல்‌, சக்கரம்‌.


திரிசொல்லும்‌ பெயர்‌, வினை ஆகிய இரண்டிலும்‌ வருமா ? 

ஆம்‌. திரிசொல்லும்‌ பெயர்த்‌ திரிசொல்‌, வினைத்‌ திரிசொல்‌ என

இருவகையாக வரும்‌. எயிறு, வேய்‌, மடி, நல்குரவு – என்பன பெயர்த்‌

திரிசொல்‌. (எயிறு – பல்‌; வேய்‌ – மூங்கில்‌; மடி – சோம்பல்‌;

நல்குரவு – வறுமை) வினவினான்‌, விளித்தான்‌. நோக்கினார்‌ –

இவை வினைத்‌ திரிசொல்‌. வினவினான்‌ – கேட்டான்‌;

விளித்தான்‌ – அழைத்தான்‌; நோக்கினார்‌ – பார்த்தார்‌.


3) திசைச்சொல்‌ என்றால்‌ என்ன? 

கேணி, பெற்றம்‌ – இச்சொற்களை ஒலித்துப்‌ பாருங்கள்‌. இவை, தமிழ்நாட்டைச்‌ சுற்றியுள்ள பிறபகுதிகளிலிருந்து தமிழில்‌ வழங்கும்‌ சொற்கள்‌ திசைச்சொற்கள்‌. (கேணி – கிணறு; பெற்றம்‌ -பசு; 

4) வடசொல்‌ என்றால்‌ என்ன?

கமலம்‌, விஷம்‌, புஷ்பம்‌ – இவற்றைப்‌ படியுங்கள்‌. இவை தமிழில்‌ வந்து வழங்கினாலும்‌ தமிழ்ச்சொற்கள்‌ அல்ல, வடமொழிச்‌ (சமற்கிருதம்‌) சொற்கள்‌,

கமலம்‌ – தாமரை

விஷம்‌ (விடம்‌) – நஞ்சு

புஷ்பம்‌ (youd) – மலர்‌

இங்ஙனம்‌, வடமொழிச்‌ சொற்கள்‌ திரிந்தும்‌ திரியாமலும்‌

தமிழ்மொழியில்‌ வந்து வழங்குமானால்‌ அவை வடசொல்‌ எனப்படும்‌.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top