டிசம்பர் 21ஆம் தேதி ஷாருக்கான் நடிப்பில் ‘Dungi’ திரைப்படம் ஹிந்தியில் மட்டும் வெளியாகிறது. ‘Dungi‘ திரைப்படத்துக்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.
அதேபோல டிசம்பர் 22ஆம் தேதி பிரசாந்த் நில் இயக்கத்தில் பிரபாஸ், பிரிதிவிராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்த ‘Salaar’ (சலார்) திரைப்படம் வெளியாக உள்ளது.
சலார் திரைப்படமானது தமிழ், ஹிந்தி கன்னடம் தெலுங்கு மலையாளம் என முக்கியமான ஐந்து மொழிகளில் உலகம் எங்கும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
ஆனால் ஷாருக்கான் நடித்த ‘Dungi’ இந்தி மொழியில் மட்டுமே ரிலீஸ் இங்கிலீஷ் சப்டைட்டிலுடன் வெளியாகும் ‘Dungi’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் மற்றும் மற்ற மொழி ரசிகர்கள் ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே காண முடியும் என்கிற சூழலில் ‘Dungi’ திரைப்படம் உள்ளது.
இருந்தாலும் ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பார்த்தான் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்தி மொழியில் தான் அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளது என்கிற நிலையில் தற்போது இந்த ‘Dungi’ திரைப்படமும் ஹிந்தி மக்களை முன்வைத்து அவர்களுக்காகவே பாலிவுட்டில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
கடுமையான இந்த போட்டியில் எந்த படம் ஜெயிக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
ஷாருக்கான் நடித்த ஜப்பான் பத்தான் உள்ளிட்ட படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது இந்த நிலையில் இந்த ‘Dungi’ திரைப்படமும் ஆயிரம் கோடியை தொட்டுவிட்டால் ஒரு வருடத்தில் மூன்று ஆயிரம் கோடி படங்களை கொடுத்த நடிகர் என்கிற நிலையில் உலகில் முன்னணி நட்சத்திரமாக ஷாருக்கான் இருப்பார்.