காரைக்காலம்மையாரின் இயற்பெயர் புனிதவதி காரைக்காலில் பிறந்தமையால் காரைக்காலம்மையார் எனப்பட்டார். இவர் வணிகர் குலத்தில் பிறந்தவர்.
நாடை பரமதத்தனை மணந்தார் மனைவியிடம் தெய்வத்தன்மை இருந்ததைக் கண்ட குறி பரமதத்தன் மனைவியைப் பணியவே, நாணம் கொண்ட திலகவதியார் இல்லற வாழ்வைத் துறந்து, சிவபெருமானை வேண்டிப் பேயுருவம் பெற்றார்.
கயிலைமீது தலையாலேயே நடந்து சென்ற இவரை இறைவன் ‘அம்மையே’ என்று அழைக்கும் நே பேற்றினைப் பெற்றார் இவர் காலம் கி.பி.6 ஆம் நூற்றாண்டு. இவர் எழுதிய நூல்கள் பதினோராம் திருமுறையுள் சேர்க்கப்பட்டுள்ளன அவற்றுள் ஒன்று தான் அற்புதத் திருவந்தாதி.
காரைக்காலம்மையார் பாடல் – 1
காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி சிவனைப் பற்றிய அந்தாநி வகையைச் சேர்ந்த நூலாகும். ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வருமாறு நூறு பாடல்கள் பாடுவது அந்தாதி எனப்படும். அந்த வகையில் அமைந்த இரு வெண்பாக்கள் உங்களுக்குப் பாடமாக அமைந்துள்ளன. அதிலிருந்து ஒருபாடல் கீழ்வருமாறு
இன்று நமக்கெனிதே மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை – என்றுமோர் மூவா மதியானை மூவே பூலகங்கள் ஆவானைக் காணும் அறிவு,
பாடலின் விளக்கம்
இன்று சிவபெருமானை அடி முதல் முடி வரை அளந்து அறிவது தயக்கு எனிதே ஆனால் அன்று திருமாலுக்கும் நான்முகனாகிய பிரமனுக்கும் அடி முடி கண்டறிய மிக அரிதாக இருந்தவன் அவன்.
என்றைக்கும் மூப்படையாத அறிவை உடையவன் அவன். மூவேழ் உலகங்களும் அவனாகவே உள்ளான். அத்தகைய பெசியவள் எளிய அடியவராகிய நம் அறிவு கண்டுவிடும் அளவுக்கு அவன் எளியவனாக உள்ளாள்:
அருஞ்சொற்பொருள் விளக்கம் :
மால் – திருமால், நான்முகன் -பிரமன் அளப்பரியன் – அடிமுடி அளத் தறிவதற்கு முடியாதவன்; ஆனாளை -அத்தகையவனான சிவளை; மூவர யாள் கிழடு தட்டிப் போகாத ஞாளி; மூவேழ் உலகங்கள் ஆவானை – மேலுலகம் ஏழு, மண்ணுலகம் எழு, பாதாள உலகம் ஏழு என மூன்று எழு உலகங்களும் அவனே ஆவாள்.
குறிப்புரை:
ஒருமுறை திருமாலும் பிரம்மனும் சிவளின் பாதம் முதல் தலை வரை முழு உருவத்தையும் அறிய விரும்பினர், திருமால் பன்றி உருவம் எடுத்து மண்ணைத் தோண்டி சிவனின் அடியைக் காண முயன்றார் பிரமன் அன்னப் பறவை உருவெடுத்துச் சிவனின் முடியைக் காண முயன்றார். இருவரும் அடிமுடி காண முடியாமல் தோற்றுப்போய்த் திரும்பினர் என்பது புராணம்.
அதனை இப்பாடல் உணர்த்துகின்றது. மும்மூர்த்திகளில் திருமாலும் பிரமனும் காண முடியாத தம் பேருருவத்தினைச் சிவபெருமான் தம் அடியவர்கள் எளிதில் காண அருளும் எளிய பண்பிளள் என்று அம்மையார் பாராட்டுகிறார்.
என்றைக்குமே மூப்படைந்து சிதைந்து போகாத மதி அவனுடையது எல்லா உலகங்களுமாக அவளே பரவி இருக்கிறாள் என்று சிவனின் பெருமைகளை எடுத்துப் பேசுகின்றார்.
காரைக்காலம்மையார் பாடல் – 2
‘இன்று நமக்கெளிதே’ எனத் தொடங்கும் அற்புதத் திருவந்தாதிப் பாடல் ‘அறிவு’ என்று முடிகிறது. அதனைத் தொடரும் அடுத்த பாடல் அதே சொல்லான ‘அறிவு’
என்றே தொடங்குகிறது. ஒரு பாட்டின் இறுதி அடுத்த பாட்டின் தொடக்கமாகத் தொடுத்துப் பாடுவதே அந்தாதி இலக்கிய மாகும். அடுத்த பாடல் இது:
அறிவானும் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளும் தானே அவள்.
பாடலின் விளக்கம்
அறிகின்ற மாணவனும் அவன்(சிவன்) தான். அறிவு கொளுத்துகின்ற ஆசானும் அவன் நாள் ஞானத்தை அறிகின்ற ஞாளியும் அவன்தான். அறிகின்ற ஞானத்தின் உட்பொருளாய் இருப்பவனும் அவன்தான்.
அதுமட்டுமல்லாது சூரியன், நிலம், வானம் என்னும் பரந்து விரிந்த பொருளாகவும் அவனே இருக்கின்றான்.
அருஞ்சொற்பொருள் விளக்கம்
அறிவாள் – அறிய முற்படும் மாணவன்; அறிவிப்பாள் – ஆசிரியன், அறிவாய் அறிகின்றாள் ஞானப்பொருளை அறியும் ஞானி; மெய்ப் பொருள் – ஞானத்தின் உண்மைப்பொருள்: விரிசுடர் – சூரியன்; பார் – உலகம், நிலம்,
குறிப்புரை
இப்பாடலில் அறிவு என்ற சொல் திரும்பத் திரும்ப வந்து அழகு சேர்க்கிறது. இப்படி ஒரு சொல்லே பலமுறை வருமாறு பாடுவது சொல்பின்வருநிலை அணி எனப்படும்
இறைவன் மாணவனாகவும் நல்லாசிரியனாகவும் ஞானியாகவும் ஞானத்தின் உட்பொருளாகவும் இன்னும் பூமி, ஆகாயம், சூரியன் என எல்லாமாகவும் இருக்கிறான் என்று சிறப்பித்துக் கூறுவது நயமாக உள்ளது.