திருமூலர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருமூலர் வாழ்க்கை வரலாறு

திருமூலர் திருஞானசம்பந்தருக்கு முன்னவராகக் கருதப்படுகிறார் திருஞான சம்பந்தர் திருவாவடுதுறைக்குச் சென்ற நானில், கோயில் கொடிமரத்தின் கீழிருந்து தமிழ் மணம் வந்ததாம் ஞானசம்பந்தர் அதனை என்னவென்று பார்க்க, அங்கிருந்து திருமந்திரம் வெளிப்பட்டது என்று கூறப்படுகின்றது. 

திருமூலர் சித்தர்களைப் போன்ற ஒரு யோகி, திருவாவடுதுறை அரச மரத்தடியில் இவர் யோகமிருந்த தாகவும், ஆண்டுக்கொரு முறை கண் விழித்து ஒவ்வொரு மந்திரமாக எழுதி மூவாயிரம் ஆண்டுகளில் 3000 மந்திரங்களை எழுதி வீடுபேறடைந்ததாகவும் கூறுவர் இவர் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என்பர்.

திருமந்திரம்- அறிமுகம்

திருமந்திரம் மூவர் தேவாரங்களுக்கும் முத்திய நூலாகக் கருதப்படுகின்றது. சித்தரந்த சாத்திரம் தோன்றுவதற்கு முன் சைவ சமய முதல் நூலாக விளங்கியது இதுவே சிறந்த ஆகமமாகர் சைவர்கள் இதனைப் போற்றுவர் திருமந்திரம் 3000 பாடல் உளைக்கொண்டது.ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு யந்திரம் என்று கருதப்படுகிறது.

|இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒரு தந்திரத்துன் சராசரி 300 பாடங்ளுக்கு மேல் உள்ளன முதல் தந்திரம் அறக்கருத்துகளைக் கூறுகிறது இலையாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, கல்வி, கேள்வி, அன்பு முதலிய (எல்லாச் சமயத்தாரிக்கும் பொதுவான அறம் கூறுகிறது. இவ்வாறே ஒவ்வொரு தந்திரமும் ஒரு சைவப் பொருளை விளக்குவதாக உள்ளது.

திருமந்திரச் செய்யுடகள் வெண்பாவுக்கும் விருந்தத்திற்கும் இடைப்பட்ட ஒருவகைப்பாட்டினால் இயன்றவை.

* ‘திருமந்திரமாலை’, ‘

* தமிழ் மூவாயிர திருமந்திரம்        நூலின் வேறு பெயர்களாகும்

“சைவ சிர்தாந்தம்” என்ற தொடரை முதன் முதலில் இந்த நூலில்தான் காண்கிறோம். பன்னிரு திருமுறைகளுள் திருமந்திரம் பத்தாம் திரு முறையாக வைத்துப் போற்றப பட்டுள்ளது.

 திருமந்திரம் பாடல் – 1

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்‘ என்பது திருமத்திரத்தில் வரும் ஓர் அரிய சுருந்தாகும், இதுபோன்ற அழகுத் தொடர்களும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்துக்களும் திருமந்திரத்தில் நிறைய உள்ளன

அத்தகைய கருத்தினைக் கொண்ட பாடல்களுள் ‘மனித குலம் ஒன்றே. மனிதாகளாகிய நாம் வழிபடுகிற கடவுளும் ஒன்றே’ என்ற ஒருமைப் பாட்டுக் கருத்து, ‘ஏழாம் தத்திரம்’ பகுதியில் ஒரு பாடலில் வலிவுறுத்தப்படுகிறது. அந்தப் பாடல் கீழ்வருமாறு:

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்!    நன்றே நினைமின்; நமனில்லை; நாள்தாமே! சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே!

பாடலின் விளக்கம் :

மனிதர்களுள் எல்லார்க்கும் குலம் ஒன்றே! (சமயங்கள் வேறுபட்டாலும்) மளிதர்கள் வழிபடும் தெய்வமும் ஒன்றுதான்! நல்லவற்றையே நிளையுங்கள்! நம்மை அழிக்கும் எமன் என்று யாரும் இல்லை! நல்ல நாள், கெட்ட நாள் என்பதெல்லாம் நாமாகத் கற்பனையாய் வைத்துக் கொண்ட வைதாம்! விதி என்பதும், விதித்த விதிப்படியே நாம் சென்று முடிவோம் என்னும் கதி என்பதும் பொய்! அப்படி எதுவும் இல்லை! உம் அறிவிள் வழி நின்று நிலைபேறு அடையும் முறையைத் திட்டமிட்டு முன்னேறும் வழியைத் தேடுங்கள்!

அருஞ்சொற்பொருள் விளக்கம்

குலம் – சாதி, வகுணம், தேவன் – கடவுள், நினைமின் நினைப்பீர், தமன்-எமன், நாள் முகூர்த்தநாள் அல்லது பீடையான நாள்; புகும் கதி-விதியின்படி இழுத்துச் செல்லுதல், சித்தத்து-அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்தறிதல்: உய்ம்மினே. அறிவீனத்திலிருந்து தப்பித்து வாழுங்கள்.

குறிப்புரை:

“சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றும், ‘எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் நிரை’ என்றும் பாரதியார் 20ஆம் நூற்றாண்டில் பாடினார். இதே கருத்தை ‘ஒன்றே குலம்” என்று திருமூலர் 6ஆம் நூற்றாண்டிலேயே பாடியிருப்பதைப் பார்த்து வியக்கிறோம்! தேவன் என்ற சொல்லைக் கடவுளுக்கு இன்றைய கிறித்தவர்கள் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். ‘ஒருவனே தேவன்’ என்று திருமூலர் தந்த சொல்லாட்சி யின் பாதிப்பு அது எனலாம்.

நாளும் கிழமையும் தலித்தோர்க்கு இல்லை’ என்பார்கள். நாள் நல்லதும் கெட்டது மாக இருப்பது நம்மால்தான் நாள் நாம்தான்! ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்றார். சுணியன் பூங்குன்றனார். நாம் நல்லவற்றையே நினைத்தால் நல்லவை நடக்கும். நம்மை அழிக்க ஒரு சக்தி இல்லை. விதி என்பதும் இல்லை. நம் அறிவின்படி நின்றால் உய்ய வழி உண்டு என்ற உண்மையை அழகுற எடுத்துரைக்கிறார்.

 திருமந்திரம் பாடல் – 2

‘சிவம்’ என்பது என்ன? என்ற வினாவுக்குத் திருமூலர் எளிமையாக, அதே நேரம் சிறப்பாக ஒரு பாடலில் விளக்கம் தருகின்றார்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆகும் அறிகிலார்.  அன்பே சிவமாவது ஆகும் ஆறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே!


பாடலின் விளக்கம்

அன்பும் சிவமும் இரண்டு என்று கூறுபவர்கள் அறிவில்லாதவர்கள். அன்புதான் சிலம் என்ற உண்மையை யாரும் அறிந்திருக்கவில்லை. அன்பும் சிவமும் ஒன்று என்பதை எல்லோரும் அறித்துவிட்டால், பிறகு அன்பிற்குள் சிவம் அடங்கியதைக் காண்பார்கள்!

அருஞ்சொற்பொருள் விளக்கம்

அறிகிலார் -அறியவில்லை, அமர்ந்திருந்தாரே – அடங்கியதை அறிவார்கள்.

குறிப்புரை:

‘அன்புதான் கடவுள்’ (Love is God) என்ற மேலான கருத்தை இப் பாடல் வலி யுறுத்துகின்றது. அன்பு என்பது சிவம். அன்பும் சிவமும் இரண்டல்ல. இரண்டும் ஒன்றுதான், ஒன்றுக்குள் மற்றொன்று அடங்கும் என்ற உண்மையை நாம் உணரவேண்டும் என்பது இந்த மந்திரத்தின் உட்பொருள் ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top