இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும்

 இடுக்குறிப்பெயர் :


“மரம் ” என பெயர் வைத்ததற்கு எந்த காரணமும் இல்லை. நம் முன்னோர்கள் எந்த காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு குறியீடாக இடும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 
மரம், மழை ,மண், காடு , மாடு , நாய் முதலிய பல …….. இடுகுறிப்பெயர்கள் தமிழ் மொழியில் உள்ளன..

காரணப்பெயர்:


நாற்காலி என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். நான்கு கால்கள் இருப்பதால் அதனை நாம் நாற்காலி என்று அழைக்கிறோம். இதே போல தான் ஒரு காரணம் கருதி பெயரிட்டு இருப்பதற்கு காரணம் பெயர் என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 
பறவை ,செங்கல் , கரும்பலகை , வளையல் , முக்காலி முதலிய பல…. காரணப் பெயர்கள் தமிழ் மொழியில் உள்ளன.

இடுகுறிப் பொதுப்பெயர்:

மலை , காடு, மாடு  என்ற வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம். மலை என்பது அனைத்து மலைகளுக்கும் பொதுவான பெயர்; இதேபோல காடு என்பதும் அனைத்து காடுகளுக்கும் பொதுவான பெயர்; மாடு என்பதும் அனைத்து மாடுகளுக்கும் பொதுவான பெயர். எனவே இவ்வாறு பொதுவாக வரும் அனைத்து இடுகுறிப்பெயர் களுக்கும் இடுகுறிப் பொதுப்பெயர் என்று அழைக்கப்படுகிறது.

இடுக்குறி சிறப்புப் பெயர் :

மா , பலா ,வாழை ,தென்னை முதலிய மரவகை அனைத்திற்கும் இடுக்குறிப்பெயராக பொதுவாக வரும். ‘தென்னை ‘ என்னும் சொல் ஒரு காரணமும் இன்றி , இடுக்குறிப்பெயராக (தென்னைமரம் ) சிறப்பாய் வருவதனால் இடுக்குறி சிறப்புப் பெயராயிற்று. 

காரணப் பொதுப்பெயர்  :

பறவை என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். பறப்பதால் பறவை  எனக் காரணம் கருதி வழங்கும் பெயராயிற்று .காகம் , குயில் ,புறா ,கிளி ஆகிய அனைத்தையும்  ‘ பறவை ‘ என்னும் பொதுச்சொல்லால் அழைக்கிறோம் .

1 thought on “இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top