என்னைப் பற்றி – ABOUT US
என் பெயர் பருவதமலை பார்த்திபன். நான் பருவதமலை அடிவாரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கிறேன்.
நான் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் படித்துக் கொண்டு வருகிறேன். எனக்கு பல்வேறு விஷயங்களில் ஆர்வம் அதிகம்.
உதாரணமாக நன்றாக படம் வரைவேன், அச்சு அசலாக ஒரு புகைப்படத்தை அப்படியே வரைவதில் நான் கைத்தேர்ந்தவன்.
நன்றாக கவிதை எழுதுவேன்; சிறுகதை மற்றும் நகைச்சுவை கதைகளை எழுதுவேன்; அதேபோல படிப்பதில் மிகவும் படுசுட்டி.
பள்ளியில் அனைத்து முதன்மை பாடங்களிலும் அதிக மதிப்பெண்களை எடுத்து முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவேன்.
இது மட்டுமில்லாமல் இப்பொழுது நான் ஒரு வெப்சைட் டிசைனராக பணியாற்றி வருகிறேன்; என்னிடம் பல வலைதளங்கள் உள்ளன.
ஒவ்வொரு வலைதளத்திலும் மக்களுக்கு பயன்படும் படி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறேன்.
யூடியூப் சேனல்கள் பலவற்றை தொடங்கியுள்ளேன். அதில் மக்களுக்கு பல்வேறு கருத்துகளை சொல்லும் விதமாக வீடியோக்கள் அதிகமாக பதிவிட்டு வருகிறேன்.
எனது யூடியூப் சேனலை பார்வையிட கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து பார்க்கவும். உங்களுக்கு எங்கள் வீடியோக்கள் பிடித்திருந்தால் Subscribe செய்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள்! 🥰

என் இணையதளத்தை படித்ததற்கு நன்றி! எனது இணையதள சேவை உங்களுக்காக தொடரும்!