குற்றியலுகரப் புணர்ச்சி
சொற்புணர்ச்சி யில் நிலை மொழி இறுதி எழுத்தாகவும் வருமொழி முதல் எழுத்தாகும் எழுத்துக்கள் சந்திக்கும் முறையை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
வ.எண் | ஈற்றெழுத்து முதலெழுத்து | எ.கா | சந்திப்பு |
---|---|---|---|
உயிர் + உயிர் | மலை + அருவி | ஐ +அ | |
2 | மெய் + உயிர் | தமிழ் + அன்னை | ழ் +அ |
3 | உயிர் + மெய் | தென்னை + மரம் | ஐ +ம் |
4 | மெய் + மெய் | தேன் +மழை | ன் +ம் |
சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி :
இலக்கண வகையால் சொற்கள் நான்கு வகைப்படும். இவற்றுள் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையையும் சார்ந்து வருகின்றன. இவ்விரு சொற்களும் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வந்தாலும் அவற்றின் புணர்ச்சி எழுத்துக்களின் புணர்ச்சி ஆகும்
வ.எண் | நிலைமொழி வருமொழி | எ.கா | தொடர்வகை |
---|---|---|---|
வ.எண்1 | நிலைமொழி வருமொழிபெயர்+ பெயர் | எ.காகனி +சாறு | தொடர்வகைபெயர் பெயர்த்தொடர் |
வ.எண்2 | நிலைமொழி வருமொழிபெயர்+ வினை | எ.காதமிழ்+படி | தொடர்வகைபெயர் வினைத்தொடர் |
வ.எண்3 | நிலைமொழி வருமொழிவினை+ வினை | எ.காநடந்து +செல் | தொடர்வகைவினை வினைத்தொடர் |
வ.எண்4 | நிலைமொழி வருமொழிவினை+பெயர் | எ.காபடித்த +நூல் | தொடர்வகைவினை பெயர்த்தொடர் |
புணர்ச்சி என்பது எழுத்துகளின் சந்திப்பாகவும் சொற்களின் சந்திப்பாகவும் அமைகிறது. எனவே, எழுத்துக்களும் சொற்களும் ஒலிக்கூறுகளாகவும் பொருள் கூறுகளாகவும் சந்திக்கும் நிகழ்வே புணர்ச்சி ஆகும்.
குற்றியலுகரப் புணர்ச்சி :
- சார்பெழுத்துகளுள் ஆயுதம் சொல்லின் முதலிலோ அல்லது இறுதியிலோ வராது.
- குற்றியலுகரமும் குற்றியலிகரமும் சொல்லின் முதலில் வாராது.
- ஆயினும் குற்றியலுகரத்தின் ஆறு வகைகளும் சொல்லின் இறுதியில் வருகின்றன.
- குற்றியலுகர இயற்கையுடன் வரும் நிலை மொழி குற்றியலுகர ஈறு அல்லது குற்றியலுகர நிலை மொழி என அழைக்கப்படுகிறது.
குற்றியலுகர புணர்ச்சி | குற்றியலுகர வகை |
---|---|
வீடு +இல்லை =வீடில்லை | நெடில் தொடர் குற்றியலுகரம் |
முரடு காளை = முரட்டுக்காளை | உயிர் தொடர் குற்றியலுகரம் |
அச்சு +பலகை = அச்சுப் பலகை | வன்தொடர்க் குற்றியலுகரம் |
பஞ்சு +பொதி = பஞ்சுப்பொதி | மென்தொடர்க் குற்றியலுகரம் |
மார்பு +கூடு = மார்புக்கூடு | இடைத்தொடர் குற்றியலுகரம் |
எக்கு + கம்பி = எக்குக்கம்பி | ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் |