எழுதுதல்‌ திறன்‌ – தமிழ் இலக்கணம்

  



எழுதுதல்‌ திறன்‌ :

 1)  கொடுக்கப்பட்டுள்ள பாடலைப்‌ படித்து வினாக்களுக்கு விடையளிக்க. (மாதிரி)


நீதிநெறி வழுவாமல்‌ நிற்க வேண்டும்‌

நெஞ்சார உண்மைதனைப்‌ பேச வேண்டும்‌

ஒதிமறை உயர்ந்தவரை மதிக்க வேண்டும்‌

ஒப்பற்ற ஆசான்சொல்‌ கேட்க வேண்டும்‌

ஆதியிலே வாழ்ந்தமுறை நினைக்க வேண்டும்‌

ஆபத்தில்‌ உற்றவர்க்கு உதவ வேண்டும்‌

சோதிவடி வானவனைச்‌ சொல்ல வேண்டும்‌

சுகம்பெறவே வாயார வாழ்த்த வேண்டும்‌.


வினாக்கள்‌ :


1. எப்படி நிற்கவேண்டும்‌ ?

2. எவ்வாறு உண்மை பேசவேண்டும்‌ ?

3. யாரை மதிக்கவேண்டும்‌ ?

4. யாருடைய சொல்லைக்‌ கேட்கவேண்டும்‌ ?

5. பாடலுக்கேற்ற தலைப்புத்‌ தருக.


விடைகள்‌ :


 1. நீதிநெறி வழுவாமல்‌ நிற்கவேண்டும்‌

2. மனமறிய உண்மை பேசவேண்டும்‌.

3. கல்வி, கேள்விகளில்‌ சிறந்த சான்றோரை மதிக்கவேண்டும்‌.

4. ஒப்பற்ற ஆசான்‌ சொல்‌ கேட்கவேண்டும்‌.

5. வாழும்‌ முறை – இப்பாடலுக்கேற்ற தலைப்பு.



2. கொடுக்கப்பட்டுள்ள பாடலைப்‌ படித்து வினாக்களுக்கு விடையளிக்க.


சாதிகள்‌ இல்லையடி பாப்பா – குலத்‌

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்‌ பாவம்‌

நீதி உயர்ந்தமதி கல்வி – அன்பு

நிறைய உடையவர்கள்‌ மேலோர்‌

உயிர்‌ களிடத்தில்‌ அன்பு வேணும்‌ – தெய்வம்‌

உண்மையென்று தானறிதல்‌ வேணும்‌

வயிரமுடைய நெஞ்சு வேணும்‌ – இது

வாழும்‌ முறைமையடி பாப்பா. – பாரதியார்‌


வினாக்கள்‌ :


 1. எது பாவம்‌?

2. மேலோர்‌ எத்தன்மையர்‌ ?

3. யாரிடத்தில்‌ அன்பு செலுத்துதல்‌ வேண்டும்‌ ?

4. வாழும்‌ முறை யாது?

5. இப்பாடலுக்கேற்ற தலைப்புத்‌ தருக.


விடைகள் :


1 . உயர்ந்த ஜாதி , தாழ்ந்த ஜாதி என்று கூறுவது 

2 . அன்பு நிறைய உடையவர்கள்

3. உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும்.

4. தெய்வம் உண்மை என்று நம்ப வேண்டும், வயிரம் உள்ள நெஞ்சு வேண்டும்

5. சமத்துவ மனப்பான்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top