அறுவகை பெயர்ச்சொற்கள் என்றால் என்ன?

கண்ணன்‌ பூண்டியில்‌ படிக்கிறான்‌. அவன்‌ நாள்தோறும்‌ நடந்தே வருகிறான்‌. அவன்‌ நண்பகல்‌ உணவு கொண்டு வருகிறான்‌. ஆடல்‌, பாடல்‌ ஆகிய இரண்டிலும்‌ அவன்‌ வல்லவன்‌. அவன்‌ முகம்‌ வட்டவடிவில்‌ அழகாக இருக்கும்‌.

 இப்பதியில்  பூண்டி, நண்பகல்‌, உணவு…கண்ணன்‌, அவன்‌, முகம்‌…  இன்னும்‌ என்னென்ன பெயர்ச்சொற்கள்‌ உள்ளன ? இன்னும்‌ உண்டு. ஆடல்‌, பாடல்‌, வட்டம்‌, அழகு ஆகியனவும்‌ பெயர்ச்சொற்களே. பெயர்ச்சொற்களை இலக்கண நூலார்‌ அறுவகைப்படுத்துவர்‌.

 1) பொருட்பெயர்‌

2)  இடப்பெயர்‌, 

3) காலப்பெயர்‌, 

4) சினைப்பெயர்‌,

5)  குணப்பெயர்‌, 

6) தொழிற்பெயர்‌   

பொருட்பெயர்‌ என்றால்‌  என்ன ?

பொருளைக்‌ குறிக்கும்‌ பெயர்‌ பொருட்பெயர்‌. இந்தப்‌ பொருட்பெயர்‌ இருவகைப்படும்‌. அவை : உயிருள்ள பொருள்‌, உயிரற்ற பொருள்‌. உயிருள்ள பொருள்கள்‌ 

தென்னை, செம்பருத்தி, வெள்ளாடு, ஒணான்‌… முதலியன உயிருள்ள பொருள்கள்‌ ;  உயிரற்ற பொருள்கள்‌- நாற்காலி, அடுப்பு, தட்டு, எண்ணெய்‌, மண்‌, நீர்‌, காற்று… முதலியன. 

இடப்பெயர்கள் என்றால் என்ன ?

 ஒரிடத்தைக்‌ குறிப்பது இடப்பெயரே. வீடு, தெரு, பள்ளி, கோவில்‌, மக்கள்‌ வாழிடம்‌, தோட்டம்‌, காடு, மலை என இடங்களைக்‌ குறிப்பனவெல்லாம்‌ இடப்பெயர்தான்‌. அன்பகம்‌, பெரியார்‌ தெரு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருநின்றவூர்‌ என்னைப்பெற்ற தாயார்‌ கோவில்‌, திருமழிசை, வாழைத்தோட்டம்‌, ஆர்க்காடு, கொல்லிமலை. எல்லாவற்றிற்கும்‌ கூறிவிட்டாயே. 

காலப் பெயர்கள் என்றால் என்ன ?

கண்‌ இமைக்கும்‌ நொடிப்பொழுது முதல்‌ ஊழிக்காலம்வரை எல்லாமே காலத்தைக்‌ குறிக்கும்‌ பெயர்கள்தாமே.

 சான்றாக நொடி, வினாடி, மணி, பொழுது, கிழமை, வாரம்‌, திங்கள்‌, ஆண்டு, பருவகாலம்‌ என எல்லாமே காலப்பெயர்களே.  இக்காலங்களுக்கு எடுத்துக்காட்டுகள்‌ சொல்‌. ஐந்துநொடி, முப்பது வினாடி, பன்னிரண்டு மணி, விடியற்பொழுது, திங்கள்கிழமை, ஒருவாரம்‌, தைத்திங்கள்‌, ஒராண்டு, மழைக்காலம்‌.

சினைப்பெயர்‌ என்றால்‌ என்ன ? 

 சினை என்பது ஒன்றன்‌ உறுப்பின்‌ பெயரைக்‌ குறிப்பது. மனித உறுப்புகள்‌, விலங்கு உறுப்புகள்‌, தாவரப்‌ பகுதிகள்‌, பொருள்களின்‌ பகுதிகள்‌ என முழுமையான ஒன்றின்‌ பகுதிகளைக்‌ குறிக்கும்‌ பெயர்கள்‌ சினைப்பெயர்களாம்‌. 

மனித உறுப்புகளின்‌ பெயர்களையும்‌, தாவரப்‌ பகுதிகளின்‌ பெயர்களையும்‌ சொல்‌. தலை, கண்‌, மூக்கு, செவி, நாக்கு, பல்‌, வயிறு, கை, கால்‌, விரல்‌, நகம்‌ முதலியனவும்‌, வேர்‌, தண்டு, கிளை, இலை, பூ, காய்‌, கனி, விதை முதலியனவும்‌ சினைப்பெயர்.,


குணப்பெயர் என்றால் என்ன ?


குணப்‌ பெயரைப்‌ பண்புப்பெயர்‌ எனவும்‌ கூறுவர்‌. குணப்பெயர்கள்‌ நிறம்‌, சுவை, அளவு, வடிவம்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ வழங்கப்படும்‌. 

பத்து மீட்டர்‌ துணி, ஐந்துபடி எண்ணெய்‌, பத்துக்கிலோ அரிசி; வட்டப்பலகை, சதுரவீடு, செவ்வகப்‌ புத்தகம்‌, முக்கோணக்‌ கூம்பு 


 தொழிற்பெயர்‌ என்றால்‌ என்ன ? 


செய்யும் தொழிலை குறிக்கும் பெயர்கள் தொழில் பெயர்கள் என அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக டாக்டர் நெசவாளி இன்ஜினியர் இதுபோல பல தொழில் பெயர்கள் கூறலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top