1. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’
(A) வெளிப்படைத் தன்மை
(B) வெளிப்படையற்ற தன்மை
(C) மறைத்து வைத்தல்
(D) தன்னலமின்மை
(E) விடை தெரியவில்லை
[விடை : (A) ]
2. ‘சிலை மேல் எழுத்து போல’ இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
(A) தெளிவாகத் தெரியாது
(B) தெளிவாகத் தெரியும்
(C) நிலைத்து நிற்கும்
(D) நிலைத்து நிற்காது
(E) விடை தெரியவில்லை
[விடை : (C) ]
3. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
(A) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
B) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
(C) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
(D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
(E) விடை தெரியவில்லை
[விடை : (C) ]
4. மாலதி மாலையைத் தொடுத்தாள். இது எவ்வகை வாக்கியம்?
(A) செய் வினை
(B) செயப்பாட்டு வினை
(C) தன் வினை
(D) பிற வினை
(E) விடை தெரியவில்லை
[விடை : (A) ]
5. இலக்கணக் குறிப்பறிதல். சாலச் சிறந்தது – தொடரின் வகையை அறிக.
(A) இடைச்சொல் தொடர்
(B) விளித் தொடர்
(D) உரிச்சொல் தொடர்
(C) எழுவாய்த் தொடர்
(E) விடை தெரியவில்லை
6. பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
1. சினைப்பெயர் – (a) மல்லிகை
2. பண்புப்பெயர் – (b) பள்ளி
3. இடப்பெயர் – (c) கிளை
4. பொருள்பெயர் – (d) இனிமை
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 3 4 2 1
(C) 4 3 2 1
(D) 2 3 1 4
(E) விடை தெரியவில்லை
7.பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் செம்மை
(b) சினைப்பெயர் கண்
(c) பண்புப்பெயர் ஆண்டு
(d) தொழிற்பெயர் ஆடுதல்
(A) (a), (c)
(B) (a), (b)
(C) (c), (d)
(D) (a), (d)
(E) விடை தெரியவில்லை