திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாம் பருவ செமஸ்டர் ஆன்லைன் தேர்வுகளுக்கான விடைகள்-வினாக்களுடன் வழங்குகின்றோம்.. மாணவர்கள் இதை படித்து பயன்பெற வேண்டுகிறோம்..
NOVEMBER- DECEMBER 2021
விடை :
வ.எண் | காண்டம் | காதைகள் |
---|---|---|
1. | புகார் காண்டம் | 10 காதைகள் |
2. | மதுரை காண்டம் | 13 காதைகள் |
3. | வஞ்சி காண்டம் | 7 காதைகள் |
விடை :
* ” ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. ” என்ற பழமொழிக்கேற்ப நான்கு அடிகள் கொண்ட பா வடிவில் நாலடியார் விளங்குகிறது.
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ‘தொகை நூல்’ நாலடியார் ஆகும்.
* இதனால் இது ‘நாலடி நானூறு’ எனவும் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’ என்ற பெயரும் உண்டு.
* பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதீ நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.
விடை :
* நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
* 104 பாடல்கள் வெண்பா வடிவில் உள்ளன.
* பாடல்களில் கூறப்பெறும் பொருள்களின் அளவால் நான்மணிக்கடிகை பெயர் பெற்றுள்ளது.
* கடிகை என்பது துண்டம் என்று பொருள்படும். எனவே, நான்மணிக் கடிகை என்னும் தொடர் நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தருவதாகும்.
(பகுதி -ஆ) (5 ×5 = 25 மதிப்பெண்கள்)
பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடை தருக.
11. (அ) மழையின் சிறப்பினை வள்ளுவர் வழி நின்று
விளக்குக.
விடை :
* மழை முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்தில் வானோர்க்காக
நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறாது.
* நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால்,மழை இல்லாமல் ஓழுக்கமும் நிலைபெறாது.
* மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்தில் பிறருக்காகச்
செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டும்
நிலையாமற் போய்விடும்.
* மேகமானது கடல்நீரை முகந்து சென்று மீண்டும் மழையாகப் பெய்யவிட்டால், அப்பெரிய கடலும் தன் அளவில் குறைந்து போகும்.
* வானிலிருந்து மழைத்துளி வீழ்வது நின்றுவிட்டால், உலகில் பசும்புல்லின்
தலையைக் காண்பதுகூட அரிதாகிவிடும்.
*காலத்தில் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை.
அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்.
* மழை என்னும் வருவாயின் வளம் குறைந்தால், பயிர் செய்யும் உழவரும்
ஏரொல் உழுதலைச் செய்யமாட்டார்கள்.
* மழை காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற இப்
பரந்த உலகில் பசி நிலைத்து நின்று உயிர்களை வாட்டும்.
* உண்பவர்களுக்குத் தகுந்த பொருள்களை விளைவித்துத் தந்து, அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்.
*மழை பெய்வதனாலேயே உலக உயிர்கள் வாழ்கின்றன. ஆதலால் மழையே உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
(அல்லது)
ஆ) நட்பின் மேன்மையாக வள்ளுவர் கூறுவனவற்றை விவரி.
விடை :
( choice )
12. அ) கண்ணகியை அடைக்கலப்படுத்திய திறத்தை
விவரிக்க.
விடை :
( choice )
(அல்லது)
ஆ) ஆபுத்திரனின் பிறப்பு குறித்து விளக்க.
விடை :
வளர்த்து ஆபுத்திரன் (- பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவனாக்கினான்.
இல்லத்தில் செய்த வேள்வி ஒன்றில் பலியிட இருந்த பசு ஒன்றைக் காப்பாற்ற இரவோடு இரவாக அதனைக் கவர்ந்து சென்றான். அதனைக்
கண்டுகொண்ட மறைகாப்பாளர் முரடர்களுடன் சென்று வழியில் மடக்கி , அடித்து “நீ அந்தணன் இல்லை. புலைமகன்” என்று தட்டி. அவனிடமிருந்த
பசுவைக் கைப்பற்றிக்கொண்டனர். அப்பசு தன்னைக் கைப்பற்றிய அந்தணர் உவாத்தியைக் (ஆசிரியர் தலைவனைக்) கொம்பால் குத்தித்
தள்ளிவிட்டு ஓடிவிட்டது.
ஆபுத்திரன் அறிவுரை:
ஆபுத்திரன் அந்தணர்களுக்கு அறிவுரை கூறினான். பசும்புல் மேய்ந்து பால் தரும் பசு செய்த கொடுமை என்ன என வினவினான். “நீ ஆ புத்திரன் தானே! இருமால் தந்த மறைநூல் அறியாதவன்” எனச் சொல்லி ஆபுத்திரனை இகழ்ந்தனர்.
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை :
ஆபுத்திரன் அந்தண முனிவர் சிலரது பிறப்பைச் சுட்டிக் காட்டினான். அசலன் ஆவின் மகன். சிருங்கி மானின் மகன். விரிஞ்சி புலியின் மகன் கேசகம்பளன் நரியின்மகன். நான்மறை போற்றும் இவர்கள் பிறப்பால் இழிந்தவர் அல்லர் என விளக்கினான். அங்கிருந்த அந்தணர்களில் ஒருவன் ஆபுத்திரன் சாலி பெற்ற பிள்ளை என்னும் வரலாற்றை எடுத்துரைத்தான்.
13. அ) ஏமாங்கத நாட்டு வளத்தினை விவரிக்க.
விடை :
( choice )
(அல்லது)
ஆ) மந்தரையின் சூழ்ச்சி திறத்தை விளக்குக.
விடை :
விடை :
பெரியபுராணம் பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறையாக விளங்குகிறது. இந்த காப்பியத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் ‘ திருத்தொண்டர் புராணம்” என்பதே ஆகும்.இதன் சிறப்பு நோக்கி பெரியபுராணம் என வழங்கப்பட்டுள்ளது.
சுந்தரர் பாடிய ‘திருத்தொண்டத்தொகை’ என்னும் நூலை அடிப்படையாக கொண்டு சிவனடியார்களின் பெருமைகளை விளக்கிக் கூறுவது பெரியபுராணம். பெரியபுராணத்தில் 2 காண்டங்கள் 13 சருக்கங்களும் உள்ளன.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தல்லைக்குச் சென்றவர்,அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து அதற்கு உரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.
காப்பியப் பகுப்பு :
பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையம், இரண்டாம் காண்டத்தில் எட்டு சரக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத்
தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.
காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்று சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாக கயிலாயத்தில் முடிகிறது.
(அல்லது)
ஆ) விடம் நீக்கிய விதத்தை சீராபுராணம் வழிநின்று
விளக்குக.
( choice )
15. அ) அறநூல்களுள் திருக்குறள் குறித்து குறிப்பு
வரைக.
விடை :
( choice )
(அல்லது)
ஆ) ஆசாரக்கோவை குறித்து விளக்குக.
விடை :
ஆசாரம்–ஒழுக்கம், கோவை–அடுக்கிக் கூறுதல். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.
பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
இந் நூலின் ஆசிரியரையும், இவர்தம் தந்தையார் பெயரையும், இவர் வாழ்ந்த ஊரையும், இவரது மதச் சார்பையும் சிறப்புப் பாயிரச் செய்யுள் நமக்கு அறிவிக்கின்றது. இவரது முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பதாகும்.
முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது இவரது தந்தையார் பெயர் போலும்! கயத்தூரின் ஒரு பகுதியாகிய பெருவாயிலில் வாழ்ந்தவர் என்றோ, கயத்தூரை அடுத்த பெருவாயிலில் வாழ்ந்தவர் என்றோ எண்ணவும் இடமுண்டு. இவர் வாழ்ந்த ஊர் கயத்தூர். இவ் ஊரைத் ‘திரு வாயில் ஆய திறல் வண கயத்தூர்’ என்று பாயிரப் பாடல் சிறப்பிக்கின்றது.
இந்நூலில் சிறப்புப் பாயிரம் நீங்கலாக 100 செய்யுட்கள் உள்ளன. வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா, என்பன இதில் உள்ளன.
(பகுதி- இ) (3×10 = 30 மதிப்பெண்கள்)
பின்வரும் வினாக்களுள் மூன்றனுக்கு கட்டுரை வடிவில் விடையளிக்க.
16. இல்லக்கிழத்தியின் மாண்பினை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
விடை :
முன்னுரை :
இந்த அதிகாரத்தின் வாயிலாக இல்வாழ்க்கைக்கு தேவையான மனைவி கடைபிடிக்க வேண்டிய அத்தியாவசியமான ஒழுக்க நெறிமுறைகளை திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.
மனைவி கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் :
* இல்வாழ்வுக்கு சிறந்த பண்பு உடையவளாகி தன்னை மணந்தவன் வளமைக்கு ஏற்றது போல நடப்பவளே சிறந்த வாழ்க்கை துணைவி ஆவாள்.
* இல்லற வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம்
இல்லையானால், அந்த இல்லற வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும்
அது நல்ல வாழ்வு ஆகாது.
* மனைவி சிறந்தவளாக இருந்தால் ஒருவனுக்கு எல்லாம் கிடைத்ததாகப்
பொருள். அதேசமயம், மனைவி சரியில்லாதவளாக இருந்தால் அவனுக்கு
எந்தச் சிறப்பு கிடைத்து என்ன பயன்?
*கற்பு என்னும் மன உறுதி மனைவியிடம் இருந்தால், அந்தப் பெண்ணைவிடப் பெருமைமிக்க ஒன்றை உலகில் காண முடியாது.
*காலை எழுந்ததும் தெய்வத்தைத் தொழுவதை விட தனது கணவனை
தொழுது வாழும் பெண்கள், பெய் என்று சொன்னால் சட்டென மழை
பெய்யும்.
*தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணி, தகுதியமைந்த
புகழையும் காத்துச் சோர்வு அடையாமல் இருப்பவளே பெண்.
*சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர் நிறை என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும்.
* பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள்.
* புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி அமையாதவர்களுக்கு, இகழ்ச்சியாய் பேசுபவர் முன்னே தலை நிமிர்ந்து ஏறு போல் நடக்கும் பெருமித நடை இருக்காது.
* மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம். நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல் அதற்கு நல்ல அணிகலன் ஆகும்.
முடிவுரை :
ஒரு நல்ல இல்வாழ்க்கைக்கு வாழ்க்கை துணைவி கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறி முறைகளையும் சிறப்பான வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளையும் இந்த அதிகாரத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
17. அடைக்கலக்காதைக் கருத்தினை சிலப்பதிகாரம் வழிநின்று தொகுத்துரைக்க.
விடை : ( choice )
18. சீவகசிந்தாமணி காப்பியம் குறித்து கட்டுரைக்க.
விடை :
ஆசிரியர் குறிப்பு :
திருத்தக்கதேவர் சோழர் அரச மரபினர் ஆவார். இளமையிலேயே பல கலைகளையும் கற்று புலமை நிரம்பியவர் இவர்.
நூல் குறிப்பு :
19. சீராபுராணம் வழிநின்று விடமீட்டப்படலம் குறித்த கருத்துக்களை கட்டுரைக்க.
விடை :
முன்னுரை :
நபிகள் நாயகத்தின் உண்மை சீடன் அபுபக்கர் ஆவார். அபுபக்கர் பாம்பு தீண்டியதில் இருந்து நபிகள் நாயகம் எவ்வாறு உயிர்ப்பிக்கிறார் என்பது இக்கதையின் வாயிலாக அறியலாம்.
குகை ஒன்றில் ஒளிதல் :
அரேபியர்கள் போர்தொடுத்து நபிகள் நாயகத்தை துரத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பயந்து நபிகள் நாயகமும் அவரது சீடன் அபூபக்கர் சேர்ந்து குகை ஒன்றில் தஞ்சம் அடைகிறார்கள்.
நபிகள் நாயகம் உறங்குதல் :
அந்த குகையில் அபூபக்கர் மடிமீது சாய்ந்து நபிகள் நாயகம் களைப்பு மிகுதியால் உறங்குகிறார். அபுபக்கரும் நபிகள் நாயகம் படுத்துறங்க தான் புண்ணியம் செய்து இருக்கிறேன் என்ற பெருமையுடன் நபிகள் நாயகத்தை தாங்கி இருக்கிறார்.
புற்றில் இருந்து பாம்பு வெளியே வருதல் :
அவ்விடத்திலிருந்த புற்று ஒன்றிலிருந்து பாம்பு வெளியே வருகிறது. தன் பிறவி பயனாக நபிகள் நாயகத்தை வணங்கும் பாக்கியம் தனக்கு கிடைத்திருப்பதாக நபிகள் ஆசிர்வாதம் பெற பாம்பு வெளியே வருகிறது.
அபுபக்கர் தடுத்தல் :
பாம்பு வெளியே வந்தால் நபிகள் நாயகத்தை தீண்டி விடுமோ என அபுபக்கர் தன் சட்டையைக் கிழித்து புற்றின் ஒவ்வொரு பொந்தையும் அடைந்து கொண்டே வந்தார். ஆனாலும் பாம்பு வெளியே வந்து கொண்டுதான் இருந்தது.
இறுதியில் அபுபக்கர் தன் கால் விரலால் புற்றினை அடைத்தார்.
பாம்பு அபூபக்கரை தீண்டுதல் :
கோபம் கொண்ட பாம்பு தன் கொடிய விஷமுள்ள பற்களால் அபூபக்கரை தீண்டியது. பாம்பு தீண்டிய போதிலும் அபூபக்கர் நபிகள் நாயகத்திடம் சத்தம் போடாமல் அவர் தூங்க உதவி செய்தார்.
அபுபக்கர் விஷம் ஏறி சோர்வாக சாய்தல் :
பாம்பு தீண்டிய தீண்டலால் விஷம் தலைக்கு ஏறி அபூபக்கர் சோர்வாக அமர்ந்திருந்தார். துயில் எழுந்த முகமது நபிகள் அபுபக்கர் நிலைமையை எண்ணி காரணம் வினாவினார். அருகில் இருந்த பாம்பை பார்த்த நபிகள் புரிந்து கொண்டார்.
பாம்பு நபிகள் நாயகத்திடம் தங்களை பார்க்க இவர் விடாததால் தான் இவரை தீண்டினேன் என்று மன்னிப்பு கேட்டது.
நபிகள் அபுபக்கரை உயிர்ப்பித்தல் :
பாம்பு செய்த தவறை மன்னித்து விட்டு தன்னுயிர் சீடன் அபுபக்கர் உடலில் பரவி இருக்கும் விஷத்தை முறிக்க தன் கையால் எச்சிலைத் தடவி பாம்பு தீண்டிய இடத்தில் தேய்த்தார்.
அபுபக்கர் விஷம் நீங்கி மீண்டெழுந்தார்.
முடிவுரை :
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல் சிறாப்புராணம் ஆகும். தன் உண்மை சீடன் அபுபக்கர் பாம்பு தீண்டி துன்பப்பட்டு இருக்கும் சமயத்தில் காப்பாற்றினார் நபிகள் நாயகம் என்பதை கதை வாயிலாக அறியலாம்.
20. தன்விபரக் குறிப்பு வரைக.
விடை :
( choice )